ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

Written By:

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், அதிக சிறப்பம்சங்களுடன ் புதிய வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

கடந்த மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோன்று, ஃபோக்ஸ்வேகன் அமியோ காரும் இப்போது அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

இதுவரை விற்பனையில் இருந்த அமியோ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 76 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைவிட இந்த புதிய 1.0 லிட்டர் எஞ்சினின் பவர் வெளிப்படுத்தும் 1 பிஎஸ் குறைவாக இருக்கிறது. அதேபோன்று, 15 என்எம் டார்க் திறனும் குறைவு.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும். காம்பேக்ட் செடான் ரக கார் மார்க்கெட்டில் மிகவும் குறைவான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மாடலாக மாறிவிட்டது அமியோ. எஞ்சின் மட்டும்தான் மாற்றப்பட்டு இருக்கிறது. மற்றபடி, வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. பழைய வேரியண்ட்டுகளும், வசதிகளும் அப்படியே தொடர்கிறது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் பெட்ரோல் மாடல் டிரென்ட்லைன், கம்போர்ட்லைன், கம்போர்ட்லைன் ப்ளஸ், ஹைலைன் மற்றும் ஹைலைன் ப்ளஸ் ஆகிய 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

விலையில் மாற்றம் இல்லை. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.7.45 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் விற்பனை செய்யப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கார்கள் டீலர்களில் இருப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் விரைவில் ஷோரூம்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் பெட்ரோல் மாடல் தவிர்த்து, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலிலும் கிடைக்கிறது. இந்த எஞ்சின் 109 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

மேலும், அண்மையில் போலோ காரில் அறிமுகம் செய்யப்ப்பட்ட பேஸ் என்ற புதிய வேரியண்ட் இப்போது ஃபோக்ஸ்வேகன் அமியோ காரிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பேஸ் என்ற இந்த புதிய வேரியண்ட் நடுத்தர விலையிலான கம்போர்ட்லைன் ப்ளஸ் வேரியண்ட்டில் கூடுதல் அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

ஃபாக்ஸ் கார்பன் ஃபைபர் ஸ்பாய்லர், கருப்பு வண்ண வெளிப்புற ரியர் வியூ மிரர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அலாய் வீல்களுடன் இந்த வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.6.10 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

English summary
Volkswagen Ameo Gets 1.0-litre Petrol Engine.
Story first published: Saturday, April 14, 2018, 10:26 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark