ஃபோக்ஸ்வேகன் ஐடி விஸியான் கான்செப்ட் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

டிரைவரில்லாமல் இயங்கும் புதிய மின்சார காரின் கான்செப்ட் மாடலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

By Saravana Rajan

ஸ்டீயரிங் வீல் இல்லாத புதிய கார் மாடலின் டீசரை ஃபோக்ஸ்வேகன் குழுமம் வெளியிட்டு இருக்கிறது. ஐ.டி. விஸியான் கான்செப்ட் என்ற பெயரில் இந்த கார் மாடல் வர இருக்கிறது.

 ஸ்டீயரிங் வீல் இல்லாத புதிய கார்... டீசரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மின்சார மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 ஸ்டீயரிங் வீல் இல்லாத புதிய கார்... டீசரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

ஐ.டி வரிசையில் வெளியிடப்பட்ட கார் மாடல்களின் வரிசையில் இது செடான் கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் 5.11 மீட்டர் நீளமுடையதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

 ஸ்டீயரிங் வீல் இல்லாத புதிய கார்... டீசரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

ஃபோக்ஸ்வேகன் ஃபேட்டன் காருக்கு மாற்றாக இந்த கார் மின்சார கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காருக்கு எதிராக இந்த புதிய கார் மாடல் நிலைநிறுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஸ்டீயரிங் வீல் இல்லாத புதிய கார்... டீசரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

வரும் 2025ம் ஆண்டிற்குள் 20 புதிய மின்சார கார் மாடல்களை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், இந்த புதிய ஐடி விஸியான் கான்செப்ட் மாடலும் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பபட்டு, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
 ஸ்டீயரிங் வீல் இல்லாத புதிய கார்... டீசரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

இந்த காரின் மிக முக்கிய அம்சம், ஸ்டீயரிங் வீல் மற்றும் பெடல்கள் இல்லாமல் வருவதுதான். டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பத்துடன் இந்த புதிய கார் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஸ்டீயரிங் வீல் இல்லாத புதிய கார்... டீசரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

லெவல் -5 என்ற தானியங்கி நிலையை எட்டிய கார் மாடலாக இதனை ஃபோக்ஸ்வேகன் சந்தைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு சாதனங்களை இயக்க முடியும்.

 ஸ்டீயரிங் வீல் இல்லாத புதிய கார்... டீசரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

இந்த காரில் 111kWh திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 665 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்ட மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
German carmaker Volkswagen has teased its upcoming I.D. Vizzion concept in a series of sketches ahead of its official debut at the 2018 Geneva Motor Show next month.
Story first published: Wednesday, February 21, 2018, 12:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X