ஃபோக்ஸ்வேகன் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமாகிறது!!

சக்திவாய்ந்த புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை இந்தியாவில் விற்பனையில் உள்ள தனது கார் மாடல்களில் அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த புதிய பெட்ரோல் எஞ்சினை இந்தியாவிலே

By Saravana Rajan

சக்திவாய்ந்த புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை இந்தியாவில் விற்பனையில் உள்ள தனது கார் மாடல்களில் அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த புதிய பெட்ரோல் எஞ்சினை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்திய கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்காக புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது ஃபோக்ஸ்வேகன் குழுமம். தனது அங்கமாக செயல்படும் ஸ்கோடா கார் நிறுவனத்தின் வசம் இந்த திட்டம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ரூ.8.000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் குழுமம்.

ஃபோக்ஸ்வேகன் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும்புதிய கார்களில் தனது 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சினை பொருத்துவதற்கு ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் ஸ்கோடா கார்களில் இந்த 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமாகிறது!

வெளிநாடுகளில் இந்த எஞ்சின் 94 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஒரு மாடலிலும், 113 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் மற்றொரு மாடலிலும் என இரண்டு விதமான ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஞ்சினை இந்தியாவில் அறிமுகம் செய்வதோடு, உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஸ்கோடா ஆக்டேவியா காரில் பயன்படுத்தும் EA211 எஞ்சின் வரிசையில் இந்த 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இலகு எடை கொண்ட கலப்பு உலோகம் மற்றும் அலுமினிய உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த புதிய எஞ்சின் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும், அதேசமயத்தில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் இருக்கும். எனவே, இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று ஃபோக்ஸ்வேகன் நம்பிக்கை தெரிவிக்ிகறது.

ஃபோக்ஸ்வேகன் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. இந்த டீசல் எஞ்சின்களுடன் புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சினும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமாகிறது!

டர்போசார்ஜர் இல்லாமல் இயங்கும் 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின் மற்றும் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களையும் ஃபோக்ஸ்வேகன் வழங்குகிறது. ஸ்கோடா ஆக்டேவியா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமாகிறது!

மாருதி பலேனோ ஆர்எஸ் காரில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதே பாணியில் தற்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமாகிறது!

உலக அளவில் மாசு உமிழ்வு விதிகள் கெடுபிடியாகி வருகின்றன. எனவே, டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் இந்த பெட்ரோல் எஞ்சின்கள் குறைவான மாசு உமிழ்வு திறன் கொண்டதாக இருக்கின்றன. அதேசமயத்தில், அதிக மைலேஜ் மற்றும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகின்றன. இதுவே இந்த எஞ்சின்களை அறிமுகம் செய்வதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

Source:CarAndBike

Most Read Articles
English summary
Volkswagen is planning to make new 1-litre TSI Engine In India Soon
Story first published: Thursday, July 5, 2018, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X