இந்தியாவில் விரைவில் வெளிவரும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ ஸ்போர்ட் கார்..!!

Written By:

இந்தியாவின் கார் விற்பனையில் முன்னணியில் உள்ள வென்டோ காரில் புதிய ஸ்போர்ட் மாடலை வெளியிட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் புதிய ஸ்போர்ட் வெர்ஷன்- விரைவில்

இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், விலைப்பற்றிய தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் புதிய ஸ்போர்ட் வெர்ஷன்- விரைவில்

காம்பேக்ட் செடான் மாடலான வென்டோ காரை, ஸ்போர்ட் எடிசன் தோற்றத்திற்கு மாற்ற பல்வேறு புதிய கட்டமைப்புகள் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் புதிய ஸ்போர்ட் வெர்ஷன்- விரைவில்

ஃபோக்ஸ்வேகன் வென்டோ ஸ்போர்ட் மாடலில் தோற்றம் தான் புதுமையே தவிர, அதனுடைய எஞ்சின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் புதிய ஸ்போர்ட் வெர்ஷன்- விரைவில்

பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட க்ரில், கிளாஸ் பிளாக் ரூஃப் ரேப், கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஓ.ஆர்.வி.எம் மிரர், முன்பக்க ஃபென்டர்களில் க்ரோம் ஸ்போர்ட் பேட்ஜ், பக்கவாட்டு மற்றும் பின்புற பகுதிகளில் லிப் ஸ்பாய்லர்கள், இவற்றுடன் 16 இஞ்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் புதிய ஸ்போர்ட் வெர்ஷன்- விரைவில்

வென்டோ ஸ்போர்ட் காரின் உயர் ரக மாடலில் ஃபாக்ஸ் லெதர் சீட், லெதர் ரேப்டு ஸ்டீயரிங் வீல், கியர் ஷிஃப்ட் நாப், தொடுதிரை கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா மற்றும் மிரர்லிங் கனெக்ட்டிவிட்டி போன்ற தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் புதிய ஸ்போர்ட் வெர்ஷன்- விரைவில்

மேலும் வென்டோ காரில் டூயல் ஏர்பேகுகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இஎஸ்பி, எல்.இ.டி முகப்பு விளக்குகள், எல்.இ.டி திறன் பெற்ற பகல் நேர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் புதிய ஸ்போர்ட் வெர்ஷன்- விரைவில்

வென்டோ ஸ்போர்ட் மாடலில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின், 103 பிஎச்பி பவர் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன், 1.6 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் இன்ஜின், 103 பிஎச்பி பவர் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. டீசல் யூனிட் 1.5 லிட்டர் டிடிஐ, 108 பிஎச்பி பவர் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது டிஎஸ்ஜி யூனிட் வழங்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் புதிய ஸ்போர்ட் வெர்ஷன்- விரைவில்

இந்தியாவில் தற்போது விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ ஹைலைன் பிளஸ் பெட்ரோல் மாடல் கார் ரூ. 12.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டீசல் கார் ரூ. 13.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Read in Tamil: Volkswagen Vento Sport Edition Revealed: Expected Launch Date, Price, Specs, Features & Images
Story first published: Wednesday, March 7, 2018, 11:02 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark