இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

வால்வோ கார் நிறுவனம் இந்தியாவில் பிளக் இன் ஹைபிரிட் மற்ம் எலெக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது, டீசல் கார்களை கைவிடுவதன் காரணமாக விற்பனையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்த முயற்

By Balasubramanian

வால்வோ கார் நிறுவனம் இந்தியாவில் பிளக் இன் ஹைபிரிட் மற்ம் எலெக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது, டீசல் கார்களை கைவிடுவதன் காரணமாக விற்பனையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்த முயற்சியை அந்நிறுவனம் செய்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் சில புதிய மாடல் கார்களையும் விற்பனைக்கு கொண்டு வரவிருக்கிறது.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

ஸ்விடிஷ் சொகுசு கார் நிறுவனமான வால்வோ கார் நிறுவனம் தற்போது இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் கார்களுக்கு பதிலாக இந்தியாவில் பிளக் இன் ஹைபிரிட் முற்றம் எலெக்ட்ரிக் தொழிற்நுட்பத்திலான கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

ஆட்டோமொபைல் துறையின் தற்போது பிஎஸ்6 புகை உமிழ்வு கட்டுப்பாடு அடுத்தாண்டு நடைமுறைக்கு வரவுள்ளதிற்காக தயாராகி வருகின்றனர். பிஎஸ் 6 கட்டுபாட்டுடன் டீசல்கள் கார்களை தயாரிப்பது மிகவும் சிரமமான காரியம்.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

டீசலில் இருந்து வெளியேறு புகையை கட்டுப்படுத்த பல வகைகளில் செலவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யப்படும் செலவுகளால் காரின் விலை அதிகமாகும். இதனால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் இனி டீசல் இன்ஜின்களை பொருத்த போவதில்லை என முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

அவ்வாறாக முடிவு செய்த நிறுவனம் தான் வால்வோ நிறுவனமும் இந்நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் ஒரளவிற்கு மவுசு உள்ளது. தற்போது டீசல் கார்களை அந்நிறுவனங்கள் நிறுத்தவுள்ளதால் தற்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் பெட்ரோல் தான்.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

ஆனால் மக்கள் மத்தியில் டீசல் கார்களுக்கு இருக்கும் மவுசு பெட்ரோல் கார்களுக்கு கிடையாது. தற்போது இந்திய பெட்ரோலிய மார்கெட்டில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்பனையானாலும் மக்கள் மத்தியில் பெட்ரோலை விட டீசல் தான் குறைந்த விலை எரிபொருள் என்ற எண்ணம் எழுந்துள்ளது.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

இதனால் அந்நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்படும் என அந்நிறுவனம் கருதியது. இதை சமாளிக்க தங்கள் நிறுவனத்தின் பிளக் இன் ஹைபிரிட் மற்றம் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

இது குறித்து அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் :" தற்போது நாங்கள் முழுவதும் எலெக்ட்ரிக் கார்களில் கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளோம். தற்போது இன்டர்னல் கம்பஷன் இன்ஜினில் நாங்கள் முதலீடு செய்வதை நிறுத்தி விட்டு நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கவுள்ளோம்.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

இந்தியாவிலேயே அசம்பிள் செய்யப்பட்ட முதல் ஹைபிரிட் காரை இன்னும் 18 மாதங்களிலும் எலெக்ட்ரிக் கார்களை 12 மாதங்களிலும், அறிமுகப்படுத்தவுள்ளோம். அதற்குள் இந்தியாவில் மக்கள் மத்தில் இந்த வகையான வாகனங்கள குறித்த போதிய அளவிற்கு பிரபலம் ஏற்பட்டு விடும் என நம்புகிறோம் என கூறினார்.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

தற்போது வால்வோ காரின் எக்ஸ்சி90 என்ற எஸ்யூவி காரை இந்த நதியாண்டின் கடைசி காலாண்டின் அறிமுகப்படுத்தவுள்ளது. அதே நேரத்தில் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் வாகனத்தையும் தயாரிப்பதை நிறுத்த போவதில்லை எனவும்.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

எக்ஸ்சி 90 எஸ்யூவி வாகனத்தின் பிளக் இன் ஹைபிரிட் மாடலை டாப் மாடலில் அறிமுகமாகவுள்ளது. இந்த கார் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட எஸ்60 என்ற சொகுசு செடன் காருடன் இந்தியாவில் அறிமுகமாவுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

எக்ஸ்சி 40 என்ற கார் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த கார் குறைந்த விலை எஸ்யூவி காராக விற்பனையாகிவருகிறது. இந்த கார் விற்பனையை இந்தாண்டில் 3000 கார்களும், வரும் ஆண்டில் ஆண்டிற்கு 5000 கார்களையும் விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் மக்கள் மத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றால் ஆண்டிற்கு 10,000 கார்கள் வரை கூட விற்பனை செய்ய அந்நிறுவனம் தயாராக உள்ளது.

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

கடந்தாண்டு வால்வோ நிறுவனம் மொத்தம் 2,029 கார்களை விற்பனை செய்தது. இது கடந்தாண்டைவிட 28 சதவீத வளர்ச்சியாகும். தற்போது அந்நிறுவனம் சில கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாலும் தங்கள் விற்பனையை மேலும் அதிகரிக்கவும், இந்தியாவில் மேலும் 5 டீலர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் டீலர் எண்ணிக்கை 27 ஆக உயரும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம்

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo bets on plug-in hybrid and electric cars for India.Read in Tamil
Story first published: Saturday, July 7, 2018, 12:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X