டீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ; இனி எல்லாம் எலெக்ட்ரிக்-ஹைபிரிட் இன்ஜின் தானாம்

இனி வால்வோ கார்களில் டீசல் இன்ஜினை ஆப்ஷனை நிறத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களை தயாரிக்க அதிக முதலீடு செய்யவுள்ளதால் இந்த நடவடிக்கை என அந்நிறுவனம் கூறியுள்ளது.

By Balasubramanian

இனி வால்வோ கார்களில் டீசல் இன்ஜினை ஆப்ஷனை நிறத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களை தயாரிக்க அதிக முதலீடு செய்யவுள்ளதால் இந்த நடவடிக்கை என அந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

டீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ

இனி வால்வோ கார்களில் டீசல் இன்ஜினை ஆப்ஷனை நிறத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களை தயாரிக்க அதிக முதலீடு செய்யவுள்ளதால் இந்த நடவடிக்கை என அந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

டீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ

சுவீடன் நாட்டில் முதல் துவங்கப்பட்ட வால்வோ கார் நிறுவனத்தை தற்போது சீனாவில் உள்ள ஒரு கார் நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. தற்போது இந்த நிறுவனம் வால்வோ கார்களின் இனி டீசல் இன்ஜினை தயாரிக்க போவதில்லை என முடிவு செய்துள்ளது.

டீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ

இந்நிறுவனம் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களில் அதிக முதலீட்டை செய்யவுள்ளதால் டீசல் இன்ஜின்களுக்கு ஆகும் செலவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இனி அந்நிறுவனம் தயாரிக்க எந்த காரிலும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்காது.

டீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ

அதே போல் எஸ்60 என் புதிய வால்வோ கார் தான் முதன் முறையாக அந்நிறுவனம் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லாமல் அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ஆடி ஏ4, பிஎம்டபிள்யூ 3 சீரீஸ், மெர்சிடியஸ் பென்ஸ் சி கிளாஸ் ஆகிய கார்களுக்கு இந்த கார் போட்டியாக திகழ்கிறது.

டீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ

இந்த எஸ்60 சொகுசு செடன் கார் இந்தியாவில் இந்தாண்டு வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவை போல் அல்லாமல், இந்தியாவில் விற்பனையாகும் போது டீசல் இன்ஜின் ஆப்ஷன் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ

வால்வோ நிறுவனத்தன் சொகுச செடான் கார்களில் இந்த கார் என்ட்ரி லெவல் காராக இருக்கும். அதிக பாதுகாப்பு வசதி, உறுதியாக கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை சொகுசு காரை விரும்புபவர்களுக்கு இந்த கார் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்.

டீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ

இந்த காருக்கான கட்டமைப்பை பெங்களூருவில் உள்ள சிகேடி அசெம்பிளி பிளான்டில் அந்நிறுவனம் அசம்பிள் செய்கிறது. இந்த கார் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும்போது 10 சதவீதம் வரை அதற்கான விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ

ஐரோப்ப நாடுகளில் உள்ள சட்ட திட்டங்களின் படி அதிக மாசு ஏற்படுத்தாத வாகனங்களை தயாரிக்க வேண்டும் டீசல் இன்ஜினில் அது போன்ற மாடல் இன்ஜின்களை தயாரிக்க முடியாததால், டொயோட்டா, ஃபியட், புதிய வால்வோ ஆகிய கார் நிறுவனங்கள் குறிப்பாக ஐரோப்பா மார்கெட்டிற்கு டீசல் இன்ஜினை தயாரிப்பதை கைவிட்டனர்.

டீசல் இன்ஜினிற்கு டாடா காட்டிய வால்வோ

தற்போது வால்வோ நிறுவனம் அமெரிக்காவிலும் டீசல் இன்ஜினை கைவிட்டுள்ளது. தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் படிப்படியாக டீசல் இன்ஜின் தயாரிப்புகளை கைவிட்டு எலெரிக்ட்ரிக் மோட்டார், அல்லது ஹைபிரிட் இன்ஜினை அதிகளவில் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இனி டீசல் இன்ஜினின் அஸ்தமனம் துவக்கம் என எடுத்துக்கொள்ளலாம்.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo says goodbye to diesels.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X