காரை நீச்சல் அடிக்கவிட்ட அமெரிக்க பெண்; பேஸ்புக்கில் வைரலாகும் போட்டோ

Written By:

அமெரிக்காவில் தனது காரில் ஹேண்ட் பிரேக் போடாததால் கார் தானாக நகர்ந்து நீச்சல் குளத்திற்குள் சென்றது. இந்த போட்டோ தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

காரை நீச்சல் அடிக்கவிட்ட அமெரிக்க பெண்; பேஸ்புக்கில் வைரலாகும் போட்டோ

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒகலூசா என்ற பகுதி போலீசாரின் அதிகாரபூர்வ பக்கத்தில் கடந்த மார்ச் 28ம் தேதி நீல நிற செடான் கார் ஒன்று நீச்சல் குளத்திற்குள் இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியானது. இது இணையதளத்தில் வைராக பரவியது.

காரை நீச்சல் அடிக்கவிட்ட அமெரிக்க பெண்; பேஸ்புக்கில் வைரலாகும் போட்டோ

அதற்கு அவர்கள் அளித்த விளக்கத்தில் ஒகலூசா பகுதில் உள்ள ஒரு குடும்பத்தினர் வெளியில் செல்வதற்காக காரை எடுத்துள்ளனர். காரை அந்த வீட்டில் உள்ள பெண் ஒருவர் ஓட்டியுள்ளார். காரில் அவரது கணவரும், குழந்தையும் இருந்துள்ளனர்.

காரை நீச்சல் அடிக்கவிட்ட அமெரிக்க பெண்; பேஸ்புக்கில் வைரலாகும் போட்டோ

கார் எடுத்ததும் தான் அப்பார்ட்மெண்ட்டிலேயே பணத்தை மறந்து வைத்துவிட்டதை உணர்ந்த அந்த பெண் காரின் ஹேண்ட் பிரேக்கை போட மறந்து ஆப்பார்ட்மெண்ட்டை நோக்கி ஓடி விட்டார்.

இதனால் கார் அங்கிருந்து தானாக நகர்ந்து அருகில் இருந்த நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தது. அதிஷ்ட வசமாக காருக்குள் இருந்த அந்த பெண்ணின் கணவரும், குழந்தையும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். என குறிப்பிட்டிருந்தனர்.

காரை நீச்சல் அடிக்கவிட்ட அமெரிக்க பெண்; பேஸ்புக்கில் வைரலாகும் போட்டோ

இந்த விபத்தின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியானதும். அது வைரலாக பரவியது. சுமார் 1900 ஷேர்கள், 1300 ரியாக்ஷன்கள் என ஆட்டோமொபைல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

காரை நீச்சல் அடிக்கவிட்ட அமெரிக்க பெண்; பேஸ்புக்கில் வைரலாகும் போட்டோ

இது குறித்து பேஸ்புக்கில் பலர் " கார் சூடாக இருந்ததால் நீச்சல் அடிக்க சென்று விட்டது" என கிண்டல்களை தெறிக்கவிட்டனர். செல்போன்கள் தண்ணீரில் முழ்கினால் அரிசிக்குள் வைத்து காய வைப்பது போல் காரையும் அரிசிக்குள் வைக்க வேண்டும் எனவும் கிண்டல்கள் பரவியது.

காரை நீச்சல் அடிக்கவிட்ட அமெரிக்க பெண்; பேஸ்புக்கில் வைரலாகும் போட்டோ

சமீபத்தில் கேராளாவில் வேகன் ஆர் கார் ஒன்று இதே போன்று ஹேண்ட் பிரேக் பிடிக்காததால் நடுரோட்டில் சென்று அதிஷ்டவசமாக விபத்து ஏற்படுத்தால் இருந்தது. இந்த வீடியோ, மற்றும் செய்தியை இங்கே படியுங்கள்

காரை நீச்சல் அடிக்கவிட்ட அமெரிக்க பெண்; பேஸ்புக்கில் வைரலாகும் போட்டோ

அமெரிக்காவில் நடந்த விபத்திற்கான புகைப்படம் என்பது காரில் ஹேண்ட் பிரேக் போடாமல் சென்றால் ஏற்படும் விபரீதங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நீங்களும் காரை நிறுத்தி விட்டு செல்லும் போது உங்கள் காரில் ஹேண்ட் பிரேக் போட மறந்து விடாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

02.விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

03.புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு எப்போது? டீலரிடமிருந்து கிடைத்த தகவல்கள்!!

04.புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

05.நடிகர் மாதவனின் "பிக் பாய்" பற்றி தெரியுமா?

English summary
Woman Forgets To Put Car In Park. It Rolls Into Pool With Family Inside. Read in Tamil
Story first published: Friday, April 6, 2018, 10:49 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark