2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

2019ஆம் வருடம் முடிவடைய இன்னும் சில நாட்கள் தான் உள்ளன. இந்த வருடத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் உள்ளிட்ட சில புதிய நிறுவனங்கள் காலடி எடுத்து வைத்தன. மேலும் மற்ற முன்னணி நிறுவனங்களில் இருந்தும் பல புதிய கார்கள் அறிமுகமாகின.

ஹூண்டாய் கோனா இவி போன்ற சில எலக்ட்ரிக் வாகனங்களும் இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறு 2019ஆம் ஆண்டில் புதியதாக களமிறங்கிய கார்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம். (இந்த வரிசை எந்தவொரு குறிப்பிட்ட பண்பின் அடிப்படையிலும் ஒழுங்கப்படுத்தப்படவில்லை)

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ

இந்தியா சந்தையில் கார்களின் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகமான மாடல் தான் எஸ்-பிரெஸ்ஸோ. எண்ட்ரீ-லெவல் தயாரிப்பாக அறிமுகமான இந்த கார் மாருதியின் ஆல் டைம் பெஸ்ட் காரான ஆல்டோ ஹேட்ச்பேக்கிற்கு மேலே நிலைநிறுத்தப்பட்டது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

கிட்டத்தட்ட எஸ்யூவி-ன் வடிவமைப்பில் வெளியான இந்த காரில் அதிகளவில் க்ரவுண்ட் கிளியரென்ஸை மாருதி நிறுவனம் வழங்கியிருந்தது. மேலும் இந்த காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை இந்நிறுவனம் வழங்கியிருந்தது. எஸ்-பிரெஸ்ஸோ மாடல் தனது பிரிவில் உள்ள ரெனால்ட் க்விட் உடன் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

மஹிந்திரா எக்ஸ்யூவி300

எக்ஸ்யூவி300 காரானது மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் அறிமுகமான மாடலாகும். இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளையும் மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. ஷார்ப் ஸ்டைலிங் பாகங்கள் மற்றும் அப்டேட்டான தொழிற்நுட்பங்களை கொண்டுள்ள இந்த எக்ஸ்யூவி300 காரானது இந்திய எக்ஸ்ஷோருமில் ரூ. 8.30 - 12.69 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

மேலும் மஹிந்திரா நிறுவனம் இந்த மாடலை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாகவும் அப்டேட் செய்து வருகிறது. இதில் இந்த காரின் பிஎஸ்6 மாற்றப்பட்ட பெட்ரோல் வேரியண்ட் மட்டும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த புதிய பிஎஸ்6 காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அறிய கீழேயுள்ள லிங்கை அழுத்தவும்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ஹூண்டாய் வென்யூ

இந்திய சந்தையில் தற்சமயம் மிகவும் சிறப்பாக விற்பனையாகி வரும் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவிகளில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ மாடலும் ஒன்று. இந்நிறுவனத்தில் இருந்து பல சிறப்பம்சங்களுடன் அறிமுகமான முதல் காம்பெக்ட் எஸ்யூவி மாடலாகவும் வென்யூ விளங்குகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

இந்திய ட்ரைவிங் நிலைக்கு ஏற்றவாறு மூன்று சக்தி வாய்ந்த என்ஜின் தேர்வுகள் வென்யூ எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ரூ.6.5 லட்சத்தில் இருந்து ரூ.11.11 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் இந்தியன் கார் ஆப் தி இயர் 2020 விருதையும் பெற்றுள்ளது. இந்த விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சி குறித்து விரிவாக தெரிந்து கொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ரெனால்ட் ட்ரைபர்

சப்-4 மீட்டர் காம்பெக்ட் எம்பிவி பிரிவில் ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து அறிமுகமான மாடல் ட்ரைபர். பல தொழிற்நுட்ப தேர்வுகளில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பலரும் எம்பிவி பிரிவு கார்களுக்கு மாற ஆரம்பித்தனர்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

இதனால் இந்த கார் அறிமுகமான புதியதில் தனது பிரிவில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி சுசுகி எர்டிகா மாடல்களை விற்பனையில் முந்தி இருந்தது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.4.95 லட்சத்தில் இருந்து ரூ.6.63 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலையும் இந்த காரின் விற்பனைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

க்ராண்ட் ஐ10 மாடலின் அடுத்த தலைமுறை மாடலாக நியோஸ் என்கிற பெயரில் இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹேட்பேக்கிற்கே உண்டான மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் டிசைன் அமைப்பில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

இருப்பினும் இந்த நியோஸ் மாடல் எண்ட்ரீ-லெவல் மற்றும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கிறகு மத்தியில் நிலை நிறுத்தப்பட்டது. 1.2 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனையாகிவரும் இந்த காரின் விலை ரூ.5.00- ரூ.7.99 லட்சமாக உள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

டொயோட்டா க்ளான்ஸா

டொயோட்டா- மாருதி சுசுகி நிறுவனங்களின் கூட்டணியினால் மாருதி பலேனோவின் மறு உருவாக்கமாக டொயோட்டா க்ளான்ஸா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பலேனோவிற்கு கிடைத்த வரவேற்பு கிட்டத்தட்ட கிளான்ஸா மாடலுக்கும் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலின் விற்பனையை முந்திய இந்த கார் பலேனோவின் மறு உருவாக்கம் என்பதால், பலேனோவின் என்ஜின் தேர்வை அப்படியே பெற்றிருந்தது. தற்சமயம் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் சிறந்த முறையில் விற்பனையாகும் இரண்டாவது மாடலாக உள்ள டொயோட்டா க்ளான்ஸா மாடல் இந்தியாவில் ரூ.6.98- ரூ.8.90 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

கியா செல்டோஸ்

2019ல் இந்திய சந்தையில் கால் பதித்த இரு நிறுவனங்களில் ஒன்றான கியா மோட்டார்ஸின் முதல் இந்திய அறிமுக மாடல் செல்டோஸ் எஸ்யூவி ஆகும். கம்பீரமான தோற்றம், சக்தி வாய்ந்த என்ஜினை கொண்டுள்ளதால் கடந்த மாத எஸ்யூவி கார்களின் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

10.25 இன்ச் அளவில் மிக பெரிய தொடுத்திரை இன்போடெயின் சிஸ்டம், 7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் கண்சோல் போன்றவற்றை கொண்ட இந்த காரில் பெட்ரோல், டீசல் மற்றும் டர்போ-பெட்ரோல் என மூன்று என்ஜின் தேர்வுகளை கியா நிறுவனம் வழங்கியுள்ளது. ரூ.9.69- ரூ.16.99 லட்சங்களில் இந்த காரின் விலை இந்தியா முழுவதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

டாடா ஹெரியர்

டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 என்கிற டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் உருவான முதல் மாடலாக ஹெரியர் விளங்குகிறது. 2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் சிறப்பான டிசைன் மற்றும் தரத்தை கொண்டிருந்ததால் அறிமுகமான புதியதில் இதன் விற்பனையில் பெரியளவில் எந்த பிரச்சனையும் இல்லை.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ஆனால் இந்த காரின் பிரிவில் தொடர்ச்சியாக புதிய கார்கள் அறிமுகமானதால் ஹெரியர் கார் தற்போது விற்பனையில் சரிவை கண்டு வருகிறது. லேண்ட் ரோவரின் டி8 ப்ளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கார் ட்யூல் ஹெட்லேம்ப் ட்ரெண்ட்டை முதன்முதலாக இந்திய சந்தையில் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்ப விலை ரூ.13 லட்சமாக உள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

எம்ஜி ஹெக்டர்

கியா மோட்டார்ஸை போன்று இந்த வருடத்தில் இந்தியாவில் களமிறங்கிய மாற்றொரு நிறுவனம் எம்ஜி மோட்டார். இந்த நிறுவனத்தில் இருந்து இதுவரை ஒரே ஒரு மாடல் மட்டும் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் ஹெக்டர்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

நீண்டதாக, கிட்டத்தட்ட எம்பிவி கார்களின் டிசைனை கொண்ட ஹெக்டர் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வாகனமாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகிறது. இவை மட்டுமில்லாமல் இண்டர்நெட் இணைப்புடன் இந்தியாவில் அறிமுகமான முதல் காராகவும் எம்ஜி ஹெக்டர் உள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ஹூண்டாய் கோனா இவி

இந்திய சந்தையில் அறிமுகமான முதல் எலக்ட்ரிக் வாகனம், ஹூண்டாய் கோனா இவி ஆகும். சிங்கிள் சார்ஜில் சுமார் 452 கிமீ வரை இயங்கும் சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் மோட்டாரை இந்த கார் பெற்றுள்ளது. எஸ்யூவி பிரிவில் அறிமுகமான இந்த கார், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை இந்தியாவில் முதன்முதலில் துவங்கி வைத்த பெருமையை பெறுகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

9 விதமான நிற தேர்வுகளில் இந்த எலக்ட்ரிக் கார் கிடைக்கிறது. இதன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.23.72- ரூ.23.91 லட்சமாக உள்ளது. மேலும் கோனா இவி கார், இதுவரை எந்த எலக்ட்ரிக் வாகனமும் செய்யாத புதிய சாதனையாக இமயமலையின் அடிப்பகுதியில் உள்ள கேம்பஸ் வரை சவாலான பயணத்தை சமீபத்தில் மேற்கொண்டது. இதுகுறித்த தகவல்களை காண கீழேயுள்ள லிங்கை அழுத்தவும்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

இந்த புதிய அறிமுக கார்கள் மட்டுமில்லாமல் பல கார்கள் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஸ்பெஷல் எடிசன்களை 2019ஆம் வருடத்தில் பெற்றுள்ளன. இவற்றுடன் சில லக்சரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களும் இந்த வருடத்தில் அறிமுகமாகியுள்ளன. அடுத்த ஆண்டில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவுள்ளதால், 2020ல் அறிமுகமாகும் புதிய கார்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
New Car Launches In 2019: Here Are The Best New Car Models Introduced In India This Year
Story first published: Thursday, December 26, 2019, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X