புதிய பிஎம்டபிள்யூ இசட்4 கார் வாங்க விரும்புவோர் கவனத்திற்கு... !!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ இசட்-4 ஸ்போர்ட்ஸ் கார்பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ இசட்4 கார் வாங்க விரும்புவோர் கவனத்திற்கு... !!

கடந்த மாதம்தான் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ இசட்-4 கார் சர்வதேச அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அடக்க வகை ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக வாடிக்கையாளர்களிடத்தில் பிரபலமான இந்த கார், பழைய மாடலைவிட பல்வேறு விதங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ இசட்4 கார் வாங்க விரும்புவோர் கவனத்திற்கு... !!

புதிய பிஎம்டபிள்யூ கார் 4,324 மிமீ நீளமும், 1,864 மிமீ அகலமும், 1,304 மிமீ உயரமும் கொண்டது. பழைய மாடலைவிட நீளத்தில் 85 மிமீ கூடுதலாகவும், அகலத்தில் 74 மிமீ கூடுதலாகவும், உயரத்தில் 13 மிமீ அதிகரித்தும் வந்துள்ளது. ஆனால், வீல் பேஸ் 26 மிமீ குறைக்கப்பட்டு 2,470 மிமீ ஆக உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ இசட்4 கார் வாங்க விரும்புவோர் கவனத்திற்கு... !!

திறந்து மூடும் சாஃப்ட் டாப் கூரை அமைப்புடைய ரோட்ஸ்டெர் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பல பகுதிகள் மிக கூர்மையான டிசைன் தாத்பரிய கொள்கையுடன் வடிவமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த காரில் 18 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளன. விருப்பத்தின்பேரில் 19 அங்குல சக்கரங்களுடனும் கிடைக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ இசட்4 கார் வாங்க விரும்புவோர் கவனத்திற்கு... !!

சர்வதேச அளவில் sDrive20i, sDrive30i மற்றும் M40i ஆகிய மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் M40i மாடல்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது. அதாவது, அதிசெயல்திறன் மிக்க வேரியண்ட்தான் இந்தியாவில் வர இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ இசட்4 கார் வாங்க விரும்புவோர் கவனத்திற்கு... !!

இந்த மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. அதிகபட்சமாக 340 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ இசட்4 கார் வாங்க விரும்புவோர் கவனத்திற்கு... !!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகத்திற்கு மிகாமல் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய பிஎம்டபிள்யூ இசட்4 கார் வாங்க விரும்புவோர் கவனத்திற்கு... !!

இந்தியாவில் ரூ.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று நம்பலாம். நிச்சயம் ஸ்போர்ட்ஸ் கார் விரும்பிகளுக்கு தனித்துவமான ஸ்டைலிான தேர்வாக இருக்கும்.

Most Read Articles
English summary
German luxury car maker, BMW has listed the 2019 Z4 on its Indian website today.
Story first published: Friday, April 5, 2019, 14:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X