புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய இசுஸு வி-க்ராஸ் பிக்கப் டிரக் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் தகவல்களை இந்த செய்தியில் வழங்குகிறோம்.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அடிப்படையிலான வி- க்ராஸ் வாகனம் இந்திய ஆஃப்ரோடு பிரியர்களின் தாகத்தை தணிக்கும் அம்சங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழுவதும் தனிநபர் சந்தையை குறிவைத்து பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த பிக்கப் டிரக் வாகனம் விற்பனையில் உள்ளது.

ஆஃப்ரோடு என்றாலே எஸ்யூவி ரக வாகனங்கள்தான் ஒரே தீர்வு என்ற பிம்பத்தை போக்கும் விதத்தில், இந்த இசுஸு வி க்ராஸ் வாகனத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய இசுஸு வி க்ராஸ் வாகனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

இந்த வாகனம் தற்போது தீவிரமான சாலை சோதனைகளில் வைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று காலை பெங்களூரில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டிருந்த இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் எமது கேமரா கண்களில் சிக்கியது. அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது.

MOST READ:ஐரோப்பாவில் ஹோண்டாவின் மூன்றுசக்கர ஸ்கூட்டருக்கு காப்புரிமை!

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

இருப்பினும், இந்த ஸ்பை வீடியோ மூலமாக பல்வேறு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.. இந்த புதிய மாடலில் புதிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், க்ரில் அமைப்பு மற்றும் புதிய டிசைனிலான பம்பர்கள் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. தற்போதைய மாடலைவிட இதன் அலாய் வீல்கள் புதிது என்பதுடன் அளவிலும் பெரிதாக இருக்கிறது.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

பின்புற பம்பர்கள், புதிய டெயில் லைட்டுகள் என பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வெளிப்புறத்தில் மாற்றங்கள் இருப்பது போன்றே இன்டீரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மாடலில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட இருப்பது இதுவரை வந்த ஸ்பை படங்கள் மூலமாக புலனாகிறது. டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், கதவுகளில் அலங்கரிக்கப்பட்ட பேனல்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

லெதர் உறை இருக்கைகள் மற்றும் லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் என பிரிமீயம் மாடலாகவே வருகிறு. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் வாடிக்கையாளர்களை கவரும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

தற்போது சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் மிக முக்கிய மாற்றமாக புதிய டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 162 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

MOST READ:ரூ.199-க்கு சர்வீஸ் செய்யும் ஹூரோ நிறுவனம்: இந்த சலுகையைப் பெற நீங்க என்ன செய்யனும் தெரியுமா...?

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

இந்த பிக்கப் டிரக்கில் லோ ரேஷியோ 4 வீல் டிரைவ் சிஸ்டமும் ஆஃப்ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், வலிமையான கட்டமைப்பு ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

அடுத்த மாதம் அல்லது ஜூன் மாதத்தில் இந்த புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட அதிசக்திவாய்ந்த எஞ்சினுடன் வருவதால், ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
The 2019 Isuzu D-Max V-Cross has been spotted testing once again. DriveSpark has got exclusive footage of the pickup truck undergoing testing in Bangalore while fully camouflaged. The 2019 Isuzu D-Max V-Cross is not just a mere facelift, but it comes with multiple changes to the design and a new engine as well.
Story first published: Sunday, April 14, 2019, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more