மாசு உமிழ்வு அளவீடு கருவிகளுடன் 2020 மஹிந்திரா பலேரோ பிஎஸ்6 சோதனை ஓட்டம்...

பிஎஸ்6-க்கு இணக்கமாக 2020 மஹிந்திரா பலேரோ மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மூலம் கிடைத்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாசு உமிழ்வு அளவீடு கருவிகளுடன் 2020 மஹிந்திரா பலேரோ பிஎஸ்6 சோதனை ஓட்டம்...

முன்புற ஹெட்லைட் மற்றும் க்ரில் பகுதி மட்டும் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த காரில் பிஎஸ்6 மாற்றத்தால் முன்புறத்தை தவிர்த்து வெளிப்புறத்தில் பெரிய அளவில் அப்டேட் செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது.

மாசு உமிழ்வு அளவீடு கருவிகளுடன் 2020 மஹிந்திரா பலேரோ பிஎஸ்6 சோதனை ஓட்டம்...

ஆனால் பாதசாரிகளின் மீது கார் மோதாமல் தடுக்கும் பாதுகாப்பு அம்சத்துடன் தான் இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த காரை போன்று சமீபத்தில் ரெனால்ட் டஸ்டரின் ஃபேஸ்லிஃப்ட்டும் முன்புறம் மட்டும் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு இருந்தது.

மாசு உமிழ்வு அளவீடு கருவிகளுடன் 2020 மஹிந்திரா பலேரோ பிஎஸ்6 சோதனை ஓட்டம்...

இந்த காரின் மறைக்கப்பட்ட முன்புற டிசைனை பார்த்தால் டஸ்டரில் இருப்பதை போன்று தான் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. மற்றப்படி பாக்ஸ் டிசைன் மற்றும் எளிமையான தோற்றம் போன்றவை முந்தைய மாடலில் இருந்து அப்படியே தொடருகின்றன.

மாசு உமிழ்வு அளவீடு கருவிகளுடன் 2020 மஹிந்திரா பலேரோ பிஎஸ்6 சோதனை ஓட்டம்...

ஆனால் முன்புற க்ரில் அமைப்பு மற்றும் ஹெட்லைட்ஸ் போன்றவை இந்த அப்டேட்டால் புதிய டிசைனை பெறவுள்ளன. உட்புறம், அப்டேட்டான டேஸ்போர்டுடன் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. இதனால் 2020 மஹிந்திரா பலேரோவின் உட்புறம் புத்துணர்ச்சியான வடிவத்தை பெற்றுள்ளது.

மாசு உமிழ்வு அளவீடு கருவிகளுடன் 2020 மஹிந்திரா பலேரோ பிஎஸ்6 சோதனை ஓட்டம்...

தற்போதைய பலேரோ மாடலில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பிஏஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 70 பிஎச்பி பவரையும் 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

மாசு உமிழ்வு அளவீடு கருவிகளுடன் 2020 மஹிந்திரா பலேரோ பிஎஸ்6 சோதனை ஓட்டம்...

இந்த பிஎஸ்6 மாற்றத்தால் 2020 மஹிந்திரா பலேரோ கார் புதிய மாசு உமிழ்வு விதிக்கு மாற்றப்பட்டுள்ளதே தவிர்த்து புதிய வெர்சனுக்கு மாற்றப்படவில்லை. பலேரோ மாடலின் அடுத்த தலைமுறை கார் அறிமுகமாவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.

மாசு உமிழ்வு அளவீடு கருவிகளுடன் 2020 மஹிந்திரா பலேரோ பிஎஸ்6 சோதனை ஓட்டம்...

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா, பலேரோவுடன் மேலும் சில மாடல்களை பிஎஸ்6 தரத்தில் மாற்றும் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறது. பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பலேரோவின் விலையில் எந்தளவிற்கு மாற்றம் இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மஹிந்திரா பலேரோ இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.7.49 லட்சத்தில் இருந்து ரூ.9.35 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 Mahindra Bolero BS6 Caught Testing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X