5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார்...

மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 தரத்தில் அப்டேட் செய்துள்ள தார் மாடலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் இந்த கார் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார்...

கடைசியாக கடந்த மாதத்தில் சென்னைக்கு அருகே சோதனை செய்யப்பட்ட இந்த 2020 தார் மாடல் தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சோதனை ஓட்டங்களின் மூலம் இந்த காரில் தற்போதைய மாடலை விட பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார்...

புதிய ஏணி வடிவிலான சேசிஸை தற்போதைய மாடலை விட பெரியதாக கொண்டுள்ள இந்த புதிய தார் மாடல் கேபினையும் பெரிய அளவில் கொடுக்கப்பட்டுள்ளதால் காரின் அகலமும் உயரமும் கூடுதலாக உள்ளது. இந்த பெரிய கேபினை 2020 தார் மாடலின் ஹார்ட் மற்றும் சாஃப்ட் என இரு வேரியண்ட்டிலும் எதிர்பார்க்கலாம்.

5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார்...

இதனால் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த தார் மாடல் 5 இருக்கை மற்றும் 6 இருக்கை என இரு விதமான தேர்வுகளில் கிடைக்கவுள்ளது. தார் மாடலின் பின்புற இருக்கை அமைப்பிற்கு ஏற்கனவே பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார்...

புதிய முன்புற சஸ்பென்ஷன் மற்றும் பின்புற சஸ்பென்ஷன் அமைப்புகளை இந்த புதிய மாடல் பெற்றுள்ளது. காரின் அகலம் அதிகரிக்கப்பட்டிருப்பது மட்டுமில்லாமல் சக்கரங்களும் முந்தைய மாடலை விட 10 சதவீதம் அளவு குறைக்கப்பட்டுள்ளன.

5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார்...

க்ராஷ் சோதனைக்கான விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், ட்யூல் காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, சீட்பெல்ட் அணிவதை நினைவூட்டும் வசதி, ஸ்பீடு அலார்ம் சிஸ்டம் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார் போன்றவற்றை இந்த 2020 மஹிந்திரா தார் கார் கொண்டுள்ளது.

5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார்...

முன்புறத்தில் அப்டேட்டான ஹெட்லைட்ஸ் மற்றும் பம்பர்களையும் புதிய சக்கரங்களின் தொகுப்பையும் இந்த புதிய மாடல் பெற்றுள்ளது. உட்புறத்தில் கருமையான பின்புற பரப்பை கொண்ட தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் (விலையுயர்ந்த வேரியண்ட்களுக்கு மட்டும்), ஒழுங்கமைக்கப்பட்ட டேஸ்போர்டு மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புதிய ஸ்டேரிங் வீல், முன்புற பக்கேட் சீட், பெரிய மல்டி இன்போ திரை போன்றவை உள்ளது.

Most Read:ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார்...

140 குதிரைகளின் ஆற்றலுக்கு சமமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பிஎஸ்6 டீசல் என்ஜினை இந்த 2020 தார் கொண்டுள்ளது. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 4 வீல் ட்ரைவ் கூடுதல் தேர்வாக வழங்கப்பட்டுள்ளது.

Most Read:அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார்...

2010ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தார் மாடலின் தார் 700 என்ற லிமிட்டேட் ஸ்பெஷல் எடிசன் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. மஹிந்திரா தார் மாடலின் இத்தனை ஆண்டு விற்பனையை கௌரவிக்கும் விதமாக, வெறும் 700 யூனிட்களில் மட்டுமே இந்த தார் 700 மாடல் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

Most Read:இளைஞர் ஓட்டி வந்த காரை பார்த்து ஆச்சரியத்தில் திக்கு முக்காடி போன போலீஸ் அதிகாரி... ஏன் தெரியுமா?

5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார்...

தார் மட்டுமில்லாமல், ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 போன்ற மாடல்களையும் மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றி வருகிறது. இவற்றையும் கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டங்களில் இந்நிறுவனம் ஈடுப்படுத்தி வருகிறது. இவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களும் நமது தளத்தில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
All-New 2020 Mahindra Thar To Get 5 And 6 Seat Options
Story first published: Wednesday, December 4, 2019, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X