அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

ஸ்கோடா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு மாடலான 2020 ஆக்டேவியா வருகிற 11ஆம் தேதி பொது வாடிக்கையாளர்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாக தற்போது இந்த ஆக்டேவியா காரின் தோற்றம், முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

ஃபோக்ஸ்வேகன் உடன் கூட்டணி உருவான பின்பு அந்நிறுவனத்தின் உடல் தோற்றத்தில் வெளியாகும் முதல் மாடலாக இந்த ஆக்டேவியா கார் கருதப்படுகிறது. இதன் நோட்ச்பேக் வெர்சன் இன்னும் சில வாரங்கள் கழித்து இதேபோன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

ஐரோப்பாவில் ஆக்டேவியா நல்லவிதமான மார்க்கெட் ஷேரை பெற்றுள்ளதால் அங்கு இந்த கார் சிறந்த முறையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காம்பி, நோட்ச்பேக், ஸ்கவுட் மற்றும் ஆர்எஸ் வேரியண்ட்களில் ஆக்டேவியா அறிமுகமாகவுள்ளது.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

ஸ்கோடா நிறுவனத்தின் வழக்கமான முயற்சித்த மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டிசைன் என்ற தத்துவத்துடன் மாடர்ன் தொடுதலுடன் இந்த ஆக்டேவியா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் நீண்ட முன்புற க்ரில் பகுதி முந்தைய மாடலை விட பெரியதாகவும் ஸ்டைலாகவும் உள்ளது.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

இத்துடன் முன்புறத்தில் எல்இடி ஹெட்லைட்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ், டைனாமிக் டர்ன் இண்டிகேட்டர் போன்ற பல மாற்றப்பட்ட அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆக்டேவியாவின் நோட்ச்பேக் மற்றும் ஸ்டேஷன் வேகன் வேரியண்ட்களின் மிகச் சிறப்பான காற்றியக்கவியல் தத்துவத்துடன் இருப்பதால் காற்று பாதிப்பினால் ஏற்படும் டிராக் எனப்படும் இழுவிசை 0.24 மற்றும் 0.26 வரை என்ற மிக குறைவான அளவில் இருப்பது இந்த கார்களின் செயல்திறன் மிகச் சிறப்பாக அமையும் என்று நம்பலாம்.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

உட்புற பாகங்களை பார்த்தோமேயானால், பொத்தான்களுக்கு பதிலாக தொடுதிரைகள் அதிகமாக புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காரில் உள்ளது போன்று கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரின் அதிக விலையுள்ள வேரியண்ட்களுக்கு வெவ்வேறு நிறத்திலான டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், செமி-தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், தலைக்கு மேலே திரை, மூன்று விதமான கால நிலைகளை உருவாக்கும் வசதி உள்பட மேலும் சில சிறப்பம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

ரோல்ஸ்ராய்ஸ் கார்களை போன்று காரின் கதவில் குடை வைப்பதற்கான பிரத்யேக இடம் அளிக்கப்படும். இதன் ஸ்லீப் பேக்கேஜில் பெரியளவிலான ஹெட்ரெஸ்ட் பகுதியும், போர்வைகளும் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

இந்த காரின் பரிமாண தோற்ற அளவுகள் முந்தைய மாடலை விட பெரியதாக 4,689 மிமீ நீளத்தையும் 1,829 மிமீ அகலத்தையும் கொண்டுள்ளது. உயரம் 2,686 மிமீ ஆக உள்ளது. அதிலும் பின்புற இருக்கையில் அமருபவர்களுக்காக கூடுதலாக 78 மிமீ வரை கால்களை வைப்பதற்கான லெக் ரூம் பகுதியில் இடைவெளி இருப்பதால், பின் இருக்கையில் அமருபவர்கள் திருப்தியான உணர்வை பெறலாம்.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

காம்பி மற்றும் நோட்ச்பேக் வேரியண்ட்களின் பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் 640 லிட்டர் மற்றும் 600 லிட்டர்-கொள்ளவு கொண்டதாக உள்ளது. பெட்ரோல், டீசல், மில்டு ஹைப்ரீடு மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரீடு போன்ற பவர்ட்ரெயின் என்ஜின் தேர்வுகள் இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் மைல்டு ஹைப்ரீடு என்ஜின் 48 வோல்ட் ஜெனரேட்டர் மூலமாக கூடுதல் செயல்திறனை பெறும்.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

இந்த 48 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரியுடன் கொடுக்கப்படவுள்ள மில்டு ஹைப்ரீடு என்ஜின், 1.0 லிட்டரில் 108 எச்பி மற்றும் 1.5 லிட்டரில் 148 எச்பி ஆகிய டிஎஸ்ஐ மோட்டார்களின் தேர்வுகளில் விற்பனையாகவுள்ளது. இவற்றுடன் 7 வேக நிலைகளை வழங்கக்கூடிய டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு தேர்வாக 6 வேக நிலைகளை கொடுக்கக்கூடிய மேனுவல் டிஎஸ்ஜி கியர்பாக்ஸும் வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

1.4 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டாருடன் இயங்கவுள்ள ப்ளக்-இன் ஹைப்ரீடு வேரியண்ட் 6 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் 201 எச்பி மற்றும் 242 எச்பி என இரு விதமான வெளியிடும் ஆற்றல் அளவுகளில் விற்பனையாகவுள்ளது. ஆக்டேவியாவின் டீசல் வேரியண்ட்களை பொறுத்த வரையில், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ வேரியண்ட் 187 எச்பி பவரை வெளிப்படுத்தும். மற்றொரு புதிய 2.0 லிட்டர் டிடிஐ வேரியண்ட் 113 எச்பி பவரில் இருந்து 197 எச்பி பவர் வரை என வெவ்வேறான ஆற்றல் அளவுகளை வெளிப்படுத்தும்.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

மேலும் குறிப்பிட்ட சந்தைகளில் மட்டும் 128 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டிஎஸ்ஐ 128 சிஎன்ஜி யூனிட்டை கொண்ட ஸ்கோடா ஆக்டேவியா மாடல் விற்பனையாகவுள்ளது. மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள டிஎஸ்ஜி ஆனது நேரடியாக இணைப்பு இல்லாமல் சென்சார் மூலமாக இயக்கும் தொழிற்நுட்பத்தை கொண்டதாகும்.

இந்த புதிய ஆக்டேவியா மாடல், ரெகுலர், ஸ்போர்ட் (15 மிமீ அளவு உயரம் குறையும்), கரடுமுரடான சாலை (15 மிமீ அளவு உயரம் அதிகமாகும்) என மூன்று சஸ்பென்ஷன் அமைப்புகளில் அறிமுகமாகவுள்ளது. டிரைவர் உதவி அமைப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...

2020 ஸ்கோடா ஆக்டேவியா மாடல், சிகேடி முறையில் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும். அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுக செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகத்தால் இந்த காரின் போட்டி மாடல் கார்களான ஹூண்டாய் எலண்ட்ரா, டொயோட்டா கோரோல்லா, ஹோண்டா சிவிக் போன்றவைகளின் விற்பனை பாதிக்கப்படும் என்பது உறுதி. இந்த புதிய ஆக்டேவியா இந்திய சந்தைகளில் ரூ.16-22 லட்சம் வரையில் விற்பனையாகலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2020 Skoda Octavia Revealed Camouflaged
Story first published: Monday, November 4, 2019, 15:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X