2020 ஸ்கோடா ரேபிட் செடானின் புதிய டீசர் வெளியீடு...

அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள புதிய ஸ்கோடா ரேபிட் மாடலின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதில் இந்த 2020 ரேபிட் மாடல் புதிய தலைமுறை ஆக்டேவியாவின் டிசைன் அமைப்பின் அடிப்படையில் உருவாகியுள்ளது போல் தோற்றமளிக்கிறது.

2020 ஸ்கோடா ரேபிட் செடானின் புதிய டீசர் வெளியீடு...

ஸ்கோடா நிறுவனம் கடந்த 2011 நவம்பரில் முதன்முறையாக ரேபிட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த மாடலின் தோற்றம் கிட்டத்தட்ட ஃபேபியா இரண்டாம் தலைமுறை மாடலை ஒத்திருந்தது. ஃபோக்ஸ்வேகனின் பிக்யூ25 ஃப்ளாட்ஃபாரத்தில் இந்த ரேபிட் தயாரிக்கப்பட்டிருந்ததால் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் சில தன்மைகளையும் ஸ்கோடாவின் இந்த ரேபிட் கார் கொண்டிருந்தது.

2020 ஸ்கோடா ரேபிட் செடானின் புதிய டீசர் வெளியீடு...

ஆனால் இத்தனை வருடங்களில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ரேபிட் மாடலில் ஏற்படுத்தப்படவில்லை. செடான் கார்களின் சி பிரிவில் அங்கம் வகிக்கும் இந்த கார், இந்த பிரிவில் உள்ள மற்ற கார்களான ஹோண்டா சிட்டி, மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வெண்ட்டோ போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

2020 ஸ்கோடா ரேபிட் செடானின் புதிய டீசர் வெளியீடு...

ஆனால் இந்த காரில் அப்டேட்கள் பெரியளவில் ஏற்படுத்தப்படாததால் வாடிக்கையாளர்களிடையே இதன் பிரபலம் கடந்த சில வருடங்களாக வேகமாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம், கடந்த மூன்று வருடங்களாக ஸ்கோடா நிறுவனம் எஸ்யூவி மற்றும் கிராஸ்ஓவர் வகையான கார்களை வெவ்வேறான விலைகளில் தயாரித்து விற்பனை செய்வதற்கு தான் தீவிரம் காட்டியது.

2020 ஸ்கோடா ரேபிட் செடானின் புதிய டீசர் வெளியீடு...

ரேபிட் மட்டுமின்றி ஸ்கோடாவின் ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் மாடல்களும் பெரியளவில் அப்டேட்டை பெற்று பல மாதங்களாகிவிட்டன. இந்தியாவில் இவ்விரண்டின் விற்பனை அந்தளவிற்கு இல்லை என்றாலும் ஐரோப்பாவில் இவை சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றாக உள்ளன.

2020 ஸ்கோடா ரேபிட் செடானின் புதிய டீசர் வெளியீடு...

2019ல் ஸ்கோடா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட சூப்பர்ப், இந்திய தயாரிப்பு காமிக், ஆக்டேவியாவின் நான்காவது தலைமுறை, ஸ்காலா ஹேட்ச்பேக் மற்றும் சிடிகோவின் எலக்ட்ரிக் வெர்சன்களை அறிமுகப்படுத்தியிருந்தது. ரேபிட் மாடலின் இந்த நேம்ப்ளேட் டீசர் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி இந்த மாத இறுதியிலும் சில டீசர் போட்டோக்கள் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

2020 ஸ்கோடா ரேபிட் செடானின் புதிய டீசர் வெளியீடு...

சில நாடுகளில் இந்த டீசர் வெளியிடப்படாததற்கு காரணம், அந்த நாட்டு சந்தைகளில் ரேபிட் மாடலின் இடத்தை ஸ்கோடாவின் மற்றொரு மாடலான ஸ்காலா முற்றிலுமாக பிடித்துவிட்டது. ஏனெனில் தற்போது வெளியாகியுள்ள ரேபிட் மாடலின் டீசரில் காரானது கிட்டத்தட்ட ஆக்டேவியாவின் தோற்றத்தையே கொண்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் இடையே பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் ஃபோக்ஸ்வேகனின் மாடர் வெர்சனான எம்க்யூபி ஏ0 ஃப்ளாட்ஃபாரத்தில் ஸ்காலா கார் தயாரிக்கப்பட்டுள்ளதால், இதன் டிசைன் அமைப்பு முற்றிலும் புத்துணர்ச்சியுடன் உள்ளது.

2020 ஸ்கோடா ரேபிட் செடானின் புதிய டீசர் வெளியீடு...

வெளியாகியுள்ள இந்த டீசர் புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது ரேபிட்டின் இந்த புதிய தலைமுறை மாடல் முந்தைய மாடலை போல தான் உள்ளது. ஹெட்லைட் அமைப்பு மட்டும் போல்ட்டாக, பிளவுப்பட்டதாக ஆக்டேவியாவில் இருப்பது போல் காட்சியளிக்கிறது. மிக பெரிய மாற்றமாக க்ரில் அமைப்பு வித்தியாசமான டிசைன் அமைப்பை பெற்றுள்ளது. முன்புற பம்பர், கிடைமட்டமான மற்றும் கூர்மையான ஃபாக் விளக்குகளை பெற்றுள்ளது. மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

2020 ஸ்கோடா ரேபிட் செடானின் புதிய டீசர் வெளியீடு...

அதேபோல் பின்புறமும், பூமாரங்-ஸ்டைல் எல்இடி டெயில்லேம்ப், ஷார்ப்பர் டெயில்கேட் வடிவமைப்பு மற்றும் புதிய டிசைனில் பம்பரை பெற்றுள்ளது. இவை தவிர 2020 ரேபிட் காரின் உட்புறத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனால் இந்த காரின் அறிமுகத்திற்கு முன்னதாக மேலும் சில டீசர்களை எதிர்பார்க்கலாம்.

2020 ஸ்கோடா ரேபிட் செடானின் புதிய டீசர் வெளியீடு...

இந்த மாடலை தவிர்த்து, புதிய ரேபிட் மாடலையோ அல்லது அதற்கு மாற்றாகவோ ஒரு புதிய கார் ஒன்றை ஃபோக்ஸ்வேகனின் புதிய எம்க்யூபி ஏ0 ஃப்ளாட்ஃபாரத்தில் தயாரித்து அடுத்த இரண்டு வருடங்களுக்குள்ளாக அறிமுகப்படுத்த ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த 2020 ரேபிட் மாடலுடன் அடுத்த ஆண்டில் ஆறு புதிய மாடல்களை/ ஃபேஸ்லிஃப்ட்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
India-Bound 2020 Skoda Rapid Teased Ahead Of Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X