2வது சுற்றிலும் மிரட்டும் எம்ஜி ஹெக்டர்... வெறும் பத்தே நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா?

2வது சுற்றிலும் எம்ஜி ஹெக்டர் கார் முன்பதிவுகளை வாரி குவித்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2வது சுற்று முன்பதிவிலும் அசத்தும் எம்ஜி ஹெக்டர்... 10 நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் கடந்த ஜூன் 27ம் தேதியன்று எம்ஜி ஹெக்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் கார் இதுதான். மிக சவாலான விலை நிர்ணயம், ஏராளமான வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் எம்ஜி ஹெக்டர் கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2வது சுற்று முன்பதிவிலும் அசத்தும் எம்ஜி ஹெக்டர்... 10 நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா?

வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்த காரணத்தால், இடையில் ஹெக்டர் காரின் புக்கிங்கை எம்ஜி நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது. முதல் சுற்று முன்பதிவு நிறுத்தப்பட்ட சமயத்தில் 28 ஆயிரம் புக்கிங்குகளை எம்ஜி ஹெக்டர் கார் வாரி குவித்திருந்தது. இதன்பின் சமீபத்தில் அதன் 2வது சுற்று புக்கிங் மீண்டும் தொடங்கியது.

2வது சுற்று முன்பதிவிலும் அசத்தும் எம்ஜி ஹெக்டர்... 10 நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா?

புதிய கியா செல்டோஸ், டாடா ஹாரியரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்களின் அறிமுகம் காரணமாக எம்ஜி ஹெக்டர் காருக்கு இனி பெரிய அளவில் முன்பதிவு குவியாது என எதிர்பார்க்கப்பட்டது. இதுபோதாதென்று எம்ஜி ஹெக்டர் காருக்கான காத்திருப்பு காலம் மிக அதிகம். மேலும் எம்ஜி ஹெக்டர் காரின் விலை வேறு 40,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

2வது சுற்று முன்பதிவிலும் அசத்தும் எம்ஜி ஹெக்டர்... 10 நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா?

இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில், 2வது சுற்றில் எம்ஜி ஹெக்டர் கார் முன்பதிவுகளை குவிக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்த தடைகள் அனைத்தையும் கடந்து 2வது சுற்றிலும் முன்பதிவுகளை வாரி குவித்து கொண்டுள்ளது எம்ஜி ஹெக்டர் கார். எம்ஜி ஹெக்டர் காருக்கான டிமாண்ட் சரியவில்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

2வது சுற்று முன்பதிவிலும் அசத்தும் எம்ஜி ஹெக்டர்... 10 நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா?

2வது சுற்று முன்பதிவு தொடங்கிய வெறும் பத்தே நாட்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை எம்ஜி ஹெக்டர் கார் பெற்றுள்ளது. ஏற்கனவே வந்திருந்த 28 ஆயிரம் முன்பதிவுகள் மற்றும் 2வது சுற்றின் முதல் 10 நாட்களில் வந்த 8 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் என தற்போது மொத்தம் 36 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் எம்ஜி ஹெக்டர் காருக்கு குவிந்துள்ளன.

MOST READ: விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

2வது சுற்று முன்பதிவிலும் அசத்தும் எம்ஜி ஹெக்டர்... 10 நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா?

இதில், 6 ஆயிரம் பேருக்கு எம்ஜி நிறுவனம் ஹெக்டர் கார்களை ஏற்கனவே டெலிவரி செய்துள்ளது. அதாவது 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இன்னும் டெலிவரிக்காக காத்து கொண்டுள்ளனர். தற்போது எம்ஜி ஹெக்டர் காரின் உற்பத்தி ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் யூனிட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தற்போது புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்கள் டெலிவரிக்கு 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

MOST READ: யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

2வது சுற்று முன்பதிவிலும் அசத்தும் எம்ஜி ஹெக்டர்... 10 நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா?

இது சாத்தியமுள்ள காத்திருப்பு காலமாக கூறப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் காரில் 143 எச்பி பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 170 எச்பி பவரை உருவாக்க கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அதே சமயம் பெட்ரோல் இன்ஜின் 48V மைல்டு ஹைப்ரிட் ஆப்ஷனையும் பெற்றுள்ளது.

MOST READ: டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

2வது சுற்று முன்பதிவிலும் அசத்தும் எம்ஜி ஹெக்டர்... 10 நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா?

ஸ்டாண்டர்டு மாடல்களுடன் ஒப்பிடுகையில் இது எரிபொருள் சிக்கனத்தில் 12 சதவீதம் சிறந்து விளங்கும். எம்ஜி நிறுவனம் அடுத்ததாக புதிய இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. 20 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் எம்ஜி இஸட்எஸ் கார் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் இது போட்டியிடும்.

Most Read Articles

English summary
2nd Round: MG Hector SUV Receives 8,000 Bookings In Just 10 Days. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X