இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாக இருக்கும் நான்கு புத்தம் புதிய கார்கள் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

இந்தியா எப்போதுமே வாகனங்களுக்கான திறந்த சந்தையாக இருக்கின்றது. இதன்காரணமாக, உள்நாட்டு நிறுவனங்கள் உட்பட பன்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து, அதன் புதிய தயாரிப்புகளை இந்தியா வாகனச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

அந்த வகையில், இந்திய சாலைகளுக்கு கூடிய விரைவில் நான்கு புதுமுக கார்கள் அறிமுகமாக இருக்கின்றன. இது மட்டுமின்றி தொடர்ச்சியாக இந்த வருடத்தில் பல்வேறு நிறுவனங்களும் அதன் புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய மாடல் கார்களை இங்கு களமிறக்க இருக்கின்றன.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

இதில், ஏற்கனவே பல்வேறு வாகனங்கள் அறிமுகமாகிவிட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்ப்புகளைத் தூண்டிவரும் சில வாகனங்களின் அறிமுக நாளுக்கான காலம் மிக நெருக்கத்தில் இருக்கின்றது. அந்த வகையில் இருக்கும் நான்கு புதிய கார்கள் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

1. டாடா அல்ட்ராஸ்:

டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸ் கார் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஏனென்றால், இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில், பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், அதிகளவிலான ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இத்துடன், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

டாடாவின் இந்த அல்ட்ராஸ் கார் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வருவதோடு மட்டுமின்றி, டிசைன், இடவசதி, தொழில்நுட்ப வசதிகள் என அனைத்திலும் மிகச் சிறந்த மதிப்பைப் பெற்ற மாடலாக உருவாகி வருகின்றது. அதேசமயம், இதன் விலையும் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

இந்த அல்டராஸ் கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், இந்த எஞ்ஜின்களில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும். இந்த கார் நடப்பாண்டின் நான்காவது நிதியாண்டில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

2. டொயோட்டா க்ளான்ஸா:

டொயெட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரு நிறுவனங்களும் இணைப்பிற்கு பின் களமிறங்கும் முதல் மாடலாக க்ளான்ஸா இருக்கின்றது. இந்த கார் முன்னதாக சுஸுகி நிறுவனத்தின் பலேனோ பிராண்டில் விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தம் புதிய கிளான்ஸா ஹேட்ச்பேக் கார், ஜீன் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

டொயோட்டாவின் இந்த புதிய க்ளான்ஸாவானது, ஹை வேரியண்ட்களான ஜி மற்றும் வி வெர்ஷன்களில் மட்டுமே கிடைக்க உள்ளன. இதில் க்ளான்ஸாவின் வி மாடலானது மாருதி பலேனோவின் ஆல்பா ட்ரிமிலும், ஜி மாடலானது பலேனோவின் ஜெட்டா ட்ரிம் பிளாட்பாரத்திலும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த காரில் 1.2 லிட்டர் கே12பி பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்ஜின் 84 பிஎஸ் பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

3. ஹுண்டாய் வென்யூ:

ஹுண்டாய் நிறுவனம், அதன் வென்யூ மாடல் காரை கடந்த மாதம்தான் அறிமுகம் செய்தது. மேலும், இந்த காரினை இம்மாதம் 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், இந்த கார், இந்தியவின் முதல் அதி நவீன தொழில்நுட்ப காராக இருக்கும் என ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

அந்தவகையில், வென்யூ காரில் ப்ளூலிங்க் தொழில்நுட்பம் அடங்கிய 8 அங்குல தொடுதிறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நேவிகேஷன், ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட 33 விதமான தொழில்நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்களால் பெற முடியும். மேலும், இந்த காரில், புரொஜெக்டர் ஹெட்லைட், வயர்லெஸ் சார்ஜர், எலக்ட்ரிக் சன்ரூஃப், டிராக்ஷன் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமிரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

இத்துடன், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி மாடலில் அதிக சக்தியை வழங்கும் வகையில், புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜினில் டியூவல் க்ளட்ச் ஆட்டடோமேட்டிக் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

இதேபோன்று, வென்யூ எக்ஸ்யூவி 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இது, சந்தையில், ஃபோர்டு ஈகோஸ்போர்ட் , மஹிந்திரா எக்ஸ்யூவி 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களிடையே போட்டியிடும்.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

4. எம்ஜி ஹெக்டார்:

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம், அதன் எஸ்யூவி ரகத்திலான ஹெக்டார் காரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இந்த நிறுவனம், அண்மையில்தான் அதன் கால் தடத்தை இந்தியாவில் பதித்தது. ஆகையால், இந்தியாவில் அறிமுகம் செய்யும் முதல் காராக ஹெக்டார் இருக்கின்றது. மேலும், இந்த கார் அசத்தலான டிசைன் மற்றும் ஆர்ப்பரிக்கும் தொழில்நுட்ப வசதிகளுடன் வரவிருக்கின்றது. இதன்காரணமாக, இந்த புதிய எஸ்யூவி மாடல்மீது இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில், இன்டர்நெட் வசதிக்கான சிம் கார்டைப் பொருத்துவதன்மூலம், நேரடி இணைய வசதியைப் பெற முடியும். மேலும், இந்த காரில், செயற்கை நுண்ணறிவு திறனுடன் கூடிய வாய்ஸ் கமாண்ட் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த எஞ்ஜின்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படும்.

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண பெட்ரோல் மாடலைவிட இது 12 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இந்த எஸ்யூவிக்கான முன்பதிவு வருகின்ற 15ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் அடுத்த மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் விற்பனைக்கும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Upcoming 4 New Cars Launching Soon In India. Read In Tamil.
Story first published: Sunday, May 5, 2019, 9:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X