புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை காணலாம்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

இந்தியாவில் புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்வதில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் கமிக் எஸ்யூவியின் அடிப்படையிலான காம்பேக்ட் எஸ்யூவி மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை ஸ்கோடா கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

இந்த நிலையில், தனது கரோக் எஸ்யூவியையும் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஜீப் காம்பஸ் போட்டியாக கூறப்பட்டாலும், விலை அடிப்படையில் இது மிக பிரிமீயம் மாடலாக இருக்கும்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

ஸ்கோடா கோடியாக் மற்றும் கமிக் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு இடையிலான விலையில் வர இருக்கிறது. அதாவது, ரூ.20 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கரோக் எஸ்யூவியின் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மில்தான் இந்த புதியத எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வர இருக்கிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் குறைவான நீளம், அகலம் கொண்ட எஸ்யூவி மாடலாக தோற்றமளிக்கிறது. ஸ்கோடாவின் முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு முகப்பை ஆக்கிரமித்துள்ளது. இந்த எஸ்யூவியானது 4,382 மிமீ நீளமும், 1,841 மிமீ அகலமும், 1,603 மிமீ உயரமும் கொண்டது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

இந்த எஸ்யூவியானது 5 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. மேலும், 12.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்டுகள்,, பனோரமிக் சன்ரூஃப், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களின் செக்மென்ட்டில் விலை அடிப்படையில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும். ஸ்கோடா ரசிகர்களை கவரும் அத்துனை விஷயங்களும் இந்த எஸ்யூவியில் இடம்பெற்றுள்ளது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

இந்த புதிய மாடல்களை வைத்து இந்தியாவில் 3 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பிடித்து விடுவதற்கும் ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது. வரும் 2023ம் ஆண்டில் விற்பனையில் 4 மடங்கு வளர்ச்சியை பெற்றுவிடவும் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
All new Skoda Karoq SUV India Launch Details Revealed.
Story first published: Tuesday, April 2, 2019, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X