புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்!

மயிர்கூச்செரிய செய்யும் கார் சாகசங்களுடன் வரும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு பெரும் ரசிக பட்டாளம் உண்டு. உளவாளியின் சாகச கதாபாத்திரத்துடன் வரும் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவர் பயன்படுத்தும் அஸ்டன் மார்ட்டின் கார்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும். நெருக்கடியான தருணங்களில் ஜேம்ஸ்பாண்ட் தப்புவதற்கான ஆயுதமாக விசேஷ வசதிகளை கொண்டதாக அந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்!

இதனால், ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு கார் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பு இருந்து வருகிறது. மேலும், ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கென பிரத்யேக கார்களை அஸ்டன் மார்ட்டின் பன்னெடுங்காலமாக வடிவமைத்து கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் 25வது படம் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக ஹைப்பர் ரக கார் மாடலை தயாரித்துள்ளது.

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்!

இந்த மாடலின் விபரங்களை அஸ்டன் மார்ட்டின் வெளியிட்டு இருக்கிறது. புதிய ஜேம்ஸ்பாண்ட் காருக்கு வல்ஹல்லா என்று அந்நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் இந்த புதிய ஹைப்பர் கார் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்!

இந்த காரை வைத்து எடுக்க வேண்டிய சாகச காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் கார்களிலிருந்து இது முற்றிலும் வித்தியாசமானதாகவும், அதி செயல்திறன் கொண்ட ஹைப்பர் கார் மாடலாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்!

இந்த புதிய கார் அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் காரின் அடிப்படையிலான மாடலாக ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக விசேஷ அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஹைப்பர் காரில் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாருடன் செயல்படும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்!

இந்த புதிய அஸ்டன் மார்ட்டின் வல்ஹல்லா ஹைப்பர் கார் 1,000 எச்பி பவரை வாரி வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது நிச்சயம் ஜேம்ஸ்பாண்ட் பட ரசிகர்களையும், கார் பிரியர்களையும் வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.. இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்..

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்!

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் அஸ்டன் மார்ட்டின் வல்ஹல்லா ஹைப்பர் கார் மட்டுமின்றி, 2012ம் ஆண்டு வெளிவந்த ஸ்கைஃபால் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இடம்பெற்ற அஸ்டன் மார்ட்டின் டிபி5 சூப்பர் காரும், 1987ல் வெளிவந்த தி லிவிங் டேலைட்ஸ் பேக் படத்தில் இடம்பெற்ற அஸ்டன் மார்ட்டின் வி8 கார்களும் இடம்பெற இருக்கின்றன.

MOST READ: அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்!

எனவே, புதிய ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் சினிமா ரசிகர்கள் மற்றும் கார் பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஜேம்ஸ்பாண்ட் கதையும், இந்த அஸ்டன் மார்ட்டின் கார்களும் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Aston Martin Valhalla Hyper Car To Be Featured In Next Bond Film.
Story first published: Monday, June 24, 2019, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X