ஷாங்காய் வாகன கண்காட்சியை கலக்கவிருக்கும் ஆடியின் இரண்டு புதிய கான்செப்ட் மாடல்கள்..!

சொகுசு கார்களை தயாரித்துவரும் ஆடி நிறுவனம் தனது இரண்டு புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் கார்களை ஷாங்காய் 2019 வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கலக்கவிருக்கும் ஆடியின் இரண்டு புதிய கான்செப்ட் மாடல்கள்..!

தெற்கு சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் வருகின்ற 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை சர்வதேச வாகன கண்காட்சி நடைபெற இருக்கிறது. இந்த வாகன கண்காட்சியில், உலகில் இயங்கி வரும் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும், அதன் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும்.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கலக்கவிருக்கும் ஆடியின் இரண்டு புதிய கான்செப்ட் மாடல்கள்..!

அந்த வகையில், சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஆடி நிறுவனம், அதன் இரண்டு புதிய ரக கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஆடி நிறுவனம், இ-டிரான் மற்றும் க்யூ2எல் இ-டிரான் ஆகிய இரண்டு மாடல்களைப் போன்று, ஏஐ மற்றும் எம்இ ஆகிய இரண்டு கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கலக்கவிருக்கும் ஆடியின் இரண்டு புதிய கான்செப்ட் மாடல்கள்..!

க்யூ2 எல் இ-டிரான் எலக்ட்ரிக் காரில், க்யூ2 மாடலைப் போன்றே லாங் வீல்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலை சீனாவில் உள்ள ஃபோஷன் பிளாணட்டில் வைத்துதான் ஆடி நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த பிரத்யேமான எலக்ட்ரிக் காரை சீனர்களுக்கு மட்டும்தான் இந்த நிறுவனம் விற்பனைச் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த புதிய மாடல் எலக்ட்ரிக் காரின் டெலிவெரிய வருகின்ற கோடை காலத்தில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கலக்கவிருக்கும் ஆடியின் இரண்டு புதிய கான்செப்ட் மாடல்கள்..!

இதுகுறித்து ஆடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரம் ஸ்சோட் கூறியதாவது, "இ-டிரான் மற்றும் க்யூ2எல் இ-டிரான் ஆகிய இரண்டு எஸ்யூவி மாடல்களும் ஓர் புதிய சகாப்தமாக இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோன்று, உலகளாவிய அளவில் சீனாவில் தான் அதிகம் ஆடி கார்கள் விற்பனையாகி வருகின்றன. ஆகையால், இ-டிரான் மாடலின் அடுத்தகட்ட மாடல்களையும் முதலில் சீனாவில்தான் அறிமுகம் செய்ய உள்ளோம்" என்றார்.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கலக்கவிருக்கும் ஆடியின் இரண்டு புதிய கான்செப்ட் மாடல்கள்..!

இந்த க்யூ2எல் இ-டிரான் காரில் 33mm நீளமுடைய சக்தி வாய்ந்த மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 134 குதிரைத் திறனையும், 290என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இதில். 38kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 265கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கலக்கவிருக்கும் ஆடியின் இரண்டு புதிய கான்செப்ட் மாடல்கள்..!

இந்நிலையில்தான், ஆடி நிறுவனம் மேலும் புதிய இரண்டு மாடல் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு, புதிதாக அறிமுகமாக இருக்கும் ஏஐ மற்றும் எம்இ ஆகிய கான்செப்ட் எலக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கலக்கவிருக்கும் ஆடியின் இரண்டு புதிய கான்செப்ட் மாடல்கள்..!

அந்த வகையில், தற்போது அறிமுகமாக இருக்கும் கான்செப்ட் மாடல்கள் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட லெவல் நான்கு தானியங்கி டெக்னாலஜி பொருத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்த கார் மற்ற இ-கார்களைக் காட்டிலும் சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன்மீதான எதிர்பார்ப்பு அதன் வாடிக்கையாளர்களிடையே தற்போது ஹைபீக்கில் இருக்கிறது என்றே கூறலாம்.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi AI-ME Concept Teased Ahead Of Shanghai-2019. Read In Tamil.
Story first published: Saturday, April 13, 2019, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X