மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

ஆடி கார் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக ஆடி இ-ட்ரான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உலக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கும் இந்த கார் இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் இந்த கார் வெவ்வெறு நிகழ்ச்சிகளில் இரண்டு முறை காட்சிப்படுத்தப்பட்டுவிட்டது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

இந்த நிலையில், இந்த கார் தொழில்நுட்ப அளவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பேட்டரி மற்றும் மின் மோட்டார் திறனை கண்காணிக்கும் மென்பொருளும், சில முக்கிய பாகங்களிலும் மாற்றங்கள் செய்து மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

இதனால், இந்த எலெக்ட்ரிக் கார் கூடுதலாக 25 கிமீ பயண தூரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த புதிய தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, இனி 425 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

முன்புறத்தில் இருக்கும் எலெக்ட்ரிக் மின் மோட்டார் தேவைப்படும்போது மட்டும் இயங்கும் என்பதால், மின் திறன் இழப்பை தவிர்க்க முடியும். அத்துடன், புதிய பிரேக் தொழில்நுட்பத்தின் மூலமாக பேட்டரி, மின் மோட்டார்களால் ஏற்படும் மின் இழப்பை தவிர்க்கும் முறையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

இந்த காருக்கு டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றும் வாய்ப்பை வழங்கும். இந்த காரில் 125KW மற்றும் 140KW மின் மோட்டார்கள் கொண்டதாக கிடைக்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், 20 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பேங் அண்ட் ஒலுஃப்சென் ஆடியோ சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

பெல்ஜியத்தில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்த கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் 200 கார்களை விற்பனை செய்ய ஆடி இலக்கு வைத்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

சொகுசு ரக எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. இந்த கார் ஜாகுவார் ஐ-பேஸ், டெஸ்லா மாடல் எக்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi e-tron electric SUV has recieved technical update for giving it a better range and efficiency.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X