மிரட்டும் ஸ்டைலில் ஆடி டிடி சஃபாரி ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்...!

ஆடி நிறுவனத்தின் டிடி சஃபாரி கார் ஆஃப்ரோடு பயணத்திற்கு ஏற்ற மாடலாக தயார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மிரட்டும் ஸ்டைலில் ஆஃப்ரோடு ஆடி டிடி சஃபாரி மாடல் அறிமுகம்...!

ஆஸ்திரியாவில் 2019ம் ஆண்டிற்கான வொர்த்ர்ஸீ ஜிடிஐ கார் மீட் (Worthersee GTI Car Meet ) நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் ஸ்டைலான கார்களை ஆஃப் ரோடு வாகனங்களுக்கு ஏற்ப மிரட்டும் தோனியில் தயாரித்து காட்சிக்கு வைப்பது வழக்கம்.

மிரட்டும் ஸ்டைலில் ஆஃப்ரோடு ஆடி டிடி சஃபாரி மாடல் அறிமுகம்...!

அந்த வகையில், ஜெர்மன் நாட்டு ஜாம்பவானான ஆடி நிறுவனம், அதன் ஆடி டிடி மாடலை ஹார்ட்கோர் மாடலாக தயார்செய்து காட்சிப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம், ஆடி டிடி மாடலில் மிகப் பெரிய மாற்றம் செய்து எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

மிரட்டும் ஸ்டைலில் ஆஃப்ரோடு ஆடி டிடி சஃபாரி மாடல் அறிமுகம்...!

இந்நிலையில், இந்த ஆடி டிடி மாடலில் சஃபாரி வெர்ஷன் ஆஃப் ரோடு காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி டிடி மாடலை அந்த நிறுவனம் 2014ம் ஆண்டு ஆஃப் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாடலைத் தான் தற்போது ஆஃப் ரோடு பயணத்திற்கேற்ப ஹார்ட்கோர் மாடலாக அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மிரட்டும் ஸ்டைலில் ஆஃப்ரோடு ஆடி டிடி சஃபாரி மாடல் அறிமுகம்...!

இந்த ஆடி டிடி சஃபாரி கார், ஆஃப் பயணத்திற்கு ஏற்ற காராக வடிவம் பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. இந்த மாற்றங்களால், ஆடி கார் மிருகத்தைப் போன்ற காட்சியைப் பெற்றிருக்கின்றது. அந்த வகையில், இதன் வெளிப்புறத்தோற்றம், பாகங்கள் அனைத்தும் பிரம்மிப்பான காட்சியை வழங்குகின்றது.

மிரட்டும் ஸ்டைலில் ஆஃப்ரோடு ஆடி டிடி சஃபாரி மாடல் அறிமுகம்...!

ஆடி டிடி சஃபாரி காரின் முன் பக்க கிரில் அமைப்பில் நான்கு மஞ்சள் நிறத்தில் ஒளிரும் எல்இடி தரத்திலான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அதன் பாடி முழுவதும் ஆங்காங்கே மஞ்சள் நிறத்திலான வண்ணம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, ஏர் இன்டேக்கர், பேனட், பக்கவாட்டு பகுதி, பின்பக்க பகுதி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மஞ்சள் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டும் ஸ்டைலில் ஆஃப்ரோடு ஆடி டிடி சஃபாரி மாடல் அறிமுகம்...!

மேலும், இதன் இன்டீரியரும் கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான தீமையேப் பெற்றிருக்கின்றன. இதன் ஸ்டியரிங் ஆடி டிடி ஆர்எஸ் மாடலில் பொருத்தப்பட்டிருப்பதைப் போன்று இருக்கின்றது. மேலும், ஆஃப் பயணத்திற்கு ஏற்ப தயாராகி இருக்கும் இந்த காரின் பின்பகுதியில் இரண்டு ஸ்பேர் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை ரேக் போன்ற அமைப்பில் மிகவும் நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ளன.

மிரட்டும் ஸ்டைலில் ஆஃப்ரோடு ஆடி டிடி சஃபாரி மாடல் அறிமுகம்...!

ஆனால், இந்த காரின் எஞ்ஜின் குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதில், 310 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் வகையிலான எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஆடி டிடிஎஸ் காரில் இந்த தரத்திலான எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

மிரட்டும் ஸ்டைலில் ஆஃப்ரோடு ஆடி டிடி சஃபாரி மாடல் அறிமுகம்...!

தற்போது, ஆடி நிறுவனம் இந்த டிடி மாடலில் டிடிஎஸ், டிடி ஆர்எஸ் மற்றும் டிடி ரோட்ஸ்டர் க்யூஸெஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், ஆடி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் டிடி சஃபாரி காரினை எப்போது உற்பத்தியில் கொண்டுவரும் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், விரைவில் இதனை சாலையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப தயார் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi TT Safari Revealed. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X