அதிரடியான எலெக்ட்ரிக் சொகுசு கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது பென்ட்லீ!

இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லீ சொகுசு கார் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் அதன் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது அதிரடியான செயல்திறன் கொண்ட புதிய எலெக்ட்ரிக் அல்ட்ரா சொகுசு காரின் மாதிரி மாடலை பொது பார்வைக்கு கொண்டு வந்து கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது பென்ட்லீ கார் நிறுவனம்.

அதிரடியான எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய பென்ட்லீ!

பென்ட்லீ EXP100 GT என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மாதிரி மாடலானது சினிமாவில் வரும் மாயஜால கார் போல ஜொலிக்கிறது. பென்ட்லீயின் பாரம்பரிய டிசைன் அம்சங்களை வேறு லெவலுக்கு கொண்டு செல்லும் விதமாக இந்த கான்செப்ட் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிரடியான எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய பென்ட்லீ!

கிராண்ட் டூரர் பாடி ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய கான்செப்ட் மாடலின் முகப்பு க்ரில் அமைப்பில் 6,000 எல்லஇடி பல்புகள் கொடுக்கப்பட்டுள்ளனவாம். பென்ட்லீ நிறுவனத்தின் பாரம்பரியமான டிசைனில் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

அதிரடியான எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய பென்ட்லீ!

அதேநேரத்தில், பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பானது பென்ட்லீயின் பாரம்பரியத்திலிருந்து சற்றே விலகி புதியதாக வர இருக்கிறது. பின்புறத்தில் தாழ்வாக செல்லும் கூரை அமைப்பு, சில்வர் மற்றும் தாமிரத்திலான சட்டங்களுடன் கூடிய ஜன்னல் அமைப்புகள் மற்றும் விண்ட்ஷீல்டு கண்ணாடி ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.

அதிரடியான எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய பென்ட்லீ!

புதிய பென்ட்லீ EXP 100 GT கான்செப்ட் மாடலானது 5.8 மீட்டர் நீளமும், 2.4 மீட்டர் அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் பாடி கொடுக்கப்பட்டுள்ளது. 1,900 கிலோ எடை கொண்டது.

அதிரடியான எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய பென்ட்லீ!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

பென்ட்லீ EXP 100 GT மாடலை நாம் அதிரடியான மாடல் என்று குறிப்பிட்டதற்கான காரணம், இந்நத காரில் இருக்கும் திறன் வாய்ந்த பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 1,500 என்எம் டார்க் திறனை வழங்கும் திறன் வாய்ந்தது. ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 700 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

அதிரடியான எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய பென்ட்லீ!

இந்த காரின் மற்றொரு அதிரடியான விஷயம். இந்த எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு நிலை மாடலானது மணிக்கு 300 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இத்ந பேட்டரியை வெறும் 15 நிமிடங்களில் 80 சதவீத அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

அதிரடியான எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய பென்ட்லீ!

பென்ட்லீ எக்ஸ் 100 ஜிடி கான்செப்ட் காரில் செயற்கை நுண்ணறிவு திறனில் இயங்கும் சென்ட்ரல் கன்சோல் அமைப்பு கொடுக்கப்பட இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட காற்று வழங்கும் அமைப்பு, லெதர் இருக்கைகள், மர அலங்கார வேலைப்பாடுகள் என வழக்கமான பென்ட்லீ இன்டீரியர் கைவண்ணத்துடன் இந்த காரின் கான்செப்ட் மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடியான எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய பென்ட்லீ!

பென்ட்லீ எக்ஸ் 100 ஜிடி கான்செப்ட் மாடலின் நேரடி தயாரிப்பு நிலை மாடலை உருவாக்கும் எண்ணம் இல்லை என்றே தெரிகிறது. எனினும், எதிர்காலத்தில் வர இருக்கும் புதிய பென்ட்லீ எலெக்ட்ரிக் காரில் எக்ஸ் 100 ஜிடி கான்செப்ட்டின் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அதிகம் இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர்.

Most Read Articles
மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
British premium luxury car maker Bentley has revealed all new electric car concept named as EXP 100 GT.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X