TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
சென்னையில் தயாராகும் பிஎம்டபிள்யூ கார்கள்: விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது புத்தம் புதிய எக்ஸ் 7 மாடல் காரை சென்னையில் அசெம்பிள் செய்து விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது எக்ஸ்7 மாடல் காரை சென்னையில் உள்ள பிளாண்ட்டில் வைத்து அசெம்பில் செய்ய இருப்பதகாக கடந்த மாதம் தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனம் அம்மாதத்தின் இறுதியில் பிரபலமான எஸ்யூவி ரக எம்50டி மாடலை வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இதன் புகைகப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வைரலானது.

இந்நிலையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் போட்டி கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் ஜிஎல்எஸ்-க்கு டஃப் கொடுக்கும் வகையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடல் கார்களைத் தயாரித்து வருகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் மட்டுமின்றி ரேஞ்ச் ரோவர், லெக்சஸ் எல்எக்ஸ் மற்றும் காடிலாக் எஸ்கலேட் ஆகிய கார்களுடன் போட்டிபோடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, "பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் நான்கு வேரியண்ட்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, காரின் இடவசதியானது அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்த காரில் ஆறு முதல் ஏழு பேர் வரை பயணிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடலில் கிடைக்கும் நான்கு வேரியண்ட்கள் குறித்து தகவல்,
எக்ஸ்டிரைவ்30டி (xDrive30d) : 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 265PSம், 620Nm டார்க்யு திறனையும் வெளிப்படுத்தும்.
எக்ஸ்டிரைவ்40ஐ (xDrive40i) : 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 340PSம், 450Nm டார்க்யு திறனையும் வெளிப்படுத்தும்.

எக்ஸ்டிரைவ்50ஐ (xDrive50i) : 4.4 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது 462PS பவரையும், 650Nm டார்க்யு திறனையும் வெளிப்படுத்தும்.
எம்50டி (M50d) : 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் காரும் அறிமுகமாக உள்ளது. இந்த கார் 400PSம், 760Nm டார்க்யுவையும் வெளிப்படுத்தும்.
மேற்கூறிய நான்கு வேரியண்ட்களும் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் திறன் கொண்டது. மேலும், அனைத்து சக்கரங்களும் இயங்கக் கூடிய தொழில்நுட்பத்தில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இதில், எக்ஸ்டிரைவ்40ஐ மற்றும் எக்ஸ்டிரைவ்30டி வேரியண்ட்கள் செப்டம்பர் மாதத்திற்குள் விற்பனைக்கு வந்துவிடும்.

ஆனால், இதில் எக்ஸ்டிரைவ்50ஐ வேரியண்ட் மட்டும் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதில்லை என்று பிம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த இரண்டு மாடல்களும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, எம்50டி விற்பனை குறித்து கூடிய விரைவில் அறிவிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்த காரில் முக்கிய அம்சமாக, லேசர் ஹை பீம் எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 22 இன்ச் அலாய் வீல், ஸ்லிம் எல்இடி ரியர் லைட்ஸ், பனோரமா கிளாஸ் ரூஃப், வாகனத்தில் இருந்து வானத்தைப் பார்க்கும் ரூஃப் ஸ்கை, ஆடோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 12.3 டிஜிட்டல் இனஸ்ட்ருமன்ட் கிளஸ்டர் ஆகிய சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.