பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவிக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு!

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 சொகுசு எஸ்யூவி காருக்கு இந்தியாவில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் வரையில் இந்த புதிய காருக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவிக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு!

பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ் என்ற குடும்ப வரிசையில் சொகுசு வகை எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், உயர்வகை மாடலாக எக்ஸ்-7 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய எக்ஸ்-7 சொகுசு எஸ்யூவி கார் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.98.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் களமிறக்கப்பட்டது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவிக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு!

இந்த நிலையில், இந்த காருக்கு இந்தியாவில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து எக்ஸ்-7 எஸ்யூவி கார்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரியில் இருந்து டெலிவிரி கொடுப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் எக்ஸ்-7 காருக்கான முன்பதிவு ஏற்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவிக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு!

மேலும், வரும் ஜனவரியிலிருந்து முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் எக்ஸ்ட்ரைவ்40ஐ மற்றும் எக்ஸ்ட்ரைவ்30டீ ஆகிய இரண்டு எஞ்சின் தேர்வுகளில் வசதிகளை பொறுத்து நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவிக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு!

இதில், எக்ஸ்ட்ரைவ்30டீ டிசைன் ப்யூர் எக்ஸெலன்ஸ் சிக்னேச்சர் என்ற டீசல் வேரியண்ட் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. பெட்ரோல் வேரியண்ட்டுகள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவிக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு!

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி காரில் மூன்று வரிசை இருக்கை அமைப்பு உள்ளது. 6 பேர் மற்றும் 7 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதிகள் கொண்ட இரு மாடல்களில் கிடைக்கும். இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் கெச்சர் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 5 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவிக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு!

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 பெட்ரோல் மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டர்போ எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 340 எச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலிலும் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவிக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு!

இரண்டு எஞ்சின்களுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. எக்ஸ்ட்ரைவ் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. இந்த காரில் எம்50டீ என்ற மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 400 எச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடல் உயர்வகை மாடலாக நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles
English summary
BMW has revealed that X7 SUV is all sold out for this year and booking open only for next year.
Story first published: Saturday, October 26, 2019, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X