டொயோட்டாவிற்கு மேலும் மூன்று மாடல்கள்... மாருதி சுஸுகியின் தாராளம்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ மாடலைத் தொடர்ந்து, விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா ஆகிய மூன்று மாடல்களையும், டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனைச் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

ஜப்பானிய கார் நிறுவனங்களான டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரு நிறுவனங்களும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட்டணி அமைத்துக்கொண்டன. இந்த கூட்டணியைத் தொடர்ந்து, முதல் முதலாக க்ளான்ஸா என்ற ஹேட்ச்பேக் ரகத்திலான காரை டொயோட்டா நிறுவனம், ரீபேட்ஜ் செய்து கடந்த வியாழனன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

இந்த புதிய க்ளான்ஸா மாடலில் இரு வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில், ஒன்று ஜி எம்டி என்றி பெயரிலும், மற்றொன்று வி சிவிடி என்ற பெயரிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜி எம்டி-க்கு ரூ. 7.21 லட்சம் என்ற விலை எக்ஸ்-ஷோரூமிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வி சிவிடி வேரியண்டிற்கு ரூ. 8.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

முன்னதாக, க்ளான்ஸா கார் சுஸுகி நிறுவனத்தின் பலேனோ மாடலில் விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தகுந்தது. தற்போது, இரு நிறுவனங்களின் இணைப்பைத்தொடர்ந்து, இந்த கார் க்ளான்ஸா என்ற பெயரில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

இதைத்தொடர்ந்து, மாருதி சுஸுகியின் மேலும் மூன்று மாடல்கள் டொயோட்டாவின் பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவ்வாறு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களாக இருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா, சியாஸ் மற்றும் எர்டிகா ஆகிய மூன்று மாடல்களும்தான் தற்போது டொயோட்டா மூலம் ரீபேட்ஜ் செய்து தயாரிக்கப்பட உள்ளன.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

மேலும், இந்த மாடல்களுக்கு புதிய பெயர் மற்றும் சில தனிப்பட்ட டிசைன் தாத்பரியங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில், டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் எனப்படும் செடான் ரக காரை ரீபிளேஸ் செய்யும் வகையில், சியாஸ் மாடலை டொயோட்டா உருவாக்க உள்ளது. பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டும், யாரிஸ் செடான் ரக கார், மந்தமான விற்பனையைப் பெற்று வருவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

பிரிமியம் சந்தையைக் குறிக்கோளாக வைத்து செயல்படும் டொயோட்டா நிறுவனம், ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு களமிறக்க இருக்கும் இந்த கார்கள் மூலம் அதிக அளவில் விற்பனையை குவிக்க வேண்டும் நோக்கில் செயல்படவில்லை என கூறப்படுகிறது. மாறாக, சந்தையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ளவே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், ரீபேட்ஜ் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மாடல்களும் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸா, சியாஸ் மற்றும் எர்டிகா ஆகிய மாடல்கள் முன்னதாக, அந்த நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலையில் வைத்து உற்பத்திச் செய்யப்பட்டு வந்தன. தற்போது, இவையனைத்தும், டொயோட்டா நிறுவனத்தின் கிர்லோஷ்கர் பெங்களூர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

புதிய க்ளான்ஸா, பலேனோவைக் காட்டிலும் மாறுதலாக இருக்கும் தோற்றமளிக்கும் வகையில், கணிசமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், காரின் ரேடியேட்டர் க்ரில் அமைப்பில் சிறு மாற்றம் செய்து பொருத்தப்பட்டுள்ளது. இந்த, க்ரில்லானது, இரண்டு குரோம் பூச்சுக் கொண்ட விங் அமைப்பைப் பெற்றுள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

இதைத்தொடர்ந்து, காரின் கேபினுக்குள்ளும் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், பிரத்யேக வசதியாக க்ளான்ஸா காரில், ஸ்டாண்டர்டு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் கூடிய ப்ளே காஸ்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

டொயோட்டா தயாரிப்பில் இந்த வசதி அறிமுகம் செய்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த மாடல்களில் இந்த வசதி இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. ஆகையால், இந்த க்ளான்ஸா கார், மேலும் சிறப்பு வாய்ந்த காராக தற்போது இந்தியர்கள் மத்தியில் களமிறங்கியுள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

மேலும், க்ளான்ஸா காருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, டொயோட்டா நிறுவனம், 3 வருடங்கள் அல்லது ஒரு லட்சம் கிமீ வாரண்டியினை வழங்கியுள்ளது. இதே சலுகையை புதிதாக ரீபேட்ஜ் செய்ய இருக்கும் கார்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சலுகையில், 5 வருடங்கள் அல்லது ஏழு வருடங்கள் என கூடுதல் ஆப்ஷனையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் வழங்க இருக்கின்றது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

இந்த கார் இரண்டு பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது. அவ்வாறு, ஒரு வேரியண்டில், கே12என் 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த எஞ்ஜினில் சிறிய ரகத்திலான ஹைபிரிட்டிற்கான தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மாடல்களையும் டொயோட்டவிற்கு தாரைவார்க்கும் மாருதி சுஸுகி...!

மற்றுமொரு வேரியண்ட், 1.2 லிட்டர் கே12எம் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது, அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும்,113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Vitara Brezza, Ertiga & Ciaz Also Rebadged By Toyota. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X