மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

மத்திய அரசின் அதிரடி காரணமாக கார்களின் விலை தாறுமாறாக உயரப்போகிறது. நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவர் என்றால், விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டாம்.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரவுள்ளன. எனவே அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் இன்ஜின்களை வேக வேகமாக பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன. இதற்காக அனைத்து வாகன நிறுவனங்களும் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

பெட்ரோல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்ய ஆகும் செலவு குறைவுதான். அதே சமயம் டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்த அதிக செலவு ஆகும். எனவே பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு டீசல் இன்ஜின் கார்களின் விலை வெகுவாக உயரவுள்ளது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

குறிப்பாக டொயோட்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களான பார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரிஸ்டா ஆகிய 2 கார்களின் டீசல் மாடல்களின் விலை மிக கடுமையாக உயரவுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி ரக கார் ஆகும். அதே சமயம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா எம்பிவி ரகத்தை சேர்ந்தது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

தற்போதைய நிலையிலேயே இவை இரண்டின் விலையும் கொஞ்சம் அதிகம்தான். எனினும் மிக சிறப்பான கட்டுமான தரம், டொயோட்டா நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை உள்ளிட்ட காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், பார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரிஸ்டா ஆகிய இரண்டு கார்களுக்கும் மிகப்பெரிய ஆதரவு உள்ளது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

தற்போது டொயோட்டா பார்ச்சூனர் காரின் பேஸ் டீசல் வேரியண்ட்டின் (2.8 4×2 மேனுவல் டிரான்ஸ்மிஷன்) டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை 29.84 லட்ச ரூபாய். அதே சமயம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் பேஸ் டீசல் வேரியண்ட்டின் தற்போதைய டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை 15.67 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

இந்த 2 கார்களும் அந்தந்த செக்மெண்ட்டில் மிக சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. அத்துடன் மிக நீண்ட காலமாக தங்களுக்கென தனி இடத்தை அவை உருவாக்கி வைத்துள்ளன. ஆனால் அடுத்த ஆண்டு முதல் இந்த 2 கார்களையும் வாங்க உங்களுக்கு மனம் வருமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

அதிரடியான விலை உயர்வுதான் இதற்கு காரணம். ஆம், டொயோட்டா பார்ச்சூனர் டீசல் காரின் விலை 4.5 லட்ச ரூபாய் வரை உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டீசல் காரின் விலை 3 முதல் 4.5 லட்ச ரூபாய் வரை உயர வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

நம்ப முடியவில்லையா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அடுத்த ஆண்டு பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு பிறகு இந்த கடுமையான விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த 2 கார்களையும் வாங்க வேண்டும் என நீங்கள் திட்டமிட்டு கொண்டிருந்தால், அதற்கு இதுவே சரியான நேரம். பல்வேறு காரணங்களால் உங்கள் திட்டம் தள்ளி போய் கொண்டே இருக்கலாம்.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

ஆனால் இனியும் தாமதித்தால் நீங்கள் அதிக விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும். எனவே உடனடியாக டொயோட்டா ஷோரூமிற்கு சென்று விடுங்கள். அத்துடன் தற்போது மார்க்கெட்டில் மந்த நிலை நிலவி வருகிறது. எனவே இதனை பயன்படுத்தி கொண்டு டீலர்ஷிப்பில் நீங்கள் அடித்து பேரம் பேசலாம்.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்பதற்காக டீசல் கார்களின் விலையை 15-20 சதவீதம் வரை உயர்த்துவதற்கு டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ET Auto செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் விலை உயர்வு எவ்வளவு? என்பது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

தற்போது வெளிவந்துள்ள தகவல்களை வைத்து பார்த்தால், இது அதிகப்படியான விலை உயர்வுதான். எனவே எதிர்காலத்தில் இதை விட குறைவான விலையில் கிடைக்கும் போட்டியாளர்களின் கார் மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருந்தபோதும் விலை உயர்வதற்கு முன்னதாகவே இந்த கார்களை வாங்கி விட பலர் நினைப்பார்கள்.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

எனவே வரும் மாதங்களில், அதாவது பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாக டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரிஸ்டா கார்களின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. தற்போது இந்திய மார்க்கெட்டில் நிலவி வரும் மந்த நிலையால் அனைத்து கார் நிறுவனங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

இந்த கடுமையான சரிவில் இருந்து மீண்டு வர டொயோட்டா நிறுவனத்திற்கு இது உதவலாம். இதனிடையே மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப டீசல் இன்ஜின்களை மேம்படுத்துவது அவ்வளவு லாபகரமானதாக இருக்காது எனவும் சில நிறுவனங்கள் நினைத்து வருகின்றன.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

இதில், மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்கள் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு டீசல் இன்ஜின் கார்களின் உற்பத்தியை நிறுத்தி விடுவது என முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ பிஎஸ்-6 விதிமுறைகள் இந்தியாவின் வாகன மார்க்கெட்டை தலை கீழாக புரட்டி போட போகின்றன என்பது மட்டும் உறுதி.

பிஎஸ்-6 விதிமுறைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

புதிய மாசு விதியினால் ஏற்படும் விலையுயர்வு ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்திய வாகனச் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதனால் கார்களின் விற்பனை மிகப் பெரிய மந்த நிலையில் சிக்கியுள்ளது. இதற்கான முக்கிய காரணத்தை கீழே காணலாம்.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது வீழ்ச்சி பாதையில் பயணித்து கொண்டுள்ளது. இப்படி ஒரு கடுமையான சரிவை இதற்கு முன் கண்டதில்லை என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி உள்பட அனைத்து நிறுவனங்களின் கார் விற்பனையும் கடந்த சில மாதங்களாக 'டல்' அடித்து கொண்டுள்ளது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள ஹோண்டாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. அதுவும் சாதாரண சரிவல்ல. 48.67 சதவீதம் என்கிற அளவிற்கு கடுமையான சரிவை சந்தித்துள்ளது ஹோண்டா.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

கிட்டத்தட்ட ஹோண்டா கார்களின் விற்பனை சரிபாதியாக குறைந்துள்ளது. இந்திய மார்க்கெட்டில் நிலவி வரும் மந்த நிலை மட்டும் இதற்கு காரணம் அல்ல. கடந்த ஆண்டு விற்பனை எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததும் கூட ஒரு காரணம்தான்!! 2018 ஹோண்டா அமேஸ் கார் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

2018 அமேஸ் அறிமுகம் செய்யப்பட்டது முதல், ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை உயர தொடங்கியது. இதன் காரணமாக இந்திய மார்க்கெட்டில் ஹோண்டா சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. ஹோண்டாவின் மொத்த விற்பனை எண்ணிக்கையில், அமேஸ் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

இதன் விளைவாக கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் ஹோண்டா 19,970 கார்களை விற்பனை செய்தது. சேல்ஸ் சார்ட்டில் இவ்வளவு பெரிய எண்ணிக்கை வந்தது கடந்த 2018ம் ஆண்டில் ஹோண்டாவிற்கு நல்ல செய்தியாகதான் இருந்தது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 10,250 யூனிட்கள்தான். இது 48.67 சதவீத சரிவு. அதாவது இது கிட்டத்தட்ட சரிபாதி வீழ்ச்சி. அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் ஹோண்டா அமேஸ் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் அதன் விற்பனை படிப்படியாக வீழ்ச்சியடைய தொடங்கி விட்டது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

அதன்பின் ஹோண்டா நிறுவனத்தின் மொத்த கார்கள் விற்பனை எண்ணிக்கை ஓரளவிற்குதான் நன்றாக இருந்து வந்தது. ஆனால் இந்திய மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. இதில், ஹோண்டாவும் தப்பவில்லை. ஆனால் இந்திய மார்க்கெட்டில் தற்போது மற்றொரு அதிசயமும் அரங்கேறி வருகிறது.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

ஹூண்டாய் வெனியூ, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்கள் இந்திய மார்க்கெட்டின் புது வரவுகள். இதுதவிர கியா செல்டோஸ் எஸ்யூவி காரும் இந்திய மார்க்கெட்டில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

மத்திய அரசின் அதிரடியால் தாறுமாறாக உயர போகும் கார்கள் விலை... எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

மேற்கண்ட கார்களுக்கான புக்கிங் மிக சிறப்பாக உள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கையில் இந்திய வாடிக்கையாளர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும், புதிதாக ஏதேனும் ஒன்றை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
BS-6 Effect: Toyota Plans To Increase Diesel Vehicle Prices By Up To Rs. 4.5 Lakh From 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X