சக்கரங்களின் ரிம்கள் கூட மறைப்பட்டு 2020 ரெனால்ட் டஸ்டர் பிஎஸ்6 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் பிரபலமானவதற்கும் தயாரிப்புகளை எளிதில் விற்பனை செய்வதற்கும் ரெனால்ட்டின் டஸ்டர் மாடலின் பங்கு இன்றியமையாதது. இந்த மாடலின் மூன்றாவது ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் சமீபத்தில் புதிய உட்புற மற்றும் வெளிப்புற டிசைன்களுடன் அறிமுகமானது.

சக்கரங்களின் ரிம்கள் கூட மறைப்பட்டு ரெனால்ட் டஸ்டர் பிஎஸ்6 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்நிலையில் இந்த கார் விரைவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ளது. இதனால் சோதனை ஓட்டத்தில் இந்த டஸ்டர் பிஎஸ்6 கார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. புனே அருகே முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் கிட்டத்தட்ட பிஎஸ்4 வெர்சனின் வெளிப்புற தோற்றத்தை தான் கொண்டுள்ளது.

சக்கரங்களின் ரிம்கள் கூட மறைப்பட்டு ரெனால்ட் டஸ்டர் பிஎஸ்6 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

அதேபோல் முந்தைய மாடலின் சக்கரங்களை தான் இந்த காரும் கொண்டிருப்பது பார்த்தாலே தெரிய வருகிறது. இருப்பினும் அவை மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளன. மற்ற முன்னணி நிறுவனங்களை போன்று தனது மாடல்களையும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்துவரும் ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து க்விட், ட்ரைபர், டஸ்டர், கேப்சர் மற்றும் லாட்ஜி என ஐந்து மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவற்றில் வாடிக்கையாளர்களின் முதல் விருப்பமான காராக டஸ்டர் மாடல் தான் விளங்குகிறது.

சக்கரங்களின் ரிம்கள் கூட மறைப்பட்டு ரெனால்ட் டஸ்டர் பிஎஸ்6 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

சமீபத்தில் அறிமுகப்படுத்த க்விட் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் மற்றும் ட்ரைபர் மாடலின் 7 இருக்கை வெர்சன் கார்களுக்கு பிறகு இனி அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மாடல்களும் பிஎஸ்6 தரத்தில் தான் இருக்கும் என ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே உறுதியளித்திருந்தது.

சக்கரங்களின் ரிம்கள் கூட மறைப்பட்டு ரெனால்ட் டஸ்டர் பிஎஸ்6 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

அதுமட்டுமின்றி இந்நிறுவனம் டஸ்டர் மாடலை உலகம் முழுவதும் வெவ்வேறான உமிழ்வு விதிக்கு ஏற்ப தயாரித்து விற்பனை செய்து வருவதால், டஸ்டர் காரை இந்திய பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்வது ஒன்றும் ரெனால்ட் நிறுவனத்திற்கு பெரிய சவால் இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள பல முன்னணி நிறுவனங்களும் தங்களது மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்ற பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

சக்கரங்களின் ரிம்கள் கூட மறைப்பட்டு ரெனால்ட் டஸ்டர் பிஎஸ்6 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

தற்போதைய டஸ்டர் கார் பிஎஸ்4 தரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளில் விற்பனையாகி வருகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பிஎச்பி மற்றும் 142 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த பெட்ரோல் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்படுகிறது.

Most Read:பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்.. காரணம் என்ன தெரியுமா?

சக்கரங்களின் ரிம்கள் கூட மறைப்பட்டு ரெனால்ட் டஸ்டர் பிஎஸ்6 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

டீசல் வேரியண்ட் காரில் உள்ள 1.5 லிட்டர் என்ஜின் இரு விதமான வெளியிடும் ஆற்றல் தேர்வுகளில் கிடைக்கிறது. ஒன்று, 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் 84 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறன். மற்றொன்று 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் 108 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறன் ஆகும். அதிக விலை கொண்ட டஸ்டரின் ஆர்எக்ஸ்இசட் 110 பிஎஸ் டீசல் வெர்சன் கார் மட்டும் கூடுதல் தேர்வாக 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

Most Read:இந்திய ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய நிலை இதுதான்... நவம்பர் மாதத்திற்கான கார் விற்பனை நிலவரம்

சக்கரங்களின் ரிம்கள் கூட மறைப்பட்டு ரெனால்ட் டஸ்டர் பிஎஸ்6 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த இரு என்ஜின் தேர்வுகளில் ரெனால்ட் நிறுவனம் பெட்ரோல் வேரியண்ட்டை மட்டும் தான் பிஎஸ்6-க்கு இணக்கமாக மாற்றுகிறது. வெளிநாட்டு சந்தைகளில் இந்நிறுவனம் டஸ்டரின் பெட்ரோல் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் என்ஜின் தேர்வுடன் புதியதாக 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுகளையும் வழங்கியுள்ளது. டஸ்டர் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டும் தான் விற்பனையாகவுள்ளதால், இந்த கூடுதல் என்ஜின் தேர்வுகள் இந்தியாவிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read:அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

சக்கரங்களின் ரிம்கள் கூட மறைப்பட்டு ரெனால்ட் டஸ்டர் பிஎஸ்6 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

ஒரு ஏடபிள்யூடி (முன் சக்கர பையாஸ்) வேரியண்ட்டும் சேர்த்து மொத்தம் 9 வேரியண்ட்களில் விற்பனையாகி வரும் ரெனால்ட் டஸ்டரின் பிஎஸ்4 மாடலின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ரூ.12.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்எக்ஸ்இசட் 110 பிஎஸ் டீசல் வேரியண்ட் தான் அதிகப்பட்ச விலையான ரூ.12.49 லட்சத்தை கொண்டுள்ளது. பிஎஸ்6 அப்டேட்டால் டஸ்டர் மாடலின் இந்த வேரியண்ட்களின் விலைகளில் கண்டிப்பாக மாற்ற இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Duster Petrol BS6 Spied
Story first published: Wednesday, December 4, 2019, 14:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X