இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா?

தந்தை, மகனுக்கு நள்ளிரவில் மிகவும் ஆச்சரியமான கிறிஸ்துமஸ் பரிசு ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிசம்பர் 25) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உங்களுக்கு ஏராளமான பரிசுகள் கிடைத்திருக்கலாம். எனினும் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த ஒரு தந்தைக்கும், மகனுக்கும் கிடைத்ததை போன்றதொரு பரிசு உங்களுக்கு கிடைத்திருக்குமா? என்பது நிச்சயமாக சந்தேகமே.

இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா?

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்டெர்லிங் பேக்கஸ். லம்போர்கினி நிறுவனத்தின் தீவிர ரசிகர்களில் இவரும் ஒருவர். லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பர் கார்களுக்கு என உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் இங்கே ஆச்சரியம் என்னவென்றால், ஸ்டெர்லிங் பேக்கஸின் மகனும் லம்போர்கினி ரசிகர்தான்.

இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா?

ஸ்டெர்லிங் பேக்கஸின் மகன் சேண்டருக்கு 12 வயதுதான் ஆகிறது. ஆனால் இப்போதே அவர் லம்போர்கினி கார்களின் மீது காதல் கொண்டவராக உள்ளார். ஸ்டெர்லிங் பேக்கஸ் மற்றும் அவரது மகன் சேண்டரின் பெயர்கள் பத்திரிக்கைகளில் வருவது இது முதல் முறை ஒன்றும் கிடையாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவர்கள் இருவரும் இன்டர்நெட் சென்சேஷனாக உருவெடுத்தனர்.

இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா?

லம்போர்கினி நிறுவனத்தின் கார்கள் மீது அவர்கள் கொண்டிருந்த காதல்தான் அதற்கு காரணம். பார்க்க அச்சு அசலாக லம்போர்கினி அவென்டெடார் எஸ்வி (Lamborghini Aventador SV) காரை போன்றே இருக்கும் ஒரு பிரதியை அவர்கள் இருவரும் கட்டமைத்தனர். இது உண்மையான லம்போர்கினி அவென்டெடார் எஸ்வி கிடையாது.

இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா?

அதனை போன்றே இருக்கும் பிரதிதான் என்றாலும், அனைவரின் கவனத்தையும் இந்த கார் ஈர்த்தது. தங்கள் வீட்டின் கராஜில் வைத்து, லம்போர்கினி அவென்டெடார் எஸ்வி காரின் பிரதியை அவர்கள் உருவாக்கினர். இதன் காரணமாக இணையத்தில் மிகவும் பிரபலமான நபர்களாக அவர்கள் உருவெடுத்தனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்தன.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா?

அவர்கள் உருவாக்கிய பிரதி பார்ப்பதற்கு உண்மையான காரை போன்றே இருந்ததுடன் மட்டுமல்லாது, அதை ஓட்டவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு. ஆம், 2003 செவர்லே கோர்வெட்டே காரின் 5.7 லிட்டர் ஜிஎம் எல்எஸ்1 இன்ஜின் அந்த பிரதி காரில் பொருத்தப்பட்டிருந்தது. எனவே இந்த கார் இணையத்தின் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா?

இந்த சூழலில் குறிப்பிடத்தக்க வகையில் அவென்டெடார் எஸ்வி காரினுடைய பிரதியை உருவாக்கியதற்காக, ஸ்டெர்லிங் பேக்கஸ் மற்றும் அவரது மகன் சேண்டருக்கு வெகுமதி அளிக்க லம்போர்கினி நிறுவனம் முடிவு செய்தது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், ஸ்டெர்லிங் பேக்கஸையும், சேண்டரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது லம்போர்கினி நிறுவனம்.

இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா?

ஸ்டெர்லிங் பேக்கசும், சேண்டரும் லம்போர்கினி நிறுவனத்தின் 2019 கிறிஸ்துமஸ் வீடியோவின் ஸ்டார்களாக உருவெடுத்துள்ளனர். லம்போர்கினி நிறுவனம் ஸ்டெர்லிங் பேக்கஸை எப்படி தொடர்பு கொண்டது? அவரால் மறுக்க முடியாத வகையில் என்ன ஆஃபரை அவருக்கு கொடுத்தது என்பதை இந்த வீடியோ நமக்கு விளக்குகிறது.

இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா?

கிறிஸ்துமசுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக, லம்போர்கினி நிறுவனத்தை சேர்ந்த ஒரு குழு ஸ்டெர்லிங் பேக்கஸின் வீட்டிற்கு வந்துள்ளது. பின்னர் அங்கிருந்த கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லம்போர்கினி அவென்டெடார் எஸ்வி காரின் பிரதியை எடுத்து விட்டனர். அதற்கு பதிலாக உண்மையான லம்போர்கினி அவென்டெடார் எஸ் ரோட்ஸ்டர் (Lamborghini Aventador S Roadster) காரை நிறுத்தி விட்டனர்.

ஸ்டெர்லிங் பேக்கஸின் மகன் சேண்டருக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக லம்போர்கினி குழுவினர் இதனை செய்தனர். தந்தையும், மகனும் சுமார் 2 வார காலம் அனுபவிப்பதற்காக அவென்டெடார் எஸ் ரோட்ஸ்டர் காரை லம்போர்கினி நிறுவனம் அங்கு விட்டு சென்றுள்ளது. இந்த கருப்பு நிற கார் பண்டிகை காலத்தை அக்குடும்பத்துடன் செலவிடும்.

உடனே நாமும் ஒரு லம்போர்கினியின் பிரதியை உருவாக்குவோம் என முடிவு செய்து விடாதீர்கள். ஏனெனில் பொதுவாக லம்போர்கினி நிறுவனம் தனது சூப்பர் கார்களின் பிரதிகளை உருவாக்குபவர்களுக்கு ரசிகர் எல்லாம் கிடையாது. ஆனால் தங்கள் நிறுவனத்தின் மீதான ஸ்டெர்லிங் பேக்கஸ் மற்றும் அவரது மகன் சேண்டரின் பேஷனுக்காக இந்த சிறப்பினை செய்துள்ளது லம்போர்கினி.

கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு லம்போர்கினி நிறுவனம் மட்டும் இப்படி ஒரு பரிசை வழங்கவில்லை. ஆடி நிறுவனமும் சமீபத்தில் அசத்தலான பரிசுகளை வழங்கியிருந்தது. அந்த பரிசுகள் யாருக்கு வழங்கப்பட்டது? என்ன பரிசுகள்? என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது உறுதி. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்றுதான் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் முன்னதாகவே வந்து விட்டது!! ஆம், அவர்கள் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் திளைக்க தொடங்கி விட்டனர்.

கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் ஃபுட்பால் கிளப் பற்றி யாருக்கும் நிச்சயமாக அறிமுகமே தேவைப்படாது. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட ரியல் மாட்ரிட் அணிக்காக, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்களும் விளையாடி கொண்டுள்ளனர். எனவே உலகம் முழுக்க ரசிகர்களை கொண்ட அணியாக ரியல் மாட்ரிட் உள்ளது.

கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

ரியல் மாட்ரிட் அணி வீரர்களுக்கு ஆடி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்களை பரிசாக வழங்கியுள்ளது. ரியல் மாட்ரிட் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஆடி நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சம்பிரதாயம் இது என்பது சுவாரஸ்யமான விஷயம். ரியல் மாட்ரிட் வீரர்கள் தங்களுக்கு விருப்பமான மாடலை விரும்பிய நிறத்தில் தேர்வு செய்து கொள்ளலாம்.

கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

ஆடி நிறுவனம் கிறிஸ்துமஸ் பரிசாக அவர்களுக்கு அந்த காரை வழங்கும். ரியல் மாட்ரிட் பயிற்சியாளரான ஜினடின் ஜிடேன் இருப்பதிலேயே மிகவும் விலை குறைவான மாடலை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனும், ஸ்பெயின் தேசிய அணியின் டிபெண்டருமான செர்ஜியோ ராமோஸ் விலை உயர்வான மாடலை தேர்வு செய்துள்ளார்.

கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

அவர் ஆடி ஏ8 50 டிடிஐ குவாட்ரோ டிப்ட்ரோனிக் (Audi A8 50 TDI Quattro Tiptronic) காரை தேர்ந்து எடுத்துள்ளார். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 81 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. ஸ்பெயினை சேர்ந்த செய்திதாளான ஏஇஸட் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. ரியல் மாட்ரிட்டின் மற்ற சூப்பர்ஸ்டார்கள் தேர்வு செய்த கார்கள் குறித்து இனி பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

ஜெர்மனியை சேர்ந்த மிட்-பீல்டரான டோனி க்ரூஸ், ஆடி க்யூ8 50 டிடிஐ குவாட்ரோ டிப்ட்ரோனிக் (Audi Q8 50 TDI Quattro Tiptronic) காரை தேர்வு செய்துள்ளார். இந்திய மதிப்பில் இந்த காரின் விலை சுமார் 69 லட்ச ரூபாய். அதே சமயம் இங்கிலீஷ் கிளப்பான செல்சாவில் இருந்து ரியல் மாட்ரிட் அணியில் சமீபத்தில் இணைந்தவரான ஈடன் ஹசார்டும் டோனி க்ரூஸ் தேர்வு செய்த காரைதான் வாங்கியுள்ளார்.

கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

உண்மையில் கால்பந்து வீரர்கள் மத்தியில், ஆடி க்யூ8 50 டிடிஐ குவாட்ரோ டிப்ட்ரோனிக் மிகவும் புகழ்பெற்ற மாடலாக இருப்பது போல்தான் தெரிகிறது. ஏனெனில் ஜேம்ஸ் ரோட்ரிக்சும் அதே காரைதான் தேர்ந்து எடுத்துள்ளார். அதே நேரத்தில் பிரான்ஸ் டிபெண்டரான ரபேல் வர்னே, சிகப்பு நிற ஆடி இ-ட்ரான் 55 குவாட்ரோ (Audi e-tron 55 Quattro) காரை தேர்ந்து எடுத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக 67 லட்ச ரூபாய். அதே சமயத்தில் பிரேசிலை சேர்ந்த வினீசியஸ் ஜூனியர், ஆடி ஏ7 ஸ்போர்ட்பேக் 50 டிடிஐ குவாட்ரோ டிப்ட்ரோனிக் (Audi A7 Sportback 50 TDI Quattro Tiptronic) காரை தேர்வு செய்துள்ளார். இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக 63 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் விலை உயர்ந்த லக்ஸரி கார்களை ஆடி பரிசாக வழங்கியுள்ளதால், ரியல் மாட்ரிட் வீரர்கள் தற்போது உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். கால்பந்து விளையாட்டின் மூலமாக அதிகப்படியான வருமானம் கிடைத்து வரும் சூழலில், இப்படி ஒரு கிறிஸ்துமஸ் பரிசு கிடைக்க உண்மையில் அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Most Read Articles
English summary
Christmas Gift: Lamborghini Gives Aventador S Roadster To Father And Son - Here Is Why. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X