டெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...

டெல்லி விமான நிலையத்தை, புல்லட் புரூஃப் ராணுவ வாகனங்கள் வட்டமிட்டு வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...

இந்திய கார் மார்க்கெட்டில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வரும் நிறுவனம் மஹிந்திரா. தற்போதைய நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ, மராஸ்ஸோ, அல்டுராஸ் ஜி4, எக்ஸ்யூவி500 மற்றும் எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்கள், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. கார்கள் தவிர பாதுகாப்பு வாகன செக்மெண்ட்டிலும் மஹிந்திரா நிறுவனம் ''ஆக்டிவ்'' ஆக இருக்கிறது.

டெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...

இந்தியாவின் முதல் கேப்சூல்-பேஸ்டு புல்லட் புரூஃப் வாகனத்தை (Capsule-based Bulletproof Vehicle), மஹிந்திரா டிபென்ஸ் சிஸ்டம்ஸ்தான் (Mahindra Defence Systems) தயாரித்தது. கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அந்த வாகனத்திற்கு மஹிந்திரா மார்க்ஸ்மேன் (Mahindra Marksmen) என பெயர் சூட்டப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...

இது கவச வாகனம் (Armoured Vehicle) ஆகும். மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனத்தை, இந்தியாவை சேர்ந்த பல்வேறு பாதுகாப்பு படைகள், கடந்த 2009ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகின்றன. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படைகளும் கூட, மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனத்தை தேர்வு செய்துள்ளன.

டெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...

ஐஇடி வகை வெடிகுண்டுகள் (Improvised Explosive Device-IED) மற்றும் மெஷின் கன்கள் (Machine Guns) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதனை தாங்கும் திறன் மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனத்திற்கு உள்ளது. இதில், 4X4 சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே மிக சவாலான நிலப்பரப்புகளிலும் கூட மஹிந்திரா மார்க்ஸ்மேன் மிக எளிதாக பயணிக்கும்.

MOST READ: உலகை அசத்தப்போகும் டொயோட்டாவின் புதிய கார் இதுதான்... மார்க்கெட்டில் கெத்தாக களமிறங்குகிறது...

டெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...

மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனத்தின் மொத்த எடை சுமார் 3,200 கிலோ. இதில், அதிகபட்சமாக டிரைவர் உள்பட 6 பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். முழு லோடு இருக்கும் சமயத்திலும், அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கும் திறன் மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனத்திற்கு உள்ளது.

டெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...

இந்த சூழலில், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Forces-CISF) தற்போது 6 மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனங்களை வாங்கியுள்ளது. சுருக்கமாக சிஐஎஸ்எப் என அழைக்கப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படைதான் அரசு, தனியார் நிறுவனங்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே 6 மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனங்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை வாங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தனது வளாகத்திற்குள் புல்லட் புரூஃப் வாகனங்களை பெற்ற முதல் விமான நிலையம் என்ற பெருமையை ஐஜிஐ பெறுகிறது.

டெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்தான் சுருக்கமாக ஐஜிஐ எனவும் (Indira Gandhi International Airport- IGI) அழைக்கப்படுகிறது. புதிதாக வந்துள்ள 6 மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனங்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் குயிக் ரியாக்ஸன் டீமில் (Quick Reaction Team- QRT) இணைந்துள்ளன.

MOST READ: தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

டெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...

மத்திய தொழில் பாதுகாப்பு படையானது ஏற்கனவே பல்வேறு நகரங்களில் சில மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனங்களை பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கொல்கத்தா போலீஸ் படையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. அத்துடன் மும்பையின் ஃபோர்ஸ் ஒன் (Force One) போலீஸ் படையும் இதே வாகனத்தை பயன்படுத்தி வருகிறது. மஹிந்திரா மார்க்ஸ்மேன் தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மார்க்ஸ்மேன் கவச வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் கஸ்டமைஸ் செய்து வழங்குகிறது. எனவே கஸ்டமைசேஷன் லெவலை பொறுத்து மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனத்தின் விலை ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சத்திற்குள் இருக்கும். மிகவும் பிஸியான டெல்லி விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, மஹிந்திரா மார்க்ஸ்மேன் கவச வாகனங்கள் அங்கு களமிறக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Image Courtesy: CISF

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
CISF Acquired Six Mahindra Marksman Armoured Vehicle For The Security Of Delhi Airport. Read in Tamil
Story first published: Monday, March 18, 2019, 13:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more