விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சிட்ரோவன் கார்: அச்சத்தில் ஹூண்டாய், நிஸான் நிறுவனம்...!

கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிஎஸ்ஏ நிறுவனம் தனது சிட்ரோவன் பிராண்டில் தயாரிக்கப்பட்டு வரும் சிட்ரோவன் சி3 கார்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சிட்ரோவன் கார்: அச்சத்தில் ஹூண்டாய், நிஸான் நிறுவனம்...!

பிரெஞ்ச் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிஎஸ்ஏ குழுமம் கார் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, இந்த குழுமம் சிட்ரோவன் என்னும் பிராண்டில் கார்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகின்றது. இந்த நிறுவனம் பட்ஜெட் மற்றும் சொகுசு கார் விற்பனையில் ஏற்கனவே உலகம் முழுவதும் கொடிகட்டி பறந்து வருகிறது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சிட்ரோவன் கார்: அச்சத்தில் ஹூண்டாய், நிஸான் நிறுவனம்...!

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிஎஸ்ஏ குழுமத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியீட்டு கூட்டத்தில், அந்நிறுவனத்தின் நிர்வாக கமிட்டியின் தலைவர் கார்லோஸ் தவேர்ஸ், வருகின்ற 2021-22 ஆம் ஆண்டிற்குள் இந்தியக் கார் சந்தையில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார். இதற்கான நடவடிக்கையில் அந்நிறுவனம் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சிட்ரோவன் கார்: அச்சத்தில் ஹூண்டாய், நிஸான் நிறுவனம்...!

இதைத்தொடர்ந்து, சிட்ரோவன் கார்களை இந்தியாவில் பிரபலம் செய்யும்விதமாக, புதிய விற்பனை நிலையங்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை நிறுவுவதற்கான பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சிட்ரோவன் கார்: அச்சத்தில் ஹூண்டாய், நிஸான் நிறுவனம்...!

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சிஇஓ லிண்டா ஜேக்சன் கூறியதாவது, "உலகம் முழுவதும் எங்களது புதிய தயாரிப்புகளான சிட்ரோவன் சி5 ஏர்கிராஸ் மற்றும் சி5 ஏர்கிராஸ் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதன்மூலம், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் கார் சந்தையான இந்தியா, சீனா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எங்ளது புதிய தயாரிப்புகளை வெகுவிரைவில் அறிமுகம் செய்யப்படும்" என்றார்.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சிட்ரோவன் கார்: அச்சத்தில் ஹூண்டாய், நிஸான் நிறுவனம்...!

தற்போது இந்த நிறுவனம் புதியதாக தயாரித்துள்ள எஸ்யூவி ரக சி5 ஏர்கிராஸ் காரை பரிசோதித்து வருகின்றது. இதேபோன்று, சிட்ரோவன் சி3 ஏர்கிராஸ் பி செக்மெண்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காகவும் அந்த நிறுவனம் பரிசோதனைச் செய்து வருகிறது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சிட்ரோவன் கார்: அச்சத்தில் ஹூண்டாய், நிஸான் நிறுவனம்...!

எஸ்யூவி ரகத்தில் உருவாகியிருக்கும் சிட்ரோவன் சி3 ஏர்கிராஸ் கார் அந்த நிறுவனத்தின் சி3 ஹேட்ச்பாக் காரை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சி5 ஏர்கிராஸ், ஸ்டைலிஷாகவும், பெரிய உருவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் குரோம் கிரில், டுவின் பார்ட் மெஸ் அமைப்புடைய பெரிய அளவிலான பம்பர்கள் இடம்பெற்றுள்ளன.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சிட்ரோவன் கார்: அச்சத்தில் ஹூண்டாய், நிஸான் நிறுவனம்...!

இதேபோன்று, டிஆர்எல் தொழில்நுட்பம் கொண்டான ஸிம்மான முகப்பு விளக்கு, ரெக்டாங்குலர் வடிவத்தில் எல்இடி பனி விளக்கு, வளைவான வீல் ஆகியவை சிறப்பம்சமாக இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரின் உட்புறத்திலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. டச்-ஸ்கிரீன் இன்போடெயிண்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், மல்டிபிள் ஏர்பேக், மல்டி ஃபங்க்சன் ஸ்டியரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சிட்ரோவன் கார்: அச்சத்தில் ஹூண்டாய், நிஸான் நிறுவனம்...!

சிட்ரோவன் சி3 ஏர்கிராஸ் கார் இரண்டு விதமான எஞ்ஜின்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. 129பிஎச்பி பவர் கொண்ட, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 118பிஎச்பி திறன்கொண்ட 1.6 லிட்டர் டீசல் எஞ்ஜினில் கிடைக்கின்றது. இந்த இரண்டு எஞ்ஜின்களும் டிரான்மிஷன் ஆப்ஷனில் ஆறு-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆறு ஸ்பீடு ஆடோமேடிக் எஞ்ஜின்களில் கிடைக்கும்.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சிட்ரோவன் கார்: அச்சத்தில் ஹூண்டாய், நிஸான் நிறுவனம்...!

இந்த சிட்ரோவன் சி3 மாடல் கார் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா, நிஸானின் கிக்ஸ், ரெனால்டின் டஸ்டர் மற்றும் அப்கமிங் மாடலான கியாவின் எஸ்பி2ஐ கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளது. இதனால், இந்த கார் போட்டி கார்களின் விலையைக் காட்டிலும் சற்று குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோவன்
English summary
Citroen C3 Car Will Launch Soon In India. Read In Tamil.
Story first published: Wednesday, March 6, 2019, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X