சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது?

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது?

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் மீண்டும் கார் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. தனது கீழ் செயல்படும் சிட்ரோன் கார்களுடன் இந்திய சந்தையில் இரண்டாவது இன்னிங்சை ஆடுவதற்கு தயாராகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சிட்ரோன் பிராண்டில் முதல் மாடலாக வர இருக்கும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது?

வரும் 2021ம் ஆண்டு முதல் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டம் வைத்திருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கான வரவேற்பை பார்த்து இதுதான் இந்திய சந்தையில் நுழைவதற்கான சரியான தருணம் என்று கருதுகிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது?

அதன்படி, அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் முதல் கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி செப்டம்பர்- நவம்பர் இடையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்பு உறுதியாகி இருக்கிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது?

அண்மையில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் சென்னை சாலைகளில் வைத்து சோதனைகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த கார் பார்ப்பதற்கு மிக பிரம்மாண்டாகவும், வசீகரமான தோற்றத்துடன் இருக்கிறது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது?

முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், வயர்லெஸ் சார்ஜர், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹைட்ராலிக் சஸ்பென்ஷன், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது?

இந்த கார் திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில்தான் முதலில் உற்பத்தி செய்யப்படும். பின்னர், புதிய ஆலை அமைத்த பிறகு உற்பத்தி மாற்றப்பட உள்ளது. இந்தியாவில் கார் எஞ்சின்களுக்கான பிரத்யேக ஆலையை ஓசூரில் ஏற்கனவே பிஎஸ்ஏ குழுமம் திறந்து உற்பத்தி நடந்து வருகிறது. சென்னையில் தனது தொழில்நுட்ப மையத்தையும் அமைத்துள்ளது பிஎஸ்ஏ குழுமம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது?

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் ரூ.16 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியான விலையில் நிலைநிறுத்தப்படும்.

Source: Business Standard

Most Read Articles
மேலும்... #சிட்ரோன்
English summary
French car maker, Citroen will launch of it's first car model in India by second half of next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X