டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

மும்பையை சேர்ந்த டிசி டிசைன் நிறுவனம் கார் கஸ்டமைஸ் செய்வதில் பெயர் பெற்று விளங்குகிறது. அவ்வப்போது அறிமுகமாகும் புதிய கார்களை தனது கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாற்றிக் காட்டி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

குறிப்பாக, டொயோட்டா இன்னோவா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய கார்களில் டிசி டிசைன் நிறுவனம் செய்த கஸ்டமைஸ் வேலைப்பாடுகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகிறது.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்த மஹிந்திரா மராஸ்ஸோ காரில் தனது கைவண்ணத்தை காட்டி அசத்தியது. அந்த காரை மஹிந்திரா நிறுவனமே நேரடியாக டிசி டிசைன் நிறுவனத்துடன் இணைந்து கஸ்டமைஸ் செய்து காட்சிப்படுத்தியது.

இந்த நிலையில், அதன் இன்டீரியர்வேலைப்பாடுகள் குறித்த வீடியோ தற்போது வெளியாகி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரோட்ஸ்டெர் அருண் என்பவர் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் எம்-8 என்ற டாப் வேரியண்ட்டில்தான் இந்த கஸ்டமைஸ் பணிகளை டிசி நிறுவனம் செய்துள்ளது. உட்புறத்தில் ஏராளமான கஸ்டமைஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. க்ரீம் மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் அலங்கார மரத்தகடுகள் மற்றும் க்ரோம் வேலைப்பாடுகளுடன் அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. ஸ்டீயரிங் வீலிலும் அலங்காரம் கவர்கிறது. அடுத்து, க்ரீம் வண்ணத்திலான இருக்கைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

இதுபோன்று கஸ்டமைஸ் செய்பவர்கள் ஓட்டுனர் வைத்து அடிக்கடி வெளியூர் செல்லும் தொழிலதிபர்கள் என்பதை மனதில் வைத்து, நடுவரிசையில் சாய்மான வசதியுடன் கூடிய இரண்டு புஷ்பேக் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியும் உள்ளது.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு நடுவில் ஆர்ம் ரெஸ்ட்டிலேயே கன்ட்ரோல் பேனல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு இருக்கை பயணிகளுக்கும் தனித்தனி சிறிய டிவி திரை பொருத்தப்பட்டு இருப்பதுடன், அதனை கன்ட்ரோல் பேனல் மூலமாக கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

இந்த ஆர்ம் ரெஸ்ட்டில் சிறிய ஸ்டோரேஜ் அறை மற்றும் கப் ஹோல்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் சர்ரவுண்ட் ஏசி சிஸ்டம் இருப்பதால், டிசி நிறுவனம் கூடுதல் ஏசி வென்ட்டுகளுக்காக மெனக்கெடவில்லை.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

டொயோட்டா இன்னோவா மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய கார்களை கஸ்டமைஸ் செய்த மாடலில் மூன்றாவது வரிசையை டிசி நிறுவனம் தூக்கி விடுவதுண்டு. ஆனால், இது மஹிந்திரா வசம் இருந்த வந்த ஆர்டர் என்பதாலோ என்னவோ, மூன்றாவது வரிசை இருக்கையும் இடம்பெற்று இருக்கிறது.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

எனவே, இந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட காரில் டிரைவர் உள்பட 7 பேர் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. யுஎஸ்பி சார்ஜர்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், நீண்ட தூர பயணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

இந்த காரின் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த காரில் 1.5 லிட்டர் எம்-ஹாக் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

இந்த கஸ்டமைஸ் மஹிந்திரா மராஸ்ஸோ காரை மஹிந்திரா டீலர் வாயிலாகவும் புக்கிங் செய்து வாங்க முடியும். இதற்கான கட்டண விபரங்களை மஹிந்திரா டீலர்களில் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Custom Mahindra Marazzo By DC Design - Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X