தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்த டட்சன்... தள்ளுபடிகளை பெறும் கார்கள் இவைதான்

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான டட்சன், தனது தயாரிப்பு கார்களுக்கு ரூ.62,000 வரையில் தீபாவளி விழா காலத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகையின்படி ஒவ்வொரு மாடல் கார் மற்றும் அவற்றின் வேரியண்ட்களும் ஒவ்வொரு விதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறுகின்றன.

இந்த சலுகை அறிவிப்பில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் கார்ப்பிரேட் தள்ளுபடிகள் போன்றவை அடங்குகின்றன. தீபாவளிக்கு டட்சன் நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ள மாடல் கார்களை இனி பார்க்கலாம்.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்த டட்சன்... தள்ளுபடிகளை பெறும் கார்கள் இவைதான்

டட்சன் ரெடி-கோ

டட்சனின் எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலான ரெடி-கோ-விற்கு இந்நிறுவனம் ரூ.62,000 வரையில் சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் ரூ.27,000க்கு பணம் தள்ளுபடி, ரூ.30,000 வரையில் எக்ஸ்சேன்ஞ் போனஸ் (வேரியண்ட்டை பொறுத்து) மற்றும் 5,000 ரூபாய்க்கு கார்ப்பிரேட் தள்ளுபடிகள் இடம் பெற்றுள்ளன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்த டட்சன்... தள்ளுபடிகளை பெறும் கார்கள் இவைதான்

இரு என்ஜின் தேர்வுகளுடன் வெளியாகும் இந்த ரெடி-கோ மாடலின், மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 800சிசி பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 53.2 பிஎச்பி பவர் மற்றும் 72 என்எம் டார்க் திறனையும், அதே மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 67 பிஎச்பி மற்றும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்த டட்சன்... தள்ளுபடிகளை பெறும் கார்கள் இவைதான்

இரு என்ஜின் தேர்வுகளும் ஐந்து வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் ஐந்து வேக நிலைகளை வழங்க கூடிய ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்த டட்சன்... தள்ளுபடிகளை பெறும் கார்கள் இவைதான்

டட்சன் கோ

இந்த தீபாவளியில் கோ ஹேட்ச்பேக் மாடல் ரூ.32,000 வரையிலான சலுகைகளுடன் விற்பனையாகவுள்ளது. இந்த சலுகையில், ரூ.10,000 பணம் தள்ளுபடி, ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் (வேரியண்ட்டை பொறுத்து) மற்றும் ரூ.2,000க்கு கார்ப்பிரேட் தள்ளுபடி போன்றவை அடங்கும்.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்த டட்சன்... தள்ளுபடிகளை பெறும் கார்கள் இவைதான்

கோ ஹேட்ச்பேக் மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி பவர் மற்றும் 104 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜினுடன் ஐந்து வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இரு தேர்வுகளாக உள்ளது. இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பின் மூலம் கோ காரின் என்ஜின் 75.9 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

Most Read:அதிர்ச்சி... சபரிமலையில் பொன்னாரை தடுத்து நிறுத்தி ஹீரோவான ஐபிஎஸ் அதிகாரி என்ன செய்தார் தெரியுமா?

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்த டட்சன்... தள்ளுபடிகளை பெறும் கார்கள் இவைதான்

டட்சன் கோ ப்ளஸ்

கோ ப்ளஸ் எம்பிவி காருக்கு ரூ.29,000 வரையில் டட்சன் நிறுவனம் தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் ரூ.7,000 வரையிலான பணம் தள்ளுபடியும் ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேன்ஞ் போனஸும் (வேரியண்ட்டை பொறுத்து) 2,000 ரூபாய்க்கு கார்ப்பிரேட் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்த டட்சன்... தள்ளுபடிகளை பெறும் கார்கள் இவைதான்

இந்த எம்பிவி கார், மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.2 லிட்டர் என்ஜினில் கோ ஹேட்ச்பேக் வெளிப்படுத்த கூடிய ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பும் கோ மாடலின் தேர்வுகளிலேயே அமைந்துள்ளது.

Most Read:எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய விளம்பர தூதராக பிரபல ஹாலிவுட் நடிகர் நியமனம்

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்த டட்சன்... தள்ளுபடிகளை பெறும் கார்கள் இவைதான்

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் இந்த விழா காலத்தில் விற்பனை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய இந்த அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் நிச்சயமாக உதவும். டட்சனின் இந்த சலுகைகள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிவிடி வேரியண்ட்களை வாடிக்கையாளர்கள் இடையே பிரபலமும் படுத்தும் என்பது உறுதி.

Most Read Articles

மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun Diwali Discount Offers: Festive Benefits Available Across Models
Story first published: Thursday, October 24, 2019, 19:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X