வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை டட்சன் நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. அதுமட்டுமின்றி, பட்ஜெட் விலையில் டட்சன் இந்த அம்சத்தை அறிமுகம் செய்திருப்பதால் போட்டி நிறுவனங்கள் வாயடைத்து நின்றுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

நிஸான் நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக செயல்பட்டு வரும் டட்சன் நிறுவனம், ஜப்பானின் தலைநகரான டோக்யோவை தலைமையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. உலகில் இயங்கிவரும் பழமையான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

இந்நிறுவனம், உலகின் பல நாடுகளில் அதற்கான சந்தையை விரிவாக்கம் செய்துள்ளது. அந்தவகையில், இந்தியாவிலும் தனக்கென ஓர் இடத்தை பிடித்து வைத்துள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

இந்நிலையில், டட்சன் நிறுவனம், அதன் பிரபல மாடல்களான கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களில் சிவிடி ஆப்ஷனை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய ஆப்ஷனிலான டட்சன் மாடல்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 5.94 லட்சம் (டட்சன் கோ சிவிடி) மற்றும் ரூ. 6.58 லட்சம் (டட்சன் கோ பிளஸ் சிவிடி) என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

அதேசமயம், இந்த சிவிடி ஆப்ஷனானது டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் டாப் ஸ்பெக் மாடல்களில் கிடைக்க இருக்கின்றது. அந்தவகையில், டி மற்றும் டி (ஓ) ஆகிய டாப் ஸ்பெக் மாடல்களில் இந்த ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

இந்த டி மற்றும் டி (ஓ) ஆகிய இரு வேரியண்டுகளிலும் ஒரே மாதிரியான எஞ்ஜின்தான் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் அமைப்புடைய பெட்ரோல் எஞ்ஜின் இடம்பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக, 75 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது..

இந்த திறனானது சாதாரண மாடலைக் காட்டிலும் 9 பிஎச்பி பவரை அதிகம் வெளிப்படுத்தும் வகையிலான திறனைப் பெற்றுள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

சிவிடி எஞ்ஜின் தேர்வை டட்சன் கோ ட்வின் மாடல்கள் பெறுவது இதுவே முதல் முறையாகும். இத்துடன் கார்களில் குறைந்த மற்றும் அதீத திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் ஸ்போர்ட் மோட் உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களைத் தவிர வேறெந்த மாற்றங்களும் டட்சன் கோ ட்வின் மாடல்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

ஆகையால், முன்பு காட்சியளித்த அதே தோற்றத்தில்தான் தற்போதைய சிவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வு கொண்ட டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் கார்கள் காட்சியளிக்கின்றன.

இதில், டாப் ஸ்பெக் மாடலாக காட்சியளிக்கும் டட்சன் கோ ட்வின் கார்களில் ஏராளாமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

அந்தவகையில், டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி மின் விளக்கு, பெரிய அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டத்தில் கூடுதல் சிறப்பு வசதியாக ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மென்பொருளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

MOST READ: இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: டாப் ரேட்டிங் கார்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

தொடர்ந்து பாதுகாப்பு வசதிக்காக இரு ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கார்களின் சிறப்பான தோற்றத்திற்காக 14 இன்ச் அலாய் வீல், கட்டுமஸ்தான உடல்வாகு மற்றும் கண் கவரும் வண்ணத் தேர்வு உள்ளிட்டவை உள்ளன.

MOST READ: சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா?

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் கார்களில் சிவிடி டிரான்ஸ்மிஷன் அறிமுகம்குறித்து நிஸான் நிறுவனத்தின் இயக்குநரான ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது,

"வாகனங்களை இயக்கும்போது கியரை அடிக்கடி மேனுவலாக மாற்ற விரும்பாத வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிவிடி தொழில்நுட்பத்தை இந்த கார்களில் நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். இது எங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என நாங்கள் நம்புகின்றோம்" என்றார்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

டட்சன் நிறுவனம், கோ மற்றும் கோ பிளஸ் கார்களை புது பொலிவு செய்யப்பட்ட மாடலாக கடந்த ஜுன் மாதம்தான் அறிமுகம் செய்தது. இவை அறிமுகம் செய்யப்பட்டபோது, மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே காணப்பட்டது.

எனவே, இந்த மாடலில் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வு இல்லாதது ஓர் குறையாகவே பார்க்கப்பட்டது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்!!!

இந்நிலையில், உயர் ரக தொழில்நுட்பமாக கருதப்படும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வை டட்சன் நிறுவனம் இரு கார்களிலும் அறிமுகம் செய்துள்ளது.

பெரும்பாலும் பட்ஜெட் கார்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வே வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக டட்சன் நிறுவனம், நடுத்தர விலையில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வை அறிமுகம் செய்துள்ளது.

Most Read Articles

மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun GO & GO+ CVT Launched In India: Prices Start At Rs 5.94 Lakh. Read In Tamil.
Story first published: Saturday, October 12, 2019, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X