பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்ஏ குழுமத்தின் சிட்ரோவன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிஎஸ் பிர

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கிராஸ்பேக் எஸ்யூவி கார் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்ஏ குழுமத்தின் சிட்ரோவன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிஎஸ் பிராண்டில் முதல் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

மேலும், டிஎஸ் பிராண்டின் டிஎஸ்-7 கிராஸ்பேக் எஸ்யூவி மாடலானது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்க அடையாளங்கள் எதுவும் மறைக்கப்படாத நிலையில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வரும் அந்த எஸ்யூவியின் ஸ்பை படங்கள் கார் அண்ட் பைக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

தோற்றத்தில் மிக கவர்ச்சியாக இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடலன் பிஎஸ்ஏ குழுமத்தின் EMP2 பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி மாடலானது கிராஸ்ஓவர் ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய டிஎஸ்-7 கிராஸ்பேக் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஹைப்ரிட் மாடலிலும் வரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய பிஎஸ்ஏ டிஎஸ்-7 எஸ்யூவியானது சொகுசு ரக கார்களுக்கு இணையான ரகத்தில் நிலைநிறுத்தப்படும். அதாவது, இந்தியாவில் ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 ஆகிய சொகுசு ரக எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய டிஎஸ்-7 எஸ்யூவி மாடலானது ரூ.600 கோடி முதலீட்டில் ஓசூரில் அமைக்கப்பட இருக்கும் பிஎஸ்ஏ குழுமத்தின் ஆலையில்தான் இந்த புதிய மாடல் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த எஸ்யூவி ரக காருக்கான எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்கள் ஓசூரில் அண்மையில் திறக்கப்பட்ட ஆலையிலிருந்து சப்ளை பெறப்படும். இந்த ஆலை ஆண்டுக்கு 3 லட்சம் டிரான்ஸ்மிஷன்களையும், 2 லட்சம் பிஎஸ்-6 மாசு தர எஞ்சின்களையும் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் சிட்ரோவன், வாக்ஸ்ஹால், ஓபெல் மற்றும் பீஜோ ஆகிய கார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சிட்ரோவன் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் டிஎஸ் பிராண்டில் முதல் கார் மாடலை இந்தியாவில் பிஎஸ்ஏ குழுமம் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #பீஜோ
English summary
Groupe PSA is said to be testing its DS7 Crossback SUV in the Indian market. The DS7 Crossback SUV has been spied testing in India for the first time by carandbike, ahead of its expected launch in 2020.
Story first published: Tuesday, January 8, 2019, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X