சென்னை அருகே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் சோதனை ஓட்டம்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சங்களுடன் கூடிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை அருகே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் சோதனை ஓட்டம்!

அனைத்து வாகன நிறுவனங்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட எஞ்சின்களுடன் கார்களை அறிமுகம் செய்வதில் மும்முரமாக உள்ளன. அந்த வகையில், அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு தனது ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் பிஎஸ்-6 எஞ்சின்களை பொருத்தி சோதனை செய்து வருகிறது.

சென்னை அருகே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் சோதனை ஓட்டம்!

இதுகுறித்த ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. சென்னை அருகில் வைத்து இந்த பிஎஸ்-6 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்பை படத்தை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது.

சென்னை அருகே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் சோதனை ஓட்டம்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிராகன் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை மட்டும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

சென்னை அருகே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் சோதனை ஓட்டம்!

ஆனால்,வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படாது என்று தகவல்கள் கூறுகின்றன.

சென்னை அருகே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் சோதனை ஓட்டம்!

விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால், 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினுக்கு விடை கொடுக்க ஃபோர்டு முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. எனினும், இந்த எஞ்சினுக்கு பதிலாக மஹிந்திரா கூட்டணியில் உருவாக்கப்படும் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

சென்னை அருகே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் சோதனை ஓட்டம்!

தற்போது இந்த 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் 1.0 லிட்டர் ஈக்கோஸ்போர்ட் இடத்தை பிடிக்கும் என்பதால், வாடிக்கையாளர்களின் ஏமாற்றத்தை தவிர்க்க முடியும்.

சென்னை அருகே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் சோதனை ஓட்டம்!

தற்போது சோதனை ஓட்டங்கள் துவங்கப்பட்டு விட்டாலும், மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒட்டியே அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிதான் பழமையான மாடலாக உள்ளது.

சென்னை அருகே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் சோதனை ஓட்டம்!

அடுத்த ஆண்டு பிஎஸ்-6 ஈக்கோஸ்போர்ட் மாடல் அறிமுகமாகும்போது புதிய பொலிவுடன் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்களை கவர முடியும் என்று ஃபோர்டு கருதுகிறது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
A test mule of the Ford EcoSport BS-VI compliant model, has been spotted testing on the outskirts of Chennai.
Story first published: Monday, September 2, 2019, 14:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X