TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
ஃபோர்டு ஃபிகோ கார் உற்பத்தி திடீர் நிறுத்தம்... காரணம் இதுதான்!
ஃபோர்டு ஃபிகோ கார் இந்திய சந்தையிலிருந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது. அதற்கான காரணங்களை பார்க்கலாம்.
இந்தியர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஃபோர்டு ஃபிகோ. கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் விற்பனையில் அசத்தியது. இதைத்தொடர்ந்து, 2015ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறந்த அம்சங்களை பெற்றிருந்தாலும், முதல் மாடலுக்கு கிடைத்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், புதிய ஃபிகோ கார் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதற்கு வழிவிடும் வகையில் பழைய மாடலை இந்திய சந்தையிலிருந்து ஃபிகோ காரை ஃபோர்டு விலக்கிக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது புதிய மாடல் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பழைய மாடலைவிட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாடல் வர இருக்கிறது.
புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. மேலும், டீசல் காரில் இருக்கும் 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது.
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.
வரும் மார்ச் மாதத்தில் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஃபோர்டு ஃபிகோ கார் சிறந்த கட்டமைப்பு தரம் மற்றும் எளிதான கையாளுமை கொண்ட மாடலாக வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. அதேபோன்று, புதிய மாடலும் பணத்திற்கு மதிப்பு மிக்க மாடலாக பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.