புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் அறிமுக தேதி விபரம்!

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு ஃபிகோ கார் இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கிறது.வரும் 15ந் தேதி இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த 2015ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் தலைமுறை மாடலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைன் மற்றும் அதிக சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், தற்போது புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு ஃபிகோ கார் இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் அறிமுக தேதி விபரம்!

வரும் 15ந் தேதி இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹனிகோம்ப் க்ரில் அமைப்பு, மாற்றங்கள் செய்யப்பட்ட ஹெட்லைட்டுகள், புதிய பம்பர் அமைப்பு ஆகியவை புதிய அம்சங்களாக இருக்கின்றன. அதேபோன்று, புதிய அலாய் வீல்களும் பொருத்தப்பட்டு வருகிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் உட்புறத்திலும் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபோர்டு சிங்க்-3 என்ற நவீன தொழில்நுட்ப வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது.

இந்த காரில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட செயலிகளையும் இந்த சாதனம் சப்போர்ட் செய்யும்.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், அதிவேக எச்சரிக்கை வசதி, சீட் பெல்ட் ரிமைன்டர் வசதிகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இடம்பெற இருக்கின்றன. டாப் வேரியண்ட்டில் அதிக ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் சேர்க்கப்பட இருக்கிறது. தவிரவும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் அறிமுக தேதி விபரம்!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடல் என்பது இதன் முக்கிய பலம்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Figo facelift India Launch Date Revealed.
Story first published: Saturday, March 9, 2019, 15:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X