புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதுப்பொலிவுடன் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்ட புதிய ஃபோர்டு ஃபிகோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

பழைய மாடலைவிட புதிய ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.70,000 குறைவான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. மேலும், வசதிகளை பொறுத்து ஆம்பியன்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் புளூ ஆகிய மூன்று விதமான வேரியண்ட்டுகள் மற்றும் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் வந்துள்ளது.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

டிசைனை பொறுத்தவரை சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் வந்துள்ளது. தேன்கூடு வடிவிலான புதிய க்ரில் அமைப்பு மற்றும் மறு சீரமைப்புடன் கூடிய பம்பர் அமைப்புடன் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஹெட்லைட் டிசைனிலும் சிறிய மாற்றங்கள் உள்ளது. 15 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

டைட்டானியம் புளூ வேரியண்ட்டில் கருப்பு வண்ண சைடு மிரர்கள், கருப்பு வண்ண முன்புற க்ரில் இடம்பெற்றுள்ளது. அத்துடன், வேறு வடிவமைப்பிலான அலாய் வீல்கள் மற்றும் கருப்பு வண்ண பாடி டீக்கெல் ஸ்டிக்கர்கல் கதவுகளிலும், பூட் ரூம் மூடியிலும் கொடுக்கப்பட்டு இருப்பது கவர்வதாக உள்ளது.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் டைட்டானியம் புளூ என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளன.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சாதனத்துடன் ஃபோர்டு நிறுவனத்தின் சிங்க் 3 செயலியுடன் இல்லை என்பது ஏமாற்றமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வில் வந்துள்ளது. புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இரண்டாவது பெட்ரோல் எஞ்சின் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும்.

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி ஆகிய பேஸ் வேரியண்ட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

விலை உயர்ந்த டைட்டானியம் புளூ வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், அட்ஜெஸ்ட் வசதியுடன் பின்புற ஹெட்ரெஸ்ட்டுகள் உள்ளன. பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலில் கூடுதலாக எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அ்சிஸ்ட் வசதிகள் உள்ளன.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய வண்ணங்களில் கிடைக்கும் என்பதுடன், இரட்டை வண்ணக் கலவையிலும் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் கிடைக்கும். இது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும் என நம்பலாம்.

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.5.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பழைய பேஸ் மாடலைவிட ரூ.70,000 வரை குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும். இந்த ரகத்தில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has launched the Figo facelift in India for the price of Rs 5.15 lakhs (ex-showroom Delhi).
Story first published: Friday, March 15, 2019, 15:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X