இந்தியர்களை கவர இரண்டு புதிய எஸ்யூவி கார்களை தயார் செய்யும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

ஃபோர்டு நிறுவனம், மூன்று புதிய எஸ்யூவி ரகத்திலான கார்களைத் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் இரண்டு எஸ்யூவி கார்கள் பிரத்யேகமாக இந்திய சந்தைக்காகவும், ஒன்று சர்வதேச சந்தையையும் கவனத்தில் தயாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியர்களை கவர இரண்டு புதிய எஸ்யூவி கார்களை தயார் செய்யும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோர்டு நிறுவனம், கார் தயாரிப்பில் மிகப் பெரிய ஜாம்பவானாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம், இந்தியாவை விட்டு விலக இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை தவிடு பொடியாக்கும் வகையில், ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகையை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியர்களை கவர இரண்டு புதிய எஸ்யூவி கார்களை தயார் செய்யும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

மேலும், இந்திய நிறுவனமான மஹிந்திராவுடன் இணைந்து ஃபோர்டு நிறுவனம் செயல்பட இருக்கின்றது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2017ம் ஆண்டிலேயே போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில், கார்களுக்கான தகவல் தொழில்நுட்ப மென்பொருள், எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

இந்தியர்களை கவர இரண்டு புதிய எஸ்யூவி கார்களை தயார் செய்யும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

இந்நிலையில், ஃபோர்டு நிறுவனம் இந்தியச் சந்தைக்கான கச்சிதமான இரு எஸ்யூவி மடாலையும், சர்வதேச தரத்திற்கேற்ப ஒரு எஸ்யூவி காரையும் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ஈடி ஆட்டோ ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்தியர்களை கவர இரண்டு புதிய எஸ்யூவி கார்களை தயார் செய்யும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

அந்தவகையில், ஃபோர்டு நிறுவனம், பிஎக்ஸ்744 என்ற மாதிரி பெயரில் புதிய எஸ்யூவி ரக காரைத் தயாரித்து வருகின்றது. இந்த காரை அதன் ஈகோ ஸ்போர்ட் எஸ்யூவி மாடலை ரீபிளேஸ் செய்யும் விதமாக தயாரித்து வருகின்றது. மேலும், இந்த எஸ்யூவி கார், சப்-4 மீட்டர் ரகத்திலான மாருதி ப்ரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் அப்கமிங் மாடலான வென்யூ ஆகிய எஸ்யூவி-க்களுக்கு போட்டியாக தயாராக இருக்கின்றது.

இந்தியர்களை கவர இரண்டு புதிய எஸ்யூவி கார்களை தயார் செய்யும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

இதேபோன்று, மற்றுமொரு மாடலான பிஎக்ஸ்745 எஸ்யூவி கார், 4 மீட்டருக்கு அதிகமான நீளத்தில் இருக்கும், ஹூண்டாயின் க்ரெட்டா மற்றும் ரெனால்ட் ட்ஸ்டர் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக தயாராகி வருகின்றது. இந்த இரு எஸ்யூவி கார்களையும் ஃபோர்டு நிறுவனம் தனியாகதான் தயாரிக்க இருக்கின்றது.

இந்தியர்களை கவர இரண்டு புதிய எஸ்யூவி கார்களை தயார் செய்யும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

இதில், பிஎக்ஸ்744 எஸ்யூவி ரக கார், பிரத்யேகமாக இந்திய சந்தையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. அந்தவகையில், இந்தியர்களின் எதிர்பார்ப்பான, அதிக இடவசதி மற்றும் சொகுசு ஆகியவற்றிற்கு பஞ்சமில்லாமல் இந்த கார் தயராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றுமொரு மாடலான பிஎக்ஸ்745 எஸ்யூவி கார் சர்வதேச சந்தையை மனதில் கொண்டு தயாரிக்கப்பட உள்ளது. அந்தவகையில், இந்த கார் சைனா மற்றும் பிரேசிலுக்கான ஸ்பெஷல் தாத்பரியங்களைப் பெற்று உருவாக இருக்கின்றது.

இந்தியர்களை கவர இரண்டு புதிய எஸ்யூவி கார்களை தயார் செய்யும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

இத்துடன், ஃபோர்டு நிறுவனம் மூன்றாவது ஒரு மாடலாக, அதன் சி-செக்மெண்டில் புதிய ரக எஸ்யூவி ஒன்றை பிரத்யேகமாக இந்தியர்களுக்காக தயாராக்க இருக்கின்றது. இந்த கார் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 500 காரின் பிளாட்பாரத்தில் வைத்து தயாராக்கப்பட இருக்கின்றது. இதன்மூலம், ஃபோர்டு நிறுவனம் சார்பில் இந்தியச் சந்தைக்கு இரண்டு புதிய எஸ்யூவி கார்கள் களமிறக்கப்பட இருக்கின்றன.

இந்தியர்களை கவர இரண்டு புதிய எஸ்யூவி கார்களை தயார் செய்யும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

டாடா நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸுக்கு போட்டியாக களமிறங்கும் இந்த நிறுவனம் எதிர்காலத்தில் மஹிந்திராவுடன் கூட்டணி வைத்து கார்களை தயாரிக்க இருக்கின்றது. இதற்காக, 70 ஆயிரம் கோடிக்கும் மேலான முதலீட்டை ஒதுக்கி வைத்துள்ளது. இதில், பாதி அல்லது அதற்கு மேலான தொகையை மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணிக்காக செலவு செய்யப்பட உள்ளது.

இந்தியர்களை கவர இரண்டு புதிய எஸ்யூவி கார்களை தயார் செய்யும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

ஃபோர்டு நிறுவனம், ஈகோஸ்போர்ட் மற்றும் என்டீயோவர் ஆகிய இரண்டு எஸ்யூவி மாடல் கார்களைத்தான் தற்போது இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இதில், ஈகோஸ்போர்ட் எஸ்யூவி ரூ. 8 லட்சத்திலும், என்டீயோவர் ரூ. 25 லட்சத்திற்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Launching Three New SUV’s In India — Investing USD 1 Billion In The Country. Read In Tamil.
Story first published: Tuesday, May 14, 2019, 11:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X