ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், ஃபோர்டு - மஹிந்திரா நிறுவனங்களின் கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது

இந்தியாவில் நேரடி வர்த்தகத்திலிருந்து வெளியேற ஃபோர்டு முடிவு செய்தது. மேலும், 51 சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுவனத்திடம் கொடுத்து கூட்டணி அமைத்தது. இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் கூடிய விரைவில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் விதத்தில், ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணி அதிரடி திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து செயலாற்ற உள்ளன.

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது

அதன்படி, ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் ஏழு புத்தம் புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில், இரண்டு எஸ்யூவி வகை கார்களும், ஒரு எம்பிவி காரும் அடக்கம். இரண்டு எஸ்யூவி மாடல்களில் ஒன்று கியா செல்டோஸ் கார் மார்க்கெட்டை குறிவைத்தும் மற்றொன்று எம்ஜி ஹெக்டர் மார்க்கெட்டை குறிவைத்தும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது

இந்த கூட்டணியின் முதல் கார் மாடலாக சி வகையிலான எஸ்யூவி மாடலாக இருக்கும். இந்த எஸ்யூவியானது மஹிந்திரா W601 என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வரும் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அடிப்படையில் இந்த புதிய மாடல் இருக்கும். இது எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது

மற்றொரு மாடலானது சாங்யாங் டிவோலி எக்ஸ்எல்வி அடிப்படையிலான மற்றுமொரு 7 சீட்டர் மாடலாக இருக்கும். ஏற்கனவே இந்த மாடலானது மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட இருக்கிறது. இதே மாடல் ஃபோர்டு பிராண்டிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது

இந்த புதிய எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர வாய்ப்புள்ளது. அடுத்து மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து புதிய 7 சீட்டர் எம்பிவி ரக கார் மாடலும் இந்த கூட்டணியில் வர இருக்கிறது. இது மஹிந்திரா மராஸ்ஸோ சேஸீயில் கட்டமைக்கப்படும்.

MOST READ: மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது

இந்த கூட்டணி அறிமுகம் செய்ய இருக்கும் மேற்கண்ட மூன்று யுட்டிலிட்டி ரக கார்கள் தவிர்த்து, ஒரு மின்சார கார் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. அதன்படி, ஃபோர்டு ஆஸ்பயர் காரின் மின்சார மாடல் இந்த கூட்டணியில் வரும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford - Mahindra joint venture is planning to launch 7 new car models in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X