480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

ஃபோர்டு மஸ்டாங் அடிப்படையிலான மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் கார் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் ரக கார் மாடல் மஸ்டாங். அமெரிக்காவில் பிரபலமான 'மஸில்' என்ற தனித்துவமான ரகத்திலான ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக மிக நீண்டகாலமாக விற்பனையில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும் விற்பனையில் இருந்த மஸ்டாங் கார் இப்போது உலக அளவில் விற்பனைக்கு வந்துவிட்டது.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்த நிலையில், மஸ்டாங் காரின் அடிப்படையிலான முழுமையான எலெக்ட்ரிஸ் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை ஃபோர்டு உருவாக்கியுள்ளது. ஃபோர்டு மேக் இ என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் பெயரிடப்பட்டுள்ளது.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

மஸ்டாங் அடிப்படையிலான கார் மாடலாக குறிப்பிடப்பட்டாலும், வடிவமைப்பில் க்ராஸ்ஓவர் (செடான் + எஸ்யூவி) ரக மாடலாக மேக் இ உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், ஃபோர்டு மஸ்டாங் பிரியர்கள் மற்றும் உரிமையாளர்கள் இதனை மஸ்டாங் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக பார்க்கமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

எனினும், புதிய ஃபோர்டு மேக் இ காரின் டிசைன் மிக நவீனத்துவமாக இருக்கிறது. ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் மட்டுமே மஸ்டாங் சாயலில் இருக்கிறது. க்ரில் அமைப்பு இல்லாமல், பேனல்கள் மூலமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது. மறைவான கைப்பிடிகள் அமைப்பு, பெரிய அலாய் வீல்கள் இதனை தனித்துவப்படுத்துகிறது.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

புதிய ஃபோர்டு மஸ்டாங் மேக் இ காரில் 15.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லேப்டாப் திரைக்கு இணையான இந்த பெரிய திரை அமைப்பு மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளையும், தகவல்களையும் பெற முடியும் என்பதோடு, பொழுது போக்கு வசதிகளையும் பெற முடியும்.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. பட்டன்கள் அதிகம் இல்லாமல் திரை அமைப்பு மூலமாக கட்டுப்படுத்தும் வகையில் இந்த காரின் இன்டீரியர் உள்ளது. டேஷ்போர்டு நடுப்பகுதியில் நீளவாக்கில் ஏசி வென்ட்டுகள் உள்ளன. வயர்லெஸ் சார்ஜரும் உள்ளது.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்த காரின் இன்டீரியர் மிகவும் தாராள இடவசதியுடன் இருக்கிறது. பெரிய பனோரமிக் வகையிலான சன்ரூஃப் அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதேபோன்று, முன்பற ஜன்னல்கள் அளவில் பெரிதாகவும், பின்புற ஜன்னல்கள் மிக சிறியதாகவும் உள்ளன. பின் இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் உள்ளன.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

பின்புற பூட்ரூம் பகுதியில் மட்டும் 821 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இருக்கையை மடக்கினால் 1,688 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மாற்றிக் கொள்ள முடியும். முன்புறத்திலும் 136 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் பகுதி உள்ளது.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்த காரில் பேட்டரி மற்றும் மின் மோட்டார் திறனை பொறுத்து 5 மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. செலக்ட் என்ற பெயரில் வந்துள்ள விலை குறைவான மாடலுக்கு 43,895 டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலானது ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் 255 எச்பி பவரை வெளிப்படுத்தும். ரியர் வீல் டிரைவ் மாடலின் மின் மோட்டார் 414 என்எம் டார்க் திறனையும், ஆல் வீல் டிரைவ் மாடல் 581 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. அதேபோன்று, ரியர் வீல் டிரைவ் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 6.5 வினாடிகளிலும், ஆல் வீல் டிரைவ் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளிலும் எட்டிவிடும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 338 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

அடுத்து பிரிமீயம் என்ற மாடலுக்கு 50,600 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் இருக்கும் மின் மோட்டார் 282 எச்பி பவரையும், 414 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும். 483 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் ஆல் வீல் டிரைவ் மாடலானது 333 எச்பி பவரையும், 581 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும். 435 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்த காரின் கலிஃபோர்னியா ரூட் 1 மாடலுக்கு 52,400 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேக் இ ஃபர்ஸ்ட் எடிசன் மாடலுக்கு 59,900 டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிரிமீயம் வேரியண்ட்டில் இருக்கும் அதே பேட்டரி, மின் மோட்டார்கள்தான் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், அதே அளவு சக்தியை வெளிப்படுத்தும். கூடுதல் சிறப்பம்சங்களுக்காக விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

480 கிமீ ரேஞ்ச்... பவர்ஃபுல்லான ஃபோர்டு மேக்- இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்!

இதுதவிர்த்து, மேக் இ ஜிடி என்ற சக்திவாய்ந்த புதிய மாடல் பின்னர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் குறித்த தகவல்களை ஃபோர்டு கார் நிறுவனம் வெளியிடவில்லை. இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 4 வினாடிகளுக்குள் கடந்து விடும் திறன் வாய்ந்ததாகவும், 400 கிமீ ரேஞ்ச் கொண்டதாகவும் இருக்கும். இந்த கார் டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has revealed the Mustang Mach-E all electri SUV and it will take on Tesla's Model Y electric SUV in all aspects.
Story first published: Monday, November 18, 2019, 11:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X