ஃபோர்டு மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்!

ஃபோர்டு மஸ்டாங் மேக்- இ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்!

அமெரிக்காவின் மிகவும் தனித்துவமான மஸில் ரக கார் ஃபோர்டு மஸ்டாங். இதன் அடிப்படையிலான புதிய எலெக்ட்ரிக் காரை ஃபோர்டு கார் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. ஃபோர்டு மஸ்டாங் அடிப்படையிலான மாடலாக இருந்தாலும், வடிவமைப்பில் முற்றிலும் மாறுபட்ட ரகத்தில் வர இருக்கிறது.

ஃபோர்டு மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்!

ஃபோர்டு மஸ்டாங் மேக்- இ என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் கூபே மற்றும் எஸ்யூவி காரின் அடிப்படையிலான க்ராஸ்ஓவர் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஃபோர்டு மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்!

வரும் 2021ம் ஆண்டு ஃபோர்டு மேக் இ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கார் டிசைன் மிகவும் நவீன வடிவமைப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்!

முன்புறத்தில் சில மஸ்டாங் காரின் டிசைன் சாயல்கள் இருந்தாலும், எலெக்ட்ரிக் கார் என்பதால், க்ரில் அமைப்பு முழுவதுமாக பேனலால் மூடப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் இதற்கும் மஸ்டாங் காருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத வகையில் வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

ஃபோர்டு மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்!

இந்த காரில் 15.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் உள்ளது. அதாவது, டெஸ்லா கார்களுக்கு நிகரானதாக இது தொழில்நுட்ப அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஃபோர்டு மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்!

இந்த காரின் முன்புற பூட்ஸ்பேஸில் 136 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைக்கும் இடவசதியும், பின்புறத்தில் 821 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும் இருக்கும். இருக்கையை மடக்கி பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை 1,688 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மாற்ற முடியும்.

ஃபோர்டு மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்!

புதிய ஃபோர்டு மஸ்டாங் மேக் இ காரில் 255 எச்பி பவரையும், 414 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மின் மோட்டார் ரியர் வீல் டிரைவ் மாடலில் கிடைக்கும். இதன் ஆல் வீல் டிரைவ் மாடல் 581 என்எம் டார்க் திறனை வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை ரியர் வீல் டிரைவ் மாடல் 6.5 வினாடிகளிலும், ஆல் வீல் டிரைவ் மாடல் 5.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த மாடலின் பேட்டரியை சார்ஜ் செய்தால் 338 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதற்கு 43,895 டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்!

பிரிமீயம் மாடலுக்கு 50,600 டாலர்கள் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 282 எச்பி பவரையும், 414 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மின் மோட்டார் உள்ளது. இந்த ரியர் வீல் டிரைவ் மாடலானது 483 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் ஆல் வீல் டிரைவ் மாடல் 333 எ:்பி பவரையும், 581 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆல் வீல் டிரைவ் மாடல் 435 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

Source: Autocarindia

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
According to reports, Ford is likely to launch Mustang-inspired Mach-E electric car in India by 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X