ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார் அறிமுகம் : முக்கிய விபரங்கள்!

ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு ஆட்டோமொபைல் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார் அறிமுகம் : முக்கிய விபரங்கள்!

ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார் ரேஸ் டிராக்குகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சூப்பர் கார் மாடலாக வந்துள்ளது. சாதாரண சாலைகளில் இயக்க முடியும். இந்த கார் அதிவேகத்தில் செல்லும் விதத்தில் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் டிசைன் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்சினுடன் ஃபோர்டு எஞ்சினியர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார் அறிமுகம் : முக்கிய விபரங்கள்!

ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் காரில் 3.5 லிட்டர் ட்வின் டர்போ வி-6 ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 700 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. தற்போதைய ஃபோர்டு ஜிடி காரைவிட 50 பிஎச்பி கூடுதல் பவரை அளிக்கும் திறனை இந்த காார் பெற்றிருக்கிறது.

ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார் அறிமுகம் : முக்கிய விபரங்கள்!

இந்த காரில் கூரையில் ஏர் இன்டேக் ஸ்கூப், ஏர் கூலருக்கான வாட்டர் ஸ்பிரேயர் சிஸ்டம் என பல விசேஷ தொழில்நுட்பங்கள் உள்ளன. சாதாரண சாலையில் பயன்படுத்தும் ஜிடி காரைவிட இந்த கார் 400 சதவீதம் கூடுதல் டவுன் ஃபோர்ஸை வழங்கும் திறனை பெற்றுள்ளது.

ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார் அறிமுகம் : முக்கிய விபரங்கள்!

இந்த காரில் டிரைவிங் மோடிற்கு தக்கவாறு, கிரவுண்ட் கிளியரன்ஸை கூட்டி குறைப்பதற்கான விசேஷ தொழில்நுட்பமும் உள்ளது. இதனால், கார் அதிக நிலைத்தன்மையுடன் பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும்.

ஃபோர்டு ஜிடி எம்கே-II காரில் 19 அங்குல மிச்செலின் டயர்கள், கார்பன் செராமிக் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, இதில், விசேஷமான பயணி இருக்கையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார் அறிமுகம் : முக்கிய விபரங்கள்!

இந்த காரில் 2ஜி லேட்டரல் க்ரிப், டியூவல் விங்குகள், புதிய ஸ்பிளிட்டர் மற்றும் டிஃபியூசர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த கார் சிறப்பான ஏரோடைனமிக்ஸை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார் அறிமுகம் : முக்கிய விபரங்கள்!

மொத்தமாக 45 ஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த கார் தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.8.22 கோடி மதிப்புடையதாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has unveiled a new track-only, limited edition, ultra-high-performance supercar at the Goodwood Festival of Speed. The company calls it the GT Mk II, and has designed it to be a no-holds-barred machine built only for the track.
Story first published: Saturday, July 6, 2019, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X