வெறும் 999 ரூபாயில் கார்களுக்கான முழு பரிசோதனை திட்டம்... சென்னையில் கோ-பம்பர் நிறுவனம் அறிமுகம்!

வெறும் 999 ரூபாய் என்ற மிக குறைவான கட்டணத்தில் கார்களை முழுமையாக பரிசோதித்து விரைவாக சர்வீஸ் செய்து தரும் புதிய திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளது கோ- பம்பர் நிறுவனம். இந்த அசத்தல் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்து பரிசோதனைகள் மற்றும் விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

நன்மதிப்பு

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோ- பம்பர் நிறுவனம் கார் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் துறையில் மிக பிரபலமான நிறுவனமாக மாறி இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் கார் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் மையங்களை நடத்தி வருகிறது. குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

சென்னைக்கு புதிய ஆஃபர்

இந்த நிலையில், கார்களை முழுமையாக பரிசோதித்து மிக விரைவாக டெலிவிரி கொடுக்கும் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் என்ற புதிய திட்டத்தை ரூ.999 என்ற மிக மிக குறைந்த கட்டணத்தில் சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளது கோ- பம்பர் நிறுவனம்.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

24 பாயிண்ட் செக்கப்

இந்த திட்டத்தின் கீழ் கார்களின் ஏசி சிஸ்டம், சஸ்பென்ஷன் அமைப்பு, ஸ்டீயரிங் சிஸ்டம், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களின் இயக்கம் குறித்து 24 விதமான முழுமையான பரிசோதனைகளை மேற்கொண்டு, அதற்கான ஆய்வு தரவுகளை வாகனத்தின் ஆரோக்கிய நிலை குறித்த அறிக்கையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

இந்த பரிசோதனையின் அடிப்படையில் காரில் இருக்கும் பழுதுகள் மற்றும் இதர பிரச்னைகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்படும். வாடிக்கையாளர் விருப்பம் தெரிவித்த பின்னர் சம்பந்தப்பட்ட பழுது சரிசெய்து தரப்படும் அல்லது உதிரிபாகங்கள் மாற்றித் தரப்படும் என்று கோ- பம்பர் தெரிவித்துள்ளது.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

ஃபோம் வாட்டர் வாஷ்

இந்த திட்டத்தின் கீழ் காருக்கான 24 விதமான பரிசோதனைகள் மட்டுமின்றி, ஃபோம் வாட்டர் வாஷ் என்ற முறையில் கார் மிக சுத்தமான முறையில் கழுவி தருவதோடு, உட்புறம் வாக்கம் க்ளீனர் மூலமாக முழுமையாக தூசி, தும்பட்டிகள் இல்லாத வகையில் சுத்தம் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

எஞ்சின் ஆயில் டாப் அப்

அத்துடன், காருக்கு எஞ்சின் ஆயில் மற்றும் கூலண்ட் அளவு குறைந்து இருந்தால் அதனை டாப் அப் செய்து தரப்படும் என்றும் கோ-பம்பர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்துமே அந்த ரூ.999 (வரிகள் தனி) என்ற கட்டணத்தில் செய்து தரப்படும். பழுது நீக்குதல் மற்றும் உதிரிபாகங்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

சர்வீஸ் கால அளவு

இந்த எக்ஸ்பிரஸ் சர்வீஸ் பேக்கேஜ் திட்டத்தின் அடிப்படையில் காரை பரிசோதித்து தருவதற்கு 4 மணிநேரம் தேவைப்படும். காரில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரிய வந்தால், கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளப்படும் என்று கோ-பம்பர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

ஒரிஜினல் பாகங்கள்

மேலும், பழுது நீக்கும் பணிகளுக்காக சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்களின் ஒரிஜினல் உதிரிபாகங்கள் அல்லது அதற்கு இணையான தரமான உதிரிபாகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கோ- பம்பர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

உடனுக்குடன் தகவல்

இதுதவிர்த்து, கார் சர்வீஸ் செய்யும் ஒவ்வொரு நிலை குறித்தும் நிகழ்நேர முறையில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பப்படும். மேலும், படங்களும் சான்றாக வழங்கப்படும். இதன்மூலமாக, 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் கார் சர்வீஸ் பணிகள் செய்து தரப்படும் என்று கோ-பம்பர் தெரிவித்துள்ளது.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

சாலை அவசர உதவி சேவைகள்

இந்த எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம் தவிர்த்து, சாலையில் கார்கள் பழுது ஏற்பட்டு நின்றால், அதனை எடுத்து வருவதற்கான அவசர உதவி சேவை, பழுது நீக்கும் சேவை, காரின் பாடியில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்து தருதல், வீட்டிலேயே கார் கழுவி தரும் சேவை, டயர் மற்றும் பேட்டரி மாற்றித் தரும் சேவைகளை கோ-பம்பர் நிறுவனம் வழங்குகிறது.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

ஏராள திட்டங்கள்

கார்களின் கண்டிஷனை பொறுத்து பல்வேறு திட்டங்கள் மற்றும் கட்டணங்கள் அடிப்படையில் கார் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் திட்டங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும் என கோ- பம்பர் தெரிவித்துள்ளது. காரை வீட்டிலிருந்து சர்வீஸ் மையத்திற்கு எடுத்து வருவதற்கும், திரும்ப கொண்டு வந்து ஒப்படைப்பதற்கும் கட்டணமில்லா சேவையையும் கோ-பம்பர் வழங்குகிறது.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

கட்டணம் செலுத்தும் வசதி

கார் சர்வீஸ் செய்வதற்கான கட்டணங்களை ஆன்லைன் முறையிலும், பணமாகவும், டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்துவதற்கான வசதியும் உள்ளது.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

ஸ்மார்ட்ஃபோன் செயலி

கோ-பம்பர் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக நிறுவனத்தின் சமீபத்திய சலுகைகள் மற்றும் சாலை அவசர கால உதவிகளையும் பெற முடியும். மேலும், இந்த செயலி மூலமாக கோ-பம்பர் நிறுவனத்தின் ஆலோசகருடன் வாடிக்கையாளர்கள் உடனடியாக பேசி தீர்வு பெற முடியும். நண்பர்களை அறிமுகப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லா சேவை திட்டத்தை வெல்லும் வாய்ப்புள்ளது.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

தொடர்புக்கு...

கோ-பம்பர் நிறுவனத்தின் கார் பராமரிப்பு திட்டங்கள் குறித்து மேலதிக தகவல்களை பெறுவதற்கு இங்கே க்ளிக் செய்து எளிதாக பெறலாம்.

வெறும் ரூ.999-ல் கார்களுக்கான எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டம்... சென்னையில் கோ-பம்பர் அறிமுகம்!

மதிப்புமிக்க ஆஃபர்

வெறும் ரூ.999 என்ற கட்டணத்தில் 24 விதமான பரிசோதனைகள் மற்றும் கட்டணமில்லாமல் காரை எடுத்துச் சென்று வீட்டிற்கு திரும்ப கொண்டு வந்து தரும் கோ-பம்பர் நிறுவனத்தின் சேவை நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாகவே கருத முடியும். கோ-பம்பர் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் எளிதாக பெறுவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
 
Tamil
English summary
Chennai based company, Gopumbr has announced an Express Car Service offer that has more bang for the buck — to say the least. Priced at Rs 999 (plus tax), the Express Car Service includes a comprehensive 24-point inspection, a diagnosis and vehicle health report, and an engine oil and coolant top-up. The first 100ml on the engine oil and 50ml on the coolant is included in the price.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X