2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டாப்-ட்ரெண்டிங் தேடல்களின் விபரங்களை உலகம் முழுவதும் நாடுகளின் வாரியாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் அதிக பேரால் தேடப்பட்ட இந்திய சந்தை கார்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

10. டொயோட்டா க்ளான்ஸா

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த லிஸ்ட்டில் 10வது இடத்தில் டொயோட்டா க்ளான்ஸா மாடல் உள்ளது. டொயோட்டா-சுசுகி நிறுவனங்களின் கூட்டணியில் உருவான முதல் காராக இந்த வருடத்தின் துவக்கத்தில் அறிமுகமான இந்த கார் சிறந்த முறையில் விற்பனையாகும் இரண்டாவது ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக விளங்குகிறது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

மாருதி பலேனோவின் டிசைன் மற்றும் என்ஜின் அமைப்புகளை அப்படியே கொண்டிருக்கும் இந்த க்ளான்ஸா காருக்கு டொயோட்டா நிறுவனம் பல வேரியண்ட்களையும் சலுகை மற்றும் தள்ளுபடிகளையும் அறிவித்திருந்தது தான் இந்த காரை லிஸ்ட்டில் பத்தாவது இடத்திற்கு வர வைத்துள்ளது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

9. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 மற்றும் க்ராண்ட் ஐ10 நியோஸ்

க்ராண்ட் ஐ10 மாடலின் விற்பனையை கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறுத்திவிட்ட ஹூண்டாய் நிறுவனம் க்ராண்ட் ஐ10 காருக்கு பதிலாக நியோஸ் என்கிற பெயரில் இதன் அடுத்த தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

முந்தைய மாடலை விட பல அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் களம் புகுந்த நியோஸ் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

8. ரெனால்ட் ட்ரைபர்

பிரெஞ்ச் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்டில் இருந்து கம்பேட்-எம்பிவி பிரிவில் அறிமுகமான ட்ரைபர் மாடலுக்கு அதிகளவில் சலுகைகளும், அப்டேட்டான தொழிற்நுட்பங்களும் குறைந்த அளவில் விலையும் நிர்ணயிக்கப்பட்டதால் விற்பனையில் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வந்த ரெனால்ட் நிறுவனத்தை ஓரளவுக்கு நிலை நிறுத்தியது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இதனால் ட்ரைபர் மாடலின் மீது ரெனால்ட் நிறுவனம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. இதன் ஆரம்ப விலையை இந்திய எக்ஸ்ஷோருமில் ரூ. 4.95 லட்ச ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

7. ஹோண்டா சிவிக்

சிவிக், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனித்துவமான மாடல். இதனால் இந்த மாடலின் புதிய தலைமுறை மாடல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் ஹோண்டா நிறுவனம் சமீபத்திலும் சிவிக்கின் அடுத்த தலைமுறை கார் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இந்த புதிய ஹோண்டா சிவிக் மாடலில் 1.8 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. செடான் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிவிக் மாடல், தனது பிரிவில் உள்ள மற்ற அனைத்து கார்களையும் முந்தி விற்பனையில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

6. கியா செல்டோஸ்

தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் செல்டோஸ் மாடலின் மூலம் தான் கால் பதித்தது. அறிமுகமான சில நாட்களையே இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த கார் அறிமுகமானதில் இருந்து அனைத்து மாதங்களிலும் 14,000 யூனிட்கள் விற்பனையாகி விடுகிறது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இதன் அபரிதனமான வளர்ச்சிக்கு, இந்த காரில் உள்ள ஷார்ப் டிசைன், பல சிறப்பம்சங்களை கொண்ட ஸ்போர்டி கேபின் மற்றுன் அதிக சக்தி வாய்ந்த என்ஜின் தான் காரணம். இந்த ஒரே ஒரு காரின் விற்பனையினால் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நான்காவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

5. மஹிந்திரா எக்ஸ்யூவி300

மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்திய கடைசி கம்பேக்ட்-எஸ்யூவி மாடல் இந்த எக்ஸ்யூவி300 தான். பெட்ரோல், டீசல் என இரு என்ஜின் தேர்வுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் போன்ற முன்னணி மாடல்களுடன் போட்டியிட்டு வருகிறது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இந்த மாடலின் எலக்ட்ரிக் வெர்சனை தயாரிக்கும் பணியிலும் மஹிந்திரா நிறுவனம் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதனால் எக்ஸ்யூவி300 மாடலின் இந்த எலக்ட்ரிக் வெர்சன் கார்கள் சோதனை ஓட்டங்களில் அவ்வப்போது ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

4. எம்ஜி ஹெக்டர்

இந்திய மார்க்கெட்டில் இந்த ஆண்டில் அறிமுகமான மற்றொரு நிறுவனம் எம்ஜி மோட்டார்ஸ். இதன் முதல் இந்திய அறிமுக கார் தான் எம்ஜி ஹெக்டர். மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் களமிறங்கிய இந்த கார் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹெரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 போன்ற தனது பிரிவில் உள்ள மற்ற மாடல்களுடன் போட்டியிட்டு வருகிறது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

ஆனால் இந்த காருக்கு இந்தியாவில் தேவை அதிகரிக்க, வாடிக்கையாளர் காத்திருப்பு காலத்தை சுமார் 4 மாத வரையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் நீட்டித்துள்ளது. எக்ஸ்ஷோரூமில் இந்த கார் ரூ.12.48 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read:மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

3. டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் கூகுள் நிறுவனத்தின் இந்த லிஸ்ட்டில் இருப்பது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஃபார்ச்சூனர் சிறப்பாக விற்பனையான மாடலாக இருந்தாலும், இதன் விற்பனை கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் இல்லை.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இந்த கார் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இரு என்ஜின் தேர்வுகளுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு, 4x4 ட்ரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read:ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

2. ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் நிறுவனத்தில் சமீபத்தில் வெளியான மாடல் கார் வென்யூ. இந்திய சந்தையில் அறிமுகமான முதல் கம்பேக்ட்-எஸ்யூவி காரான வென்யூ, 'ப்ளூ லிங்' இணைப்பு தொழிற்நுட்பத்துடன் அறிமுகமான முதல் காராகவும் விளங்குகிறது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

ஹூண்டாய் நிறுவனம் வென்யூ காருக்கு 1.2 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வுகளை வழங்கியுள்ளது. இந்த மூன்று என்ஜின் தேர்வுகளும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்டிற்கு மட்டும் கூடுதலாக 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Most Read:சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

1. மாருதி சுசுகி பலேனோ

இந்திய மார்க்கெட்டில் அனைத்து மாதங்களிலும் கணிசமான விற்பனை எண்ணிக்கையை பெறும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக மாருதி பலேனோ மாடல் விளங்குகிறது. இதன் விற்பனை தற்சமயம் அவ்வளவாக இல்லாவிடினும் கூகுளில் இந்த வருடத்தில் அதிக நபர்களால் தேடப்பட்ட காராக பலேனோ கார் தான் உள்ளது.

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இதற்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்திய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் வெர்சனும் ஒரு காரணமாக இருக்கலாம். இதன் விலை இந்திய சந்தையில் ரூ.5.59 லட்சத்தில் இருந்து ரூ.8.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Rank Model
1 Maruti Suzuki Baleno
2 Hyundai Venue
3 Toyota Fortuner
4 MG Hector
5 Mahindra XUV300
6 Kia Seltos
7 Honda Civic
8 Renault Triber
9 Hyundai Grand i10
10 Toyota glanza

Most Read:2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

கூகுளின் இந்த லிஸ்ட்டில் டாடா ஹெரியர், டாடா அல்டுராஸ், ஹூண்டாய் கோனா இவி மற்றும் எம்ஜி இ-இசட்எஸ் எஸ்யூவி கார்கள் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. அடுத்த ஆண்டு டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போ நடக்கவுள்ளதால் பல புதிய கார்கள் அறிமுகமாகவுள்ளன. இதனால் அடுத்த ஆண்டில் எந்தெந்த கார் இந்த லிஸ்ட்டில் வரப்போகிறது என்பதை காண ஆர்வமாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Google's Top-Trending Cars In India for 2019 - Cover
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X