ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிட்சைஸ் செடான் கார் ரகத்தில் ஹோண்டா சிட்டி கார்தான் விற்பனையில் முன்னிலை வகித்தது. ஆனால், ஹோண்டா சிட்டி கார் மார்க்கெட்டை மாருதி சியாஸ் கார் வெகுவாக பதம் பார்த்துவிட்டது. மாருதி சியாஸ் காரை விஞ்ச முடியாமல் ஹோண்டா சிட்டி தவித்து வருகிறது.

ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

மேலும், அண்மையில் வந்த புதிய மாருதி சியாஸ் கார் மாடல் ஹோண்டா சிட்டி கார் மார்க்கெட்டை வெகுவாக பாதித்துள்ளது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கூடுதல் அம்சங்களுடன் ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் ZX என்ற டாப் வேரியண்ட் தற்போது களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கு ரூ.12.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ZX என்ற டாப் வேரியண்ட் பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது.

ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

மேலும், ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் என்ற இரண்டு புதிய வண்ணங்களும் ஹோண்டா சிட்டி காரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரியர் பார்க்கிங் சென்சார்களும் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

ஹோண்டா சிட்டி பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் வந்துள்ள இசட்எக்ஸ் டாப் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள், ஸ்பாய்லர் லைட்டுகள் சிறப்பு அம்சங்களாக கொடுக்கப்படுகின்றன.

ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஒன் டச் முறையில் மூடிக் கொள்ளும் வசதியுடன் கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 6.9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளுடன் வந்துள்ளது. இந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன.

ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் SV, V, VX மற்றும் ZX ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல், டீசல் மாடல்கள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றன. அதேபோன்று, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் 6 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனும், பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கிடைக்கிறது.

ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

மாருதி சியாஸ் காருக்கு கடும் சவாலை தரும் மாடலாக தொடர்ந்து ஹோண்டா சிட்டி இருக்கும். ஏனெனில், இந்த புதிய டாப் வேரியண்ட் நிச்சயம் ஹோண்டா சிட்டி பிரியர்களையும், வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Honda Cars India has introduced a new petrol variant to its City sedan offering in the Indian market. The Honda City now comes with a manual transmission on its top-spec ZX variant. The new Honda City ZX MT petrol variant is priced at Rs 12.75 lakh, ex-showroom (India).
Story first published: Thursday, January 10, 2019, 15:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X