தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா தனது பிரபலமான மாடல் கார்களுக்கு நவம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ், உத்தரவாதம் நீட்டிப்பு மற்றும் பராமரிப்பிற்கான பேக்கேஜ் போன்றவை மாடல்கள் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து அடங்கியுள்ளன.

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா நிறுவனம் பழைய காரில் இருந்து புதிய அமேஸ் காருக்கு மாறுவோருக்கு ரூ.30,000 மதிப்புள்ள எக்ஸ்சேன்ஞ் போனஸையும் உத்தரவாத காலத்தை 4வது மற்றும் 5வது வருடம் வரை நீட்டித்தும் அறிவித்துள்ளது. இதுதவிர முதன்முதலாக புதிய அமேஸ் கார் வாங்குவோருக்கு மூன்று வருடத்திற்கான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் மற்றும் அதே 4வது மற்றும் 5வது வருடம் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை காலத்தையும் வழங்கியுள்ளது.

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

அமேஸின் ஏஸ் எடிசனுக்கு ரூ.30,000 மதிப்பில் எக்ஸ்சேன்ஞ் போனஸையும், இந்த எக்ஸ்சேன்ஞ் போனஸை தேர்வு செய்யாதவர்களுக்கு மூன்று வருடத்திற்கான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்ததையும் அறிவித்துள்ளது.

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா ஜாஸ்

இந்த மாடல் கார் ரூ.50,000 வரை சலுகைகளை இந்த நவம்பர் மாதம் முடியும் வரை பெறுகிறது. இதில் பழைய காரை டீலர்ஷிப்களிடம் விற்பதால் கிடைக்கும் ரூ.25,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸும் அடங்கும். மேலும் இந்த சலுகை அனைத்து ஜாஸ் மாடலின் வேரியண்ட்டிற்கும் பொருந்தும்.

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

இந்த ஜாஸ் மாடலின் நான்காம் தலைமுறை கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு மிக குறைவு என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இதுகுறித்த முழுமையான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் குறித்த ஏமாற்றமான தகவல்!

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா டபிள்யூஆர்-வி

டபிள்யூஆர்-வி கம்பெக்ட்-கிராஸ்ஓவர் மாடலுக்கு ஹோண்டா நிறுவனம் ரூ.45,000 வரையில் சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் ரூ.25,000 மதிப்பிலான பணம் தள்ளுபடி, ரூ.20,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ் போன்றவை அடங்கியுள்ளன. இந்த சலுகைகள் டபிள்யூஆர்-வி மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா சிட்டி

ஹோண்டா நிறுவனத்தின் சிறந்த முறையில் விற்பனையாகும் செடான் மாடலாக உள்ள சிட்டி காருக்கு ரூ.62,000 வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.32,000க்கு பணம் தள்ளுபடி, ரூ.30,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ் போன்றவை அடங்குகின்றன.

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

தற்சமயம் ரூ.9.81 லட்சத்திலிருந்து ரூ.14.16 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம்களில் விற்கப்பட்டு வரும் இந்த காரின் அனைத்து மாடல்களுக்கும் மேற்கூறப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பொருந்தும். பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட இந்த கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதன் முழு தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

புதிய ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா பிஆர்-வி

பிஆர்-வி எம்பிவி மாடலுக்கு ரூ.1.1 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பழைய மாடல் காரை புதிய பிஆர்-வி மாடலுக்கு மாற்றுவதன் மூலம் கிடைக்கும் ரூ.50,000ற்கான எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரு.33,500க்கு பணம் தள்ளுபடி மற்றும் ரூ.26,500 மதிப்பிலான கார் பாகங்கள் அடங்குகின்றன. பிஆர்-வி மாடலின் எஸ்எம்டி வேரியண்ட்டிற்கு ரு.50,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸை தவிர்த்து வேறெந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா சிவிக்

ஹோண்டா நிறுவனம் ரூ.2.5 லட்சம் வரையிலான சலுகைகளை இந்த நவம்பர் மாதத்தில் சிவிக் செடான் காருக்கு அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த காரின் டீசல் வேரியண்ட் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பணம் தள்ளுபடியையும், பெட்ரோல் விசிவிடி வேரியண்ட் ரூ.2.0 லட்ச மதிப்பில் பணம் தள்ளுபடியையும் பெறுகின்றன.

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

மற்ற பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ.75,000க்கு பணம் தள்ளுபடியும் ரூ.25,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்த சலுகைகளை விஎக்ஸ், சிவிடி, இசட்எக்ஸ் சிவிடி வேரியண்ட்கள் பெறுகின்றன. மேலும் ஹோண்டா நிறுவனம் தனிப்பட்ட திரும்ப பெறும் திட்டத்தையும் சிவிக் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா சிஆர்-வி

ஹோண்டா நிறுவனத்தின் இந்திய லைன்-அப் மாடல்களின் தனித்துவமான காராக விளங்கும் சிஆர்-வி-க்கு ரூ.5 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாடலின் டீசல் வேரியண்ட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சலுகையில், சிஆர்-வி 2டபிள்யூடி சிவிடி டீசல் வேரியண்ட் ரூ.4 லட்சம் வரையிலான பணம் தள்ளுபடியையும், சிஆர்-வி 4டபிள்யூடி வேரியண்ட் ரூ.5 லட்சம் வரையிலான பணம் தள்ளுபடியையும் பெறுகின்றன.

தீபாவளி முடிந்த பின்னரும் சலுகைகளை அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா நிறுவனத்தின் இந்த நவம்பர் மாத சலுகைகளுக்கு மிக முக்கிய காரணம், பிஎஸ்6 கார்களின் அறிமுகத்திற்கு முன்பாகவே அனைத்து பிஎஸ்4 தயாரிப்புகளையும் விற்றாக வேண்டும் என்ற நோக்கம் தான். இந்த சலுகைகளால் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை இந்த மாதத்தில் சிறிது அதிகமாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Discount Offers & Benefits For November: Available Across Models
Story first published: Tuesday, November 5, 2019, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X