புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய ஹோண்டா எச்ஆர்வி காம்பேக்ட் ரக எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் அதிக மவுசு இருந்து வருகிறது. இதனால், இந்த ரகத்தில் புதிய மாடல்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது ஹோண்டா நிறுவனமும் புத்தம் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை களமிறக்க உள்ளது.

Image Courtesy:Quickshift

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த நிலையில், புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி தற்போது இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படத்தை குயிக்ஷிஃப்ட் வெளியிட்டுள்ளது. சோதனை ஓட்டத்தின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சில மாற்றங்களை செய்து சந்தைக்கு கொண்டு வரப்படும்.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

பிற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்கள் போல அல்லாமல், இந்த புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியின் டிசைன் சற்று வேறுபட்டதாக இருக்கிறது. அதாவது, கூபே டிசைன் தாத்பரியங்களை கொண்ட க்ராஸ்ஓவர் ரக மாடல் போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. முகப்பில் ஹோண்டா இலட்சினையுடன் கூடிய க்ரோம் க்ரில் அமைப்பு அலங்கரிக்கிரது. பம்பர் மிக வலிமையாக தோற்றத்தை தருகிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

பக்கவாட்டில் பெரிய வீல் ஆர்ச்சுகள் காருக்கு கம்பீரத்தை அளிக்கிறது. இதில், 17 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதன் கூரை அமைப்பு பின்புறம் தாழ்ந்து செல்வது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருக்கும் எஞ்சின் தேர்வுகள் குறித்த விபரம் இல்லை. எனினும், ஹோண்டா சிவிக் காரில் பயன்படுத்தப்படும் எஞ்சின் தேர்வுகள் இதிலும் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த காரில் 140 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும். அதேபோன்று, 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த காரில் இன்டீரியர் மிக தரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, சன்ரூஃப், டியூவல் ஸோன் கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றிருக்கும். டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட்பெல்ட் ரிமைன்டர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு நுட்பங்களும் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியானது நிஸான் கிக்ஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும். பிஆர்வி மற்றும் சிஆர்வி ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles
English summary
The Honda HR-V has been spotted testing in India. The Honda HR-V is a premium compact SUV that is due to be launched by the festive season in the Indian market. It has now been spotted while undergoing camouflaged testing.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X