தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஹோண்டா களமிறக்கும் புதிய கார் இதுதான்: சிறப்பு தகவல்!

ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கும் புதிய ஹெச்ஆர்வி கார் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஹோண்ட களமிறக்கும் புதிய கார் இதுதான்: சிறப்பு தகவல்!

ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தும் விதமாக, அதன் அனைத்து புதிய எஸ்யூவி மாடல் கார்களையும் அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில், சிவிக், சிஆர்வி மற்றும் அமேஸ் ஆகிய மாடல்களை அந்த நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. மேலும், கூடுதலாக ஹெச்ஆர்வி, புதிய சிட்டி மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிஆர்வி மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது.

தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஹோண்ட களமிறக்கும் புதிய கார் இதுதான்: சிறப்பு தகவல்!

இந்நிலையில், அடுத்ததாக ஹெச்ஆர்-வி மாடலைத் தான் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. ஹோண்டா ஹெச்ஆர்-வி கார் ஏற்கனவே வெளிநாடுகளில், வெஸல் மற்றும் எக்ஸ்ஆர்வி என்ற பெயரில் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஹோண்ட களமிறக்கும் புதிய கார் இதுதான்: சிறப்பு தகவல்!

அந்தவகையில், தற்போதைய தலைமுறை ஹெச்ஆர்-வி கார் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து பல்வேறு நாடுகளில் விற்பனையாகி வருகின்றது. ஆனால், இந்த காரில் சிறியளவிலான அப்கிரேஷனை ஹோண்டா நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு மேற்கொண்டது. அவ்வாறு அப்கிரேட் செய்யப்பட்ட காரைத் தான், அந்த நிறுவனம் டெல்லியில் நடைபெற்ற டீலர்களுக்கான நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியது.

READ MORE: ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஹோண்ட களமிறக்கும் புதிய கார் இதுதான்: சிறப்பு தகவல்!

இந்த புதிய ஹோண்டா ஹெச்ஆர்-வி கார் அந்த நிறுவனத்தின் சிஆர்-வி மற்றும் பிஆர்-வி லைன் அப்பில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா, டாடாவின் ஹாரியர் உள்ளிட்ட சில மாடல்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ளது.

தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஹோண்ட களமிறக்கும் புதிய கார் இதுதான்: சிறப்பு தகவல்!

ஹெச்ஆர்-வி காரின் ஸ்டைல் ஏரோடைனமிக் மற்றும் கூப் ரகத்தில் காட்சியளிக்கின்றது. அந்த வகையில் காரின் நீளம் 4,295mm ஆகவும், அகலம் 1,777mm ஆகவும், உயரம் 1,605 ஆகவும் இருக்கின்றது. அதேபோன்று, 2,610mm வீல் பேஸ் மற்றும் 180mm கிரவுண்ட் கிளியரன்ஸை இந்த கார் கொண்டுள்ளது.

தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஹோண்ட களமிறக்கும் புதிய கார் இதுதான்: சிறப்பு தகவல்!

ஹோண்டா நிறுவனத்தின், இந்த புத்தம் புதிய காரில் தொழில்நுட்ப வசதிகளாக, 7இன்ச் டச்ஸ்கிரீந் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், பேட்டில் சிஃப்டர்ஸ், ஆட்டோமேடிக் ஏர் கன்டிஷனர், லெதர் அப்ஹோல்டரி மற்றும் 8 வழிகளில் மாற்றிக்கொள்ளும் டிரைவர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், எல்இடி மின்விளக்குகள், 17இன்ச் கொண்ட அலாய் வீல், மல்டிபிள் ஏர்பேக்ஸ் மற்றும் இபிடி வசதியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஹோண்ட களமிறக்கும் புதிய கார் இதுதான்: சிறப்பு தகவல்!

மேலும், 2019 ஹோண்டா ஹெச்ஆர்-வி கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றது. அந்த வகையில், 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 141 பிஎஸ் பவரையும், 174 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேபோன்று, 1.6 லிட்டர் டீசல் எஞ்ஜின் 120 பிஎல் பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் டீசல் எஞ்ஜினுக்கும், சிவிடி ஆப்ஷன் பெட்ரோல் எஞ்ஜினுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

READ MORE: மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஹோண்ட களமிறக்கும் புதிய கார் இதுதான்: சிறப்பு தகவல்!

பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் அதிக விலையைக் கொண்டிருப்பதால், பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்ட ஹெச்ஆர்-வி கார் மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஹோண்டா சிவிக் மாடல் காரில் 80 சதவீதம் பெட்ரோல் எஞ்ஜினுக்கே வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவும் அந்த நிறுவனம் பெட்ரோல் எஞ்ஜினை இந்தியாவில் அறிமுகம் செய்ய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த கார் நடாப்பாண்டின் இறுதி அல்லது வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda HRV To Borrow Petrol & Diesel Engine Options From Civic. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X